'பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்க தவறியதே இந்தியாவின் தோல்விக்கு காரணம்' – ஆக்கி இந்தியா தலைவர் பேட்டி

புவனேஸ்வர், உலகக் கோப்பை ஆக்கியில் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்த தவறியதே இந்தியாவின் வீழ்ச்சிக்கு காரணம் என்று ஆக்கி இந்தியா தலைவர் திலிப் திர்கே கூறினார். ஒடிசாவில் நடந்து வரும் உலகக் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது சுற்றில் நியூசிலாந்திடம் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறியது. ஒரு கட்டத்தில் இந்தியா 3-1 என்று வலுவான முன்னிலையில் இருந்த நிலையில் நியூசிலாந்து மேலும் இரு கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு … Read more

மல்யுத்த சம்மேளன தலைவர் மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் மேற்பார்வை கமிட்டியின் தலைவராக மேரிகோம் நியமனம்

புதுடெல்லி, இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக கூறி வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து இது குறித்து விசாரிக்க மேற்பார்வை கமிட்டி அமைக்கப்பட்டு 4 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், அதுவரை தலைவர் பொறுப்பில் இருந்து பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கை ஒதுங்கி இருக்கவும் மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த நிலையில் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் … Read more

பெண்கள் ஐ.பி.எல். அணிகள் மூலம் ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் – இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்பார்ப்பு

புதுடெல்லி, முதலாவது பெண்கள் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது. இதில் 5 அணிகள் உருவாக்கப்படுகிறது. பெண்கள் ஐ.பி.எல். அணிகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டிய 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதற்கான விண்ணப்பத்தை ரூ.5 லட்சம் செலுத்தி பெற்று சென்றன. ஆண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டை சேர்ந்த 10 அணிகளின் நிர்வாகமும், பெண்கள் அணிக்கான உரிமத்தை பெற முயற்சிப்பதும் இதில் அடங்கும். இதற்கான உரிமத்தை பெறப்போவது யார் என்பது நாளை தெரிந்து விடும். பெண்கள் … Read more

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், ரூப்லெவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

மெல்போர்ன், ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. வருகிற 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 4-வது சுற்று போட்டி ஒன்றில் செர்பிய வீரரான நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார். இந்த போட்டியில் ஜோகோவிச் 6-2, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் அலெக்சை வீழ்த்தி காலிறுதி … Read more

'நம்பர் ஒன் வீராங்கனைக்கு எதிராக விளையாடும் போது நாம் இழப்பதற்கு எதுவும் இல்லை' – ரைபகினா

மெல்போர்ன், ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருந்த ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், கடந்த ஆண்டில் இரு கிராண்ட்ஸ்லாம் வென்றவருமான இகா ஸ்வியாடெக் (போலந்து), 25-ம் நிலை வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான எலினா ரைபகினாவுடன் (கஜகஸ்தான்) பலப்பரீட்சை நடத்தினார். மணிக்கு அதிகபட்சமாக 190 கிலோமீட்டர் வேகத்தில் … Read more

உலகக் கோப்பை ஆக்கியில் இந்திய அணி வெளியேற்றம் – தொடரும் அரைநூற்றாண்டு கால சோகம்

புவனேஸ்வர், 16 அணிகள் இடையிலான 15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ‘டி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த இந்திய அணி, ‘சி’ பிரிவில் 3-வது இடத்தை பெற்ற நியூசிலாந்துடன் நேற்றிரவு 2-வது சுற்றில் மல்லுக்கட்டியது. உலகத் தரவரிசையில் 6-வதுஇடத்தில் உள்ள இந்தியா தங்களை விட 6 இடங்கள் பின்தங்கிய அணியுடன் மோதியதால் இந்தியாவின் கையே ஓங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கணிப்புக்கு … Read more

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் போராடி வென்ற சிட்சிபாஸ்

மெல்போர்ன், ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. இதில் குறிப்பாக உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் 4-வது சுற்றை கடக்க ஒரு யுத்தமே நடத்த வேண்டி இருந்தது. இரவில் களம் புகுந்த அவர் 6-4, 6-4, 3-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜானிக் சினெரை (இத்தாலி) வீழ்த்தினார். வெற்றிக்காக … Read more

மாநில பள்ளி, கல்லூரி கைப்பந்து போட்டி இன்று தொடக்கம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை, சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரிகள் இடையிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 27-ந்தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் ஆகிய இரு இடங்களில் நடக்கிறது. மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த ஏறக்குறைய 100 அணிகள் பங்கேற்கின்றன. இதில் சென்னை எத்திராஜ், வேல்ஸ், எஸ்.ஆர்.எம்., டி.ஜி.வைஷ்ணவா, பி.கே.ஆர். (ஈரோடு), ஜமால் முகமது (திருச்சி), சரஸ்வதி … Read more

இந்திய மல்யுத்த சம்மேளன அவசர கூட்டம் ரத்து

புதுடெல்லி, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றம் சாட்டிய முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அவருக்கு எதிராக டெல்லியில் 3 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் இந்திய விளையாட்டு அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மேற்பார்வை கமிட்டி அமைக்கவும், ஒரு மாத காலத்திற்கு பிரிஜ் பூஜன் ஷரண்சிங் பொறுப்பில் இருந்து ஒதுங்கி இருக்கவும் மத்திய … Read more

உலகக் கோப்பை ஆக்கி: 2-வது சுற்றில் நியூசிலாந்துடன் இந்திய அணி இன்று மோதல்

புவனேஸ்வர், 15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடித்த ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் நேரடியாக கால்இறுதிக்குள் நுழைந்தன. ஒவ்வொரு பிரிவிலும் 2 மற்றும் 3-வது இடத்தை பிடித்த அணிகள் 2-வது சுற்றில் மோதுகின்றன. இதன்படி ‘டி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த இந்திய அணி, … Read more