பாகிஸ்தான்-நியூசிலாந்து மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது

ஒரு நாள் கிரிக்கெட் நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே கராச்சியில் நடந்த இரு டெஸ்ட் போட்டியும் ‘டிரா’வில் முடிந்தது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கராச்சியில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. டெஸ்டில் சொதப்பிய பாகிஸ்தான்அணி ஒரு நாள் தொடரை வெற்றியுடன் தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: கேரளாவை வீழ்த்தி மும்பை சிட்டி வெற்றி

மும்பை, 11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் – மும்பை சிட்டி அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை சிட்டி அணி சார்பில் ஜார்ஜ் ஆட்டத்தின் 4 மற்றும் 22-வது நிமிடத்தில் என இரண்டு கோல்கள் அடித்தார். கிரெக் ஸ்டீவர்ட் ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். மேலும் பிபின் சிங் … Read more

இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பை பாண்டியாவிடம் ரோகித் சர்மா ஒப்படைக்க வேண்டும் – முன்னாள் வீரர் கருத்து

புதுடெல்லி, கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்தப் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்ததால், கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் மூத்த வீரர்கள் கே.எல்.ராகுல், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இலங்கைக்கு எதிரான டி20 தொடரின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா … Read more

'என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் இவர்தான்' – முன்னாள் வீரர் குறித்து ஹார்திக் பாண்டியா நெகிழ்ச்சி

புதுடெல்லி, இலங்கைக்கு எதிரான டி20 தொடரின் கேப்டனாக செயல்பட்டு இந்திய அணிக்கு 2-1 என அந்த தொடரை வென்று கொடுத்த ஹர்திக் பாண்டியா, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, தான் அறிமுகமான முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இது குறித்து பேசியுள்ள ஹார்திக் பாண்டியா கூறியதாவது , குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டதில் … Read more

மும்பை அணி எனது குடும்பம் போன்றது..! ரோகித் சர்மா உருக்கம்

மும்பை, ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் மும்பை அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த நிலையில் மும்பை அணியில் இணைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்தது என்னால் நம்ப முடியவில்லை என ரோகித் சர்மா தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது , “மும்பை அணியில் இனைந்து 12 ஆண்டுகள் ஆகியுள்ளது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இது எனக்கு மிகவும் உற்சாகமான மற்றும் உணர்ச்சிகரமான … Read more

மராட்டிய ஓபன் டென்னிஸ்: நெதர்லாந்து வீரர் 'சாம்பியன்'

5-வது மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் இறுதிப்போட்டியில் தரவரிசையில் 95-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து வீரர் டாலோன் கிரிக்ஸ்பூர் 4-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் சரிவில் இருந்து மீண்டு வந்து பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் போன்ஜியை வீழ்த்தி முதல்முறையாக ஏ.டி.பி.சர்வதேச போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு ரூ.88 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் பெல்ஜியத்தின் சாண்டெர் கில்லி-ஜோரான் லீஜென் ஜோடி … Read more

இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு ஊக்க மருந்தில் சிக்கினார்

இந்தியாவின் முன்னணி பளுதூக்குதல் வீராங்கனைகளில் ஒருவரான மணிப்பூரை சேர்ந்த 29 வயதான சஞ்சிதா சானு 2014, 2018-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்த நிலையில் சஞ்சிதா சானு ஊக்க மருந்து சோதனையில் சிக்கி இருக்கிறார். குஜராத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடந்த தேசிய விளையாட்டு போட்டியில் பளுதூக்குதலில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் சஞ்சிதா சானு வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த போட்டியின் போது சஞ்சிதா சானுவிடம் இருந்து பெறப்பட்ட … Read more

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து 'நம்பர் ஒன்' வீரர் அல்காரஸ் விலகல்

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் வருகிற 16-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது. அமெரிக்க ஓபன் சாம்பியனும், உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவருமான 19 வயது ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து நேற்று விலகி இருக்கிறார். இது குறித்து கார்லோஸ் அல்காரஸ் தனது டுவிட்டர் பதிவில், ‘பயிற்சியின் போது வழக்கத்துக்கு மாறாக திரும்புகையில் எனது வலதுகால் தசையில் … Read more

தர்மபுரியில் மாநில செஸ் போட்டி-1,000 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

தர்மபுரி தர்மபுரி மாவட்ட செஸ் சங்கம் மற்றும் விவேகானந்தா செஸ் அகாடமி ஆகியவை சார்பில், மாநில அளவிலான 24-வது செஸ் போட்டி தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் டி.என்.சி. மணிவண்ணன் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் செல்வி மணிவண்ணன், துணைத்தலைவர் தீபக், செயலாளர் டாக்டர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் கவுசல்யா குத்துவிளக்கேற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் மாநிலம் … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஜாம்ஷெட்பூர் – சென்னையின் எப்.சி ஆட்டம் டிரா

ஜாம்ஷெட்பூர், 11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர் – சென்னையின் எப்.சி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் ரித்விக் தாஸ் ஆட்டத்தின் 17 மற்றும் 56-வது நிமிடத்தில் என இரண்டு கோல்கள் அடித்தார். சென்னையின் எப்.சி அணி சார்பில் வின்சி ஆட்டத்தின் 60-வது நிமிடத்திலும் பீட்டர் ஆட்டத்தின் … Read more