இந்திய அணியில் இணைந்த வருண் சக்கரவர்த்தி! ஆனால் முக்கிய வீரர் நீக்கம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான பயிற்சியில் இந்திய அணியின் வீரர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். நாக்பூரில் உள்ள மைதானத்தில் கடந்த இரண்டு நாட்களாக பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்திய டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய வருண் சக்கரவர்த்தி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் படிங்க: கோலியை அவுட்டாக்க பஸ் டிரைவர் ஐடியா கொடுத்தாரா? ரஞ்சி பவுலர் சங்வான் … Read more

இரண்டு ஜாம்பவான்களின் மிகப்பெரிய சாதனை.. குறி வைக்கும் கோலி.. முறியடிப்பாரா?

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை மறுநாள் (பிப்.06) தொடங்கி 12ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மிகப்பெரிய சாதனையை படைக்க இருக்கிறார்.  விராட் கோலி இதுவரை 295 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13906 ரன்களை 58.15 சராசரியுடன் எடுத்துள்ளார். இதில் 50 சதங்கள் மற்றும் 72 அரை சதங்களும் அடங்கும். ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசிய வீரர் … Read more

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்திய அணிக்குள் வரும் வருண் சக்ரவர்த்தி…? யாருக்கு பதிலாக…?

Champions Trophy 2025, Team India: இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அடுத்த 45 நாள்களுக்கு கையில் பிடிக்க முடியாது எனலாம். வரும் பிப். 6ஆம் தேதி (நாளை மறுதினம்) இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்க இருக்கிறது. ஒருநாள் தொடர் முடிவடைந்து ஒரு வார இடைவெளிக்கு பின் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்க உள்ளது. பிப். 19ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற … Read more

கோலியை அவுட்டாக்க பஸ் டிரைவர் ஐடியா கொடுத்தாரா? ரஞ்சி பவுலர் சங்வான் பகிரும் சுவாரஸ்யம்!

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தனது ஃபார்மை மீட்டெடுக்க ரஞ்சி கிரிக்கெட்டிக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு திரும்பி உள்ளார். இந்நிலையில், ரயில்வே அணிக்கு எதிரன போட்டியில் அவர் வெறும் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ரயில்வே அணியின் பந்து வீச்சாளர் சங்வானின் அபார பந்து வீச்சில் விராட் கோலி போல்ட் ஆனார்.  விராட் கோலியின் வருகையால் ரஞ்சி போட்டியை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் டெல்லி மைதானத்திற்கு வந்திருந்தனர். விராட் கோலி ஆட்டமிழந்தது அவர்களுக்கு … Read more

சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாடுவார மாட்டாரா? வெளியான முக்கிய தகவல்!

Bumrah Injury Update: இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக பும்ரா இருந்து வருகிறார். 2024 டி20 உலக கோப்பையை வெல்வதற்கு ஒரு முக்கிய தூணாக இருந்தார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பும்ரா மட்டும் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். அதிகமாக ஓவர்கள் வீசியதால் பும்ராவிற்கு ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் கடைசி இன்னிங்சில் பும்ரா பந்து வீசவில்லை. மேலும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் … Read more

IPL 2025: சுழற்பந்துவீச்சில் மிரட்டும் இந்த 3 அணிகள்… ஐபிஎல் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு!

IPL 2025: சர்வதேச போட்டிகள், டி20 லீக் போட்டிகள், உள்ளூர் தொடர்கள் என பல்வேறு நாடுகளில் தற்போது கிரிக்கெட் உலகமே தினந்தினம் பரபரப்பாக உள்ளது எனலாம். தென்னாப்பிரிக்காவின் டி20 லீக்கான SA20 தொடரின் பிளே ஆப் போட்டிகள், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர், பாகிஸ்தான் – நியூசிலாந்து – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர், ரஞ்சி கோப்பை தொடர் நாக்-அவுட் சுற்று என வரிசையாக பல்வேறு போட்டிகள் காத்திருக்கின்றன. அதிலும் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஒடிசா – நார்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் 'டிரா'

புவனேஸ்வர், 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெற்றது. அதன்படி, புவனேஸ்வரில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. – நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது … Read more

சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்ட காயம்… ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பாரா..? – வெளியான தகவல்

புதுடெல்லி, இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5வது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 247 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 135 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 248 ரன் இலக்குடன் ஆடிய இங்கிலாந்து 97 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 150 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருது அபிஷேக் … Read more

மகளிர் பிரீமியர் லீக்: மாற்று வீராங்கனைகளை அறிவித்த ஆர்.சி.பி, உ.பி. வாரியர்ஸ்

புதுடெல்லி, இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை பி.சி.சி.ஐ 2023-ம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது 3-வது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2-வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் வரும் 14-ம் தேதி … Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்; பும்ரா விளையாடுவாரா…? – அஜித் அகர்கர் பதில்

புதுடெல்லி, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை … Read more