உலகக் கோப்பை ஆக்கி: இந்தியா-ஜப்பான் இன்று மோதல்

புவனேஸ்வர், 15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனி அணி, இங்கிலாந்தை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஜெர்மனி 4-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு … Read more

பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட: ஆமதாபாத் அணியை ரூ.1,289 கோடிக்கு அதானி குழுமம் வாங்கியது

மும்பை, ஆண்களுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டு வருகிறது. இதேபோல் பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு ‘பெண்கள் பிரிமீயர் லீக்’ என்று நேற்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 5 அணிகள் பங்கேற்கும் என்றும் … Read more

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சாளர் தரவரிசையில் முகமது சிராஜ் முதலிடம் பிடித்தார்

துபாய், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதன்படி பந்து வீச்சாளர்கள் தரவரிசையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் (729 புள்ளி) ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் (727 புள்ளி),நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் (707 புள்ளி) ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ அரியணையை பிடித்துள்ளார். ஹேசில்வுட், … Read more

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், சபலென்கா அரைஇறுதிக்கு முன்னேற்றம்

மெல்போர்ன், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, 64-ம் நிலை வீராங்கனை டோனா வெகிச்சை (குரோஷியா) எதிர்கொண்டார். 1 மணி 49 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-3, 6-2 என்ற நேர்செட்டில் டோனா வெகிச்சை தோற்கடித்து முதல்முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். … Read more

மாநில பள்ளி, கல்லூரி கைப்பந்து: வேலுடையார், பி.கே.ஆர். அணிகள் வெற்றி

சென்னை, சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் மாநில பள்ளி மற்றும் கல்லூரிகள் இடையிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 27-ந் தேதி வரை நடக்கும் இந்த போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கம், எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் ஆகிய இரு இடங்களில் நடக்கிறது. 2-வது நாளான நேற்று நடந்த பள்ளி அணிகளுக்கான ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் செயின்ட் பீட்டர்ஸ் (சென்னை) அணி 25-17, 25-10 என்ற … Read more

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அஸரென்கா அரைஇறுதிக்கு தகுதி

மெல்போர்ன், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டங்களில் விம்பிள்டன் சாம்பியனான எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 6-2, 6-4 என்ற நேர் செட்டில் ஆஸ்டாபென்கோவையும் (லாத்வியா), முன்னாள் நம்பர் ஒன் நட்சத்திரம் விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 6-4, 6-1 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜெசிகா பெகுலாவையும் (அமெரிக்கா) பதம் பார்த்து அரைஇறுதிக்கு முன்னேறினர். கலப்பு இரட்டையரில் இந்தியாவின் சானியா … Read more

பள்ளி அணிகளுக்கான கைப்பந்து போட்டி: சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை, லட்சுமி நகர் மற்றும் பினாக்கிள் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் எஸ்.என்.ஜெ.குழுமம் ஆதரவுடன் செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்ட பள்ளி அணிகளுக்கான (ஆண்கள் மற்றும் பெண்கள்) கைப்பந்து போட்டி சென்னை நங்கநல்லூர் லட்சுமி நகர் 7-வது தெருவில் உள்ள விளையாட்டு திடலில் இன்றும் (புதன்கிழமை), வருகிற 29-ந் தேதியும் நடக்கிறது. இந்த போட்டியில் 30 அணிகள் பங்கேற்கின்றன. இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், வருமானவரி கூடுதல் கமிஷனர் பாண்டியன் … Read more

முதல்-அமைச்சர் கோப்பைக்கான சென்னை மாவட்ட விளையாட்டு போட்டி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து நடத்தும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் (2022-23) சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்கா விளையாட்டு மைதானம் மற்றும் தியாகராயநகரில் உள்ள கண்ணதாசன் மைதானம் ஆகிய இடங்களில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசு … Read more

ரஞ்சி கிரிக்கெட்டில் சவுராஷ்டிராவுக்கு எதிராக தமிழக அணி நிதான ஆட்டம்

சென்னை, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு-சவுராஷ்டிரா அணிகள் இடையிலான கடைசி லீக் (பி பிரிவு) ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த தமிழக அணியில் சாய் சுதர்சன், ஜெகதீசன் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். ஜெகதீசன் 6 ரன்னில் வெளியேறினார். அதன் பிறகு தமிழக வீரர்கள் நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர். இதனால் ரன் விகிதம் ஆமை … Read more

இந்திய கைப்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழா…

சென்னை, இந்திய கைப்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் மாநில பள்ளி மற்றும் கல்லூரிகள் இடையிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. வருகிற 27-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் ஆகிய இரு இடங்களில் நடக்கிறது. மாநிலம் முழுவதும் இருந்து … Read more