கர்நாடக ஜூனியர் அணிக்கு டிராவிட்டின் மகன் கேப்டன்

பெங்களூரு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டை பின்பற்றி அவரது மகன்கள் சமித், அன்வே இருவரும் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இந்த நிலையில் அவரது இளைய மகன் அன்வே 14 வயதுக்குட்பட்டோருக்கான கர்நாடக அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அன்வே பேட்டிங் மட்டுமின்றி விக்கெட் கீப்பராகவும் செயல்படுகிறார். கேரளாவில் வருகிற 23-ந்தேதி முதல் பிப்ரவரி 11-ந்தேதி வரை நடக்கும் தென்மண்டல ஜூனியர் கிரிக்கெட்டில் கர்நாடக அணியை அன்வே வழிநடத்த உள்ளார். டிராவிட்டின் மூத்த … Read more

ரஞ்சி கிரிக்கெட்: குஜராத்துக்கு மிக குறைந்த ஸ்கோரை இலக்காக நிர்ணயித்து வெற்றி பெற்ற விதர்பா அணி

நாக்புர், ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் நாக்பூரில் ‘டி’ பிரிவில் நடந்த விதர்பாவுக்கு எதிரான ஆட்டத்தில் 73 ரன்கள் இலக்கை கூட எட்ட முடியாமல் குஜராத் அணி 2-வது இன்னிங்சில் 33.3 ஓவர்களில் வெறும் 54 ரன்னில் சுருண்டு போனது. இதனால் விதர்பா அணி 18 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது. இதன் மூலம் இந்தியாவில் முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த ஸ்கோரை இலக்காக நிர்ணயித்து வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை விதர்பா பெற்றது. … Read more

தமிழக அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: அசாம் 266 ரன்னுக்கு ஆல்-அவுட்

சென்னை, ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு – அசாம் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த தமிழக அணி 540 ரன்கள் குவித்தது. ஜெகதீசன், பிரதோஷ் ரஞ்சன் பால், விஜய் சங்கர் சதம் அடித்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய அசாம் அணி 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து … Read more

தேசிய கைப்பந்து போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி – நாளை மறுதினம் தேர்வு

சென்னை, 71-வது சீனியர் தேசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நடக்கிறது. இந்நிலையில் தமிழக அணிக்கான வீரர், வீராங்கணைகள் தேர்வு குறித்த தகவலை தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்கத்தின் இடைக்கால கமிட்டி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த போட்டியில் பங்கேற்கும் தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் அணியை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் பள்ளியில் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை … Read more

அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்து சுப்மன் கில் சாதனை

ஐதராபாத், நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சுப்மான் கில்லின் அபார இரட்டை சதத்தால் இந்திய அணி திரில் 12 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் இந்திய இளம் பேட்ஸ்மேன் சுப்மான் கில் 109 ரன்கள் எடுத்திருந்த போது, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆயிரம் ரன்களை கடந்தார். அவர் … Read more

'மல்யுத்த சம்மேளன தலைவரை நீக்கும் வரை எங்களது போராட்டம் ஓயாது' – மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா

புதுடெல்லி, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத்தரும் விளையாட்டுகளில் ஒன்றாக மல்யுத்தம் விளங்குகிறது. இதுவரை ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியா 7 பதக்கங்களை வென்று இருக்கிறது. இதனால் இந்தியாவில் இப்போது கவனிக்கத்தக்க விளையாட்டுகளில் ஒன்றாக மல்யுத்தம் இருக்கிறது. இந்த நிலையில் நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் 30 பேர் நேற்று திடீரென போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் ரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களான பஜ்ரங் பூனியா, சாக்ஷி … Read more

உலகக் கோப்பை ஆக்கி: வேல்சுக்கு எதிராக இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்ப்பு

ரூர்கேலா, 16 அணிகள் இடையிலான 15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவில் நடந்து வருகிறது. இதில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை தோற்கடித்தது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தை கோல் இன்றி டிரா செய்தது. இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் வேல்சை இன்று (வியாழக்கிழமை) சந்திக்கிறது. தங்களை விட தரவரிசையில் 9 இடங்கள் பின்தங்கி இருக்கும் வேல்சுக்கு எதிராக இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என்று … Read more

இந்தியா-நியூசிலாந்துக்கு ஒரு நாள் கிரிக்கெட்; ஹர்திக் பாண்ட்யாவுக்கு தவறான அவுட்

ஐதராபாத், நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சுப்மான் கில்லின் அபார இரட்டை சதத்தால் இந்திய அணி திரில் 12 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 28 ரன்னில், டேரில் மிட்செலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவர் வீசிய பந்தை பாண்ட்யா எதிர்கொண்ட போது விக்கெட் … Read more

பிரேஸ்வெல்லின் அதிரடி சதம் வீண்..! நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி

ஐதராபாத், இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடந்தது . இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. … Read more

பால் வியாபாரிக்கு அடி-உதை- 2 பேர் கைது

திருநெல்வேலி சிவந்திப்பட்டி: பாளையங்கோட்டை அருகே உள்ள இலந்தைகுளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கிபாண்டி (வயது 18). இவர் சிவந்திபட்டியில் பால் கொள்முதல் செய்து வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இசக்கிபாண்டி சிவந்திபட்டி, நடுத்தெரு பகுதியில் பால் எடுத்துக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த சிவந்திபட்டியை சேர்ந்த மாரிமுத்து (20), சேரன்மகாதேவி கூனியூரை சேர்ந்த சேதுராமன் (23) ஆகிய இருவரும் சேர்ந்து எங்கள் ஊரில் வந்து எப்படி பால் எடுக்கலாம்? என அவதூறாக பேசி அடித்து உதைத்து காயம் … Read more