புரோ கபடி லீக்; ஜெய்ப்பூரை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற தபாங் டெல்லி

நொய்டா, 11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – தபாங் டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டெல்லி அடுத்தடுத்து புள்ளிகளை எடுத்து அசத்தியது. … Read more

சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் – இன்று தொடக்கம்

புதுடெல்லி, 17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் இன்று தொடங்கி டிசம்பர் 15-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், 3 முறை சாம்பியனான தமிழ்நாடு, பெங்கால், பரோடா உள்பட 38 அணிகள் பங்கேற்கின்றன. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் … Read more

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: முதல்நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 250/5

ஆண்டிகுவா, வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. இப்போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக மைகி லூயிஸ் 97 … Read more

மேட்ச் பிக்சிங்: டென்னிஸ் வீரர்களுக்கு 3 ஆண்டுகள் தடை

லண்டன், நைஜீரியாவை சேர்ந்த டென்னிஸ் வீரர்கள், சிவெஸ்டர் இம்மானுவேல், கிறிஸ்டின் பால், ஹெண்ட்ரி சட்செ. இவர்கள் பெல்ஜியத்தில் செயல்பட்டு வரும் சூதாட்டம், மெட்ச் பிக்சிங்க் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாட்டு அமைப்பு விசாரணை நடத்தி வந்தது. விசாரணையில் 3 வீரர்களும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, 3 வீரர்களுக்கும் தலா 10 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. … Read more

IND vs AUS | பும்ராவின் புயலில் சிக்கிய ஆஸ்திரேலியா… 72 ஆண்டு வரலாறு.. சாதித்த பவுலர்கள்

Border Gavaskar Trophy Latest News InTamil: இன்று இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் மிகவும் பரபரப்பாக இருந்தது. இரு அணிகளின் பந்துவீச்சாளர்களிடமிருந்தும் அற்புதமான பந்துவீச்சு தென்பட்டது. அதிலும் ஆஸ்திரேலியா மைதானத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வித்தியாசமான பந்து வீச்சு ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டியில் நடந்த சாதனை … Read more

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் – உ.பி. யோத்தாஸ் அணிகள் இன்று மோதல்

நொய்டா, 11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – … Read more

KL Rahul : கேஎல் ராகுல் அவுட் இல்லை, 3வது நடுவர் கொடுத்த சர்ச்சை முடிவு

India vs Australia first Test, KL Rahul Out Controversy | இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடக்கிறது. பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரின் 5 போட்டிகள் கொண்ட முதல் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் ஆடும் நிலையில், கேஎல் ராகுல் அவுட் என மூன்றாவது நடுவர் கொடுத்த முடிவு சர்ச்சையாகியுள்ளது. அவர் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த சமயத்தில் கொடுக்கப்பட்ட இந்த முடிவு இந்திய அணிக்கு … Read more

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: லக்சயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம்

ஷென்ஜென், சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென், டென்மார்க்கின் ராஸ்முஸ் ஜெம்கியுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 21-16, 21-18 என்ற நேர்செட்டில் ராஸ்முஸ் ஜெம்கியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் அனுபமா உபாத்யாயா 7-21, 14-21 என்ற நேர்செட்டில் ஜப்பானின் நட்சுகி நிடாரியாவிடமும், … Read more

IND vs AUS : இந்தியா வச்ச டிவிஸ்ட்.. ஆஸி ஏமாற்றம் – அஸ்வின், ஜடேஜா நீக்கம் பின்னணி

IND vs AUS First Test Latest Update | இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் தொடங்கியது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா, பேட்டிங் செய்வதாக அறிவித்தார். பிளேயிங் லெவனைப் பொறுத்தவரை ஆச்சரியப்படும் விதமாக ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்படாமல் வாஷிங்டன் சுந்தர், … Read more

ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: இந்தியா-கத்தார் அணிகள் சென்னையில் இன்று மோதல்

சென்னை, ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டி சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் சவுதி அரேபியா தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் … Read more