ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா-இங்கிலாந்து நாளை மோதல்

போட்செப்ஸ்ட்ரூம், பெண்களுக்கான முதலாவது ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் ஷபாலி வர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, இந்திய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 20 ஓவர்களில் … Read more

முதல் டி20: தோல்விக்கான காரணம் இது தான்…? இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா

ராஞ்சி, இந்தியா – நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது. ஒருநாள் தொடரையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. … Read more

உலகக் கோப்பை ஆக்கி இறுதிப்போட்டி: ஜெர்மனி- பெல்ஜியம் அணிகள் நாளை மோதல்

புவனேஸ்வர், 15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் நம்பர் ஒன் அணியும், 3 முறை சாம்பியனுமான ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியன் ஜெர்மனியுடன் பலப்பரீட்சை நடத்தியது. நீயா-நானா? என்று பலமாக வரிந்துகட்டிய இந்த ஆட்டத்தில் ஜெர்மனி 4-3 என்ற கோல் கணக்கில் ‘திரில்’ வெற்றியை ருசித்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஜெர்மனி அணியில் கோன்சலோ பீலட் பெனால்டி கார்னர் … Read more

முதல் டி20: வாஷிங்டன் சுந்தரின் போராட்டம் வீண் – இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி…!

ராஞ்சி, இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக பின் ஆலனும், டிவோன் கான்வேயும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பின் ஆலன் … Read more

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்

ராஞ்சி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடந்த ஒருநாள் போட்டி தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் … Read more

உலகக் கோப்பை ஆக்கி: அரைஇறுதியில் ஆஸ்திரேலியா-ஜெர்மனி இன்று மோதல்

புவனேஸ்வர், 15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர், ரூர்கேலா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.இன்று (வெள்ளிக்கிழமை) புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இரண்டு அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. முதலாவது அரைஇறுதியில் உலக தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா, 4-வது இடத்தில் உள்ள ஜெர்மனியை (மாலை 4.30 மணி) எதிர்கொள்கிறது. 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய … Read more

சிறந்த கிரிக்கெட் வீரராக பாபர் அசாம் தேர்வு..!

துபாய், கடந்த ஆண்டுக்கான (2022) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சிறந்த வீரர், வீராங்கனைகள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த ஆண்டுக்கான ஆண்கள் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தேர்வாகி இருக்கிறார். கடந்த ஆண்டில் எல்லா வகையான சர்வதேச போட்டிகளிலும் (ஒருநாள், 20 ஓவர், டெஸ்ட்) சேர்த்து அவர் 8 சதம், 17 அரைசதம் உள்பட 2,598 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் அவர் இந்த விருதை … Read more

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சபலென்கா, எலினா ரைபகினா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

மெல்போர்ன், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு விம்பிள்டன் சாம்பியனும், தரவரிசையில் 25-வது இடத்தில் இருப்பவருமான எலினா ரைபகினா (கஜகஸ்தான்), முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும் 2 முறை சாம்பியனுமான விக்டோரியா அஸரென்காவை (பெலாரஸ்) எதிர்கொண்டார். 1 மணி 41 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் எலினா ரைபகினா 7-6 (7-4), 6-3 என்ற நேர்செட்டில் … Read more

திறமையான பந்து வீச்சாளர்களை கண்டறிந்து பயிற்சி அளிக்கும் திட்டம் – அஸ்வின் தொடங்கி வைத்தார்

சென்னை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் இருக்கும் சிறந்த மித வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உயரிய பயிற்சி அளித்து சர்வதேச வீரர்களாக உருவெடுக்க வைக்க புதிய திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முன்னாள் முதல் தர வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய கமிட்டி அமைத்து அதன் மூலம் திறமையான வீரர்களை அடையாளம் காணுவதற்கு மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மாதம் முதல் சிறப்பு தேர்வு முகாம்கள் நடத்தப்பட … Read more

கடந்த 3 ஆண்டுகளில் நான் அடித்த முதல் சதம் என்பதா? – ரோகித் சர்மா ஆதங்கம்

இந்தூர், இந்தூரில் நேற்று முன்தினம் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா (101 ரன்கள்), சுப்மன் கில் (112 ரன்கள்) ஆகியோர் சதம் அடித்தனர். ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா விளாசிய 30-வது சதம் இதுவாகும். 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு … Read more