தோனி என்னை மதிக்கவில்லை, 10 ஆண்டுகளாக அவருடன் பேசவில்லை – ஹர்பஜன் சிங்

Harbhajan Singh News Tamil | இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தோனியுடனான உறவு குறித்து முதன்முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார். அவருடன் சகஜமாக பேசி பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது, என்னை மதிப்பவர்களை மட்டுமே நான் மதிக்கிறேன், என்னுடைய மொபைல் அழைப்புகளை எடுக்காதவர்களை எல்லாம் நான் மீண்டும் தொடர்பு கொள்வதே இல்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். எம்எஸ் தோனி தலைமையில் இந்திய அணி 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலக்ககோப்பை ஆகியவற்றை … Read more

IND vs AUS: அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட்… இந்திய நேரப்படி எப்போது பார்க்கலாம்?

India vs Australia Adelaide Test IST Timings: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் முன்னிலை பெற்றிருக்கிறது. தொடர்ந்து இன்னும் நான்கு போட்டிகள் இருக்கும் நிலையில், இதில் இன்னும் 3 போட்டிகளை வென்றால் மட்டுமே இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு … Read more

தைஜுல் இஸ்லாம் அபார பந்துவீச்சு…வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை சமன் செய்த வங்காளதேசம்

ஜமைக்கா, வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்ற து. முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. இதில் வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி வங்காளதேசம் … Read more

உலக செஸ் சாம்பியன்ஷிப் 7வது சுற்று ஆட்டம்; வெற்றி வாய்ப்பை தவற விட்டு விட்டேன் – குகேஷ்

சிங்கப்பூர், இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இதுவரை 6 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. முதலாவது சுற்றில் லிரெனும், 3-வது சுற்றில் குகேசும் வெற்றி பெற்றனர். மற்ற சுற்றுகள் டிராவில் முடிந்தது. இதனால் இருவரும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இந்நிலையில் இந்த போட்டியின் 7வது சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக … Read more

பகலிரவு டெஸ்ட் போட்டியில் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன? சமாளிக்குமா இந்திய அணி?

India National Cricket Team: டெஸ்ட் போட்டியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், மைதானத்தில் அதிக பார்வையாளர்களை இழுக்கவும் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பகலிரவு ஆட்டத்தில் சிவப்பு பந்துக்கு (Red Ball) பதில் இளஞ்சிவப்பு பந்து (Pink Ball) பயன்படுத்தப்படும். இந்த போட்டியும் 5 நாள்கள் நடைபெறும் என்றாலும் ஒருநாள் போட்டிகளை போல மதியம் தொடங்கி இரவு வரை ஆட்டம் நடைபெறும்.  இந்திய அணி இதுவரை 4 பகலிரவு ஆட்டங்களில் விளையாடி உள்ளன. அதில் 2019இல் … Read more

புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் – உ.பி.யோத்தாஸ் அணிகள் இன்று மோதல்

புனே, 11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன. இந்த தொடரில் நேற்று ஓய்வு நாளாகும். இந்நிலையில், இந்த தொடரின் 3வது கட்ட லீக் ஆட்டங்கள் புனேவில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் தெலுங்கு … Read more

ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

மஸ்கட், 10 அணிகள் இடையிலான 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டங்களில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவையும், பாகிஸ்தான் அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டியில் இன்று (இரவு 8.30 மணி) பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த ஆண்டு … Read more

பார்வையற்றோர் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்; இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்கிறது

புதுடெல்லி, பார்வையற்றோருக்கான முதலாவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) இந்தியாவில் நடைபெறுகிறது. சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த ஆண்களுக்கான பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து பாதுகாப்பு பிரச்சினையால் இந்திய அணி விலகியது. இதனால் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் மகளிர் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி கலந்து கொள்வதில் சிக்கல் நிலவுகிறது. இதனால் பாகிஸ்தானுக்குரிய ஆட்டங்களை நேபாளம் அல்லது இலங்கையில் நடத்துவது என்று முல்தானில் நடந்த உலக பார்வையற்றோர் … Read more

பிவி சிந்துக்கு டும் டும் டும்… திருமண தேதி எப்போது? மாப்பிள்ளை யார் தெரியுமா?

Badminton Player PV Sindhu Marriage: இந்தியாவை சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து. மகளிர் பேட்மிண்டனில் உலக சாம்பியனான இவர் இந்தியாவுக்கு முதல்முறையாக அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற கொடுத்தவர் ஆவார். அதாவது ஆடவர் மற்றும் மகளிர் பேட்மிண்டனில் இந்தியாவில் யாருமே தொடர்ந்து இரண்டு முறை கோப்பைகளை வென்றதில்லை, பிவி சிந்துவை தவிர… உச்சத்தில் இருந்த பிவி சிந்து தற்போது வாழ்விலும் சரி, விளையாட்டிலும் சரி சில ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறார். சமீபத்தில் … Read more

விராட் கோலி விளையாட மாட்டார்…? இந்திய அணிக்கு பெரிய ஷாக் – அவருக்கு என்னாச்சு?

India National Cricket Team: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டெஸ்ட் அணி பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் (Border Gavaskar Trophy) விளையாடி வருகிறது. பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுவிட்ட குதூகலத்துடனும், 1-0 என்ற முன்னிலையுடனும் இந்திய அணி (Team India) இரண்டாவது டெஸ்ட் போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறது.  இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவாக அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் (Adelaide Oval) வரும் டிச. 6ஆம் … Read more