PBKS vs SRH, IPL 2024: நிதீஷ் ரெட்டி அதிரடியில் 182 ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ்! யார் அந்த ஆந்திர புயல்?

சன்ரைசர்ஸ் – பஞ்சாப் அணி மோதல் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 23ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீசுவதென அறிவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அதிரடி தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் … Read more

சிஎஸ்கேவின் சூப்பர் ஹீரோ, அவரு போடும் ஸ்கெட்ச் மிஸ் ஆகாது! கேமரா முன்னால் அதிகம் வரமாட்டார்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஆண்டுகளாக கொடி கட்டி பறக்கும் ஒரு அணியாக இருப்பதற்கு அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ஒரு காரணம். அவர் ஐபிஎல் தொடங்கிய 2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். ஆனால், அடுத்த ஆண்டே அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற ஸ்டீபன் பிளெமிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் பொறுப்பேற்றார். 2009 ஆம் ஆண்டு முதல் … Read more

சிவம் துபே முதல் மயங்க் யாதவ் வரை! டி20 உலக கோப்பையில் இடம் பெரும் இளம் வீரர்கள்!

T20 Worldcup 2024: கடந்த வருடம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி பைனலில் தோல்வி அடைந்து கோப்பையை வெல்ல தவறியது. இதனால் ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பையை எப்படியாவது வெல்ல வேண்டும் என்று பிசிசிஐ பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் டி20 உலக கோப்பை காண இந்திய அணியை தேர்ந்தெடுப்பதில் தற்போது கவனம் சென்று வருகிறது. ஐபிஎல் 2024ல் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு அணியில் … Read more

20 ஓவர் உலகக் கோப்பை போட்டி அணியில் கோலி இடம் பெற வேண்டும் – பிரையன் லாரா

பெங்களூரு, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் விராட் கோலி 67 பந்தில் சதம் அடித்தார். ஐ.பி.எல். போட்டியில் ஒரு வீரரின் மந்தமான சதம் இதுவாகும். 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு ஏற்ற வகையில் அவரது பேட்டிங் அதிரடியாக இல்லை என்று விமர்சிக்கப்படுகிறது. இதனால் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கும் 20 ஓவர் உலகக் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக … Read more

கேன்டிடேட் செஸ் போட்டி: இந்திய வீரர் விதித் குஜராத்தி தோல்வி

டொரோன்டோ, உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார் என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரோன்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களுக்குள் தலா 2 முறை என்று மொத்தம் 14 சுற்றில் மோத வேண்டும். லீக் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனை உலக செஸ் சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார்கள். ஆண்கள் பிரிவில் நேற்று முன்தினம் … Read more

மான்டி கார்லோ டென்னிஸ்: முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றி

மான்டி கார்லோ, களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் முதலாவது சுற்றில் உலக தரவரிசையில் 93-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுமித் நாகல், 38-ம் நிலை வீரர் மேட்டியோ அர்னால்டியை (இத்தாலி) சந்தித்தார். 2 மணி 37 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் சுமித் நாகல் 5-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் அர்னால்டிக்கு அதிர்ச்சி அளித்தார். டாப்-50க்குள் இருக்கும் வீரர்களை நாகல் … Read more

CSK vs KKR: தோனி உள்ளே வரும் போது சத்தம் தாங்க முடியாமல் காதை மூடிய ரஸ்ஸல்!

CSK vs KKR Highlights IPL 2024: சென்னையில் நேற்று எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடியது.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்து இருந்த சென்னை அணி இந்த போட்டியில் கம்பேக் கொடுத்துள்ளது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது.  அதிரடியான பேட்டிங் ஆர்டர் … Read more

நிர்வாக கவுன்சில் உறுப்பினர்கள் என்னை ஓரங்கட்ட முயற்சிக்கிறார்கள் – பி.டி.உஷா பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ.) தலைவராக முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி. உஷா இருக்கிறார். அவருக்கும், சங்கத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் ஐ.ஓ.ஏ.யின் தலைமை செயல் அதிகாரியாக ரகுராம் அய்யர் மாதம் ரூ.20 லட்சம் ஊதியத்துக்கு நியமிக்கப்பட்டார். இதே போல் தலைவரின் நிர்வாக உதவியாளராக அஜய் குமார் நரங் கொண்டு வரப்பட்டார். பி.டி. உஷாவின் இவ்விரு நியமனத்தையும் ஏற்காத ஐ.ஓ.ஏ-யின் … Read more

ருதுராஜ் கெய்க்வாட் அபாரம்: கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி அசத்தல் வெற்றி

சென்னை, ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிலிப் சால்ட், துஷார் தேஷ்பாண்டே வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இந்த சீசனில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தல் வெற்றி! வின்னிங் ஷாட்டை ருதுராஜை அடிக்கவிட்ட தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ். டாஸ் வெற்றி பெற்றதும் சிஎஸ்கே கேப்டன் பவுலிங் செய்வதாக அறிவித்தார். முதல் ஓவரை வீச வந்த துஷார் தேஷ்பாண்டே யாரும் எதிர்பார்க்காத வகையில் பிலிப் சால்டை முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தார். கோல்டன் டக்கில் பிலிப் சால்ட் வெளியேற அப்போது முதலே கொல்கத்தா அணியின் சரிவு தொடங்கியது. முதல் கோணல் முற்றிலும் … Read more