கத்தார் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

தோகா, முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 2-வது சுற்று ஒன்றில் முன்னணி வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), லூகா நார்டி (இத்தாலி) உடன் மோதினார். இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றிய நிலையில், 3-வது செட்டை அல்காரஸ் கைப்பற்றி வெற்றி பெற்றார். அல்காரஸ் இந்த ஆட்டத்தில் 6-1, 4-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு … Read more

சாம்பியன்ஸ் டிராபி 2025 இந்தியா vs வங்கதேசம் போட்டி நேரடி ஒளிபரப்பு இலவசமாக எங்கு பார்ப்பது

Champions Trophy 2025 Latest News: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கான இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதவுள்ளன. இன்றைய போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது. காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ராவின் சேவைகளை இந்திய அணி இழந்தாலும், வங்கதேச அணி நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் இல்லாமல் களம் இறங்கும். அவர் தற்போது ஐசிசியால் பந்துவீச தடை செய்யப்பட்டுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 … Read more

சாம்பியன்ஸ் டிராபி: நாங்கள் 2 இடங்களில் ஆட்டத்தை தவறவிட்டோம் – தோல்விக்குப்பின் பாக்.கேப்டன்

கராச்சி, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானின் கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. கராச்சியில் நேற்று அரங்கேறிய தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி … Read more

இந்தியா vs வங்கதேச சாம்பியன்ஸ் டிராபி போட்டி.. மழை பெய்யுமா? துபாய் வானிலை எப்படி?

Champions Trophy 2025, India vs Bangladesh: துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபி தொடக்க ஆட்டம் வங்கதேசத்திற்கு எதிராக துபாயில் நடக்க உள்ளது. அதேபோல பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் மற்ற இரண்டு குரூப் ஆட்டங்கள் துபாயில் நடக்க உள்ளன. ஆனால், நேற்று துபாயில் மழை பெய்ததால், வங்கதேசத்திற்கு எதிரான இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபி தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக, இன்றும் மழை பெய்யுமா? என்ற கவலை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. … Read more

IND vs BAN: குல்தீப் யாதாவிற்கு வாய்ப்பு இல்லை! இந்தியாவின் பிளேயிங் 11 இதுதான்!

India’s Playing XI Vs Bangladesh: இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இரண்டு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடவில்லை. முதலில் அணியில் எடுக்கப்பட்டிருந்தாலும் பின்னர் காயம் குணமடையாததால் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு முகமது ஷமி மீண்டும் அணிக்கு திரும்பி … Read more

சாம்பியன்ஸ் டிராபி : விராட்கோலி நினைத்தது மட்டும் நடந்தால் கோப்பை உறுதி

Virat Kohli Latest News | பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்போட்டி தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், இந்திய கிரிக்கெட் அணி பிப்ரவரி 20 ஆம் தேதியான நாளை வங்கதேசம் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் வெற்றி பெறுவதன் முக்கியத்துவம் குறித்து விராட் கோலி சுவாரஸ்மான கருதுக்களை பகிர்ந்துள்ளார். 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை போட்டியிலும் இந்தியா முதன்முதலாக வங்கதேசம் அணியை எதிர்கொண்டதாகவும், அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதாகவும், … Read more

இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்

கராச்சி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் இன்று (19-02-2025) முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. இதில் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தரவரிசையில் டாப்-8 இடங்களை பிடித்த அணிகள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன. அந்த வகையில் முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இந்த முறை தகுதி பெறவில்லை. … Read more

ஸ்கைவர் – பிரண்ட் அபாரம்: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

வதோதரா, 5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடர் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் – மும்பை அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி ஆரம்பம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணியில் ஹர்லீன் … Read more

மகனுடன் சேர்ந்து விளையாட விருப்பம்: ஓய்வு முடிவை திரும்ப பெற்ற ஆப்கானிஸ்தான் வீரர்

காபூல், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான முகமது நபி, எதிர் வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இவர் கடந்த 2019ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தற்போது ஆடி வருகிறார். இந்நிலையில் முகமது நபி தனது ஓய்வு முடிவை தற்போது திரும்ப பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது மகனுடன் சேர்ந்து … Read more

ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் எப்படி எல்லாம் வருமானம் பெறுகிறார்கள் தெரியுமா?

உலகம் முழுவதும் தற்போது லீக் கிரிக்கெட் பிரபலமாகி வருகிறது. அவற்றில் ஒரு சில தொடர்கள் மட்டுமே மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, அதில் முதன்மையான ஒன்று இந்தியன் பிரீமியர் லீக். பல கோடிகளை உள்ளடக்கி உள்ள இந்த தொடர் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறுகிறது. இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கி ஐபிஎல் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. முதன் முதலில் ஐபிஎல் தொடர் பற்றிய புரிதல் யாருக்கும் இல்லை என்பதால் … Read more