ஹர்திக் பாண்ட்யாவுக்கு டி20ல் நிரந்தர கேப்டன் பதவியா… தேர்வர்களுக்கு எச்சரிக்கை விடுத்த இர்பான் பதான்

புதுடெல்லி, முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பல மாதங்கள் ஒதுங்கியிருந்த இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, ஐபிஎல் 2022ல் பாண்டியா மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பினார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு தனது திறமையை வெளிப்படுத்தி பட்டத்தை வெல்ல காரணமாக இருந்தார். மேலும், ரோஹித் சர்மா இல்லாததால், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் ஹர்திக் தலைமையிலான இந்திய அணி வென்றது. டி20 கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் தனது திறமையான … Read more

பாகிஸ்தான்-நியூசிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் கராச்சியில் இன்று தொடக்கம்

கராச்சி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கராச்சியில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அதே கராச்சியில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. தொடக்க டெஸ்டில், மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் முதல் 3 நாட்கள் பந்து வீச்சின் தாக்கம் பெரிய அளவில் இல்லை. … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து : ஒடிசாவுடன் மோதும் மும்பை சிட்டி அணி

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில் நாளை நடக்கும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி- ஒடிசா எப்.சி. அணிகள் மோதுகின்றன. இப்போட்டி புவனேஸ்வரில் நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. மும்பை அணி 11 ஆட்டத்தில் 8 வெற்றி, 3 டிராவுடன் 27 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. அந்த அணி 9வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு … Read more

கார் விபத்துக்கான காரணம் என்ன…? முதல்-மந்திரி தமியிடம் கூறிய ரிஷப் பண்ட்

டேராடூன், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் (வயது 25). இவர் கடந்த டிசம்பர் 30-ந்தேதி அதிகாலை டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு மெர்சிடிஸ் ரக சொகுசு காரில் சென்றார். காரை ரிஷப் பண்டே ஓட்டி சென்றார். டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் ஹம்மத்பூர் ஜல் என்ற இடத்திற்கு அருகே ரூர்கியின் நர்சன் எல்லை பகுதியில் அதிவேகமாக சென்றபோது, அன்று அதிகாலை 5.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் … Read more

நாளை பாகிஸ்தான்-நியூசிலாந்து 2வது டெஸ்ட் தொடக்கம்…ரசிகர்களுக்கு இலவச அனுமதி

கராச்சி, பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டியைக் காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. இதனால், 2வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை கராச்சியில் தொடங்குகிறது.ஏற்கனவே நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது . தினத்தந்தி Related … Read more

மகள் ஜிவாவுடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்த தோனி..! வைரல் வீடியோ

உலகம் முழுவதும் 2023 புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று இரவு முதல் கலைகட்டியுள்ளன. பல்வேறு நகரங்களில் நேற்று இரவு முதல் பொதுஇடங்கள், குடியிருப்புகளில் குவிந்த மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். இந்த நிலையில் ,இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி புத்தாண்டை தனது மகள் ஜிவாவுடன் குதூகலமாக கொண்டாடியுள்ளார். இதுதொடர்பாக அவரது மனைவி சாக்ஷி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாகியுள்ளது. வான வேடிக்கைகளைப் பார்த்தவாறே வீடியோவில் தனது மகள் ஜிவாவை … Read more

50 ஓவர் உலக கோப்பைக்கு 20 வீரர்கள் தேர்வு…! முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரை தவிர்க்கும்படி அறிவுறுத்த பிசிசிஐ திட்டம்

மும்பை, இந்தியாவில் இந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. சொந்த மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான அணி சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மும்பையில் இன்று சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அழைப்பின் பேரில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் … Read more

'பயிற்சியாளர்கள் எதற்காக இருக்கிறார்கள்?' – பிரித்வி ஷாவை தேர்வு செய்யாதது ஏன்? – கவுதம் கம்பீர் கேள்வி

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். டி20 அணியில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வாய்ப்புக்காக காத்திருக்கும் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் டெல்லியைச் சேர்ந்த இளம் வீரர் பிரிதிவி ஷா இத்தொடரில் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது … Read more

ரிஷப் பண்ட் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்..!

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட், இன்று காலை டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார். டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் ரிஷப்பண்ட் படுகாயம் அடைந்தார். அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. தற்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில் அவர் … Read more

உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்த ஹர்திக் பாண்டியா..!

புதுடெல்லி: இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்தது. ஜனவரி 3-ம் தேதி தொடங்கும் இலங்கை தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் எனவும் அறிவிப்பு வெளியானது. ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாகவும் செயல்படுகின்றனர். இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை பாண்ட்யா சகோதரர்கள் இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இதுதொடர்பாக ஹர்திக் … Read more