ஏ.டி.பி. இறுதி சுற்று : ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி

துரின், உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடம் வகிக்கும் வீரர்கள் மட்டும் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நேற்று தொடங்கியது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால் (ஸ்பெயின்), அமெரிக்காவின் இளம் வீரரும், தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் டெய்லர் ப்ரிட்சை சந்தித்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடால் 7-6, 6-1 என்ற செட் கணக்கில் டெய்லர் … Read more

பில்லி ஜீன் கோப்பை டென்னிஸ் தொடர்- சாம்பியன் பட்டம் வென்ற சுவிஸ். மகளிர் அணி

ஸ்விட்சர்லாந்து, ஸ்காட்லாந்தில் நடைபெற்ற பில்லி ஜீன் கோப்பை டென்னிஸ் தொடரில் சுவிட்சர்லாந்து மகளிர் அணி வெற்றி வாகை சூடியது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணியுடன் சுவிட்சர்லாந்து மகளிர் அணி மோதியது. இதில் முதல் போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை ஜில் டெய்ச்மேன், ஆஸ்திரேலிய வீராங்கனை ஸ்டோர்ம் சேன்டர்ஸை 6க்கு 3, 4க்கு 6, 6க்கு 3 என்ற செட் கணக்கில் வென்றார். இதேபோல், பெலிந்தா பென்சிக் 6க்கு 2, 6க்கு 1 என்ற செட் கணக்கில் அஜ்லாவை … Read more

உலக பேட்மிண்டன் இறுதிசுற்று: இந்திய வீராங்கனை சிந்து விலகல்

புதுடெல்லி, உலக டூர் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சீனாவின் குவாங்சோவ் நகரில் நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து உலகின் 5-ம் நிலை வீராங்கனையும், முன்னாள் சாம்பியனுமான இந்தியாவின் பி.வி.சிந்து விலகியுள்ளார். கடந்த ஆகஸ்டு மாதம் காமன்வெல்த் விளையாட்டில் சாம்பியன் பட்டத்தை வென்ற போது இடது கணுக்காலில் காயமடைந்த சிந்து அதன் பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. ‘புதிய சீசனை தொடங்குவதற்கு முன்பாக காயத்தில் இருந்து முழுமையாக … Read more

டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.13.84 கோடி பரிசு

சிட்னி, ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் தொடங்கிய 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம் நிறைவடைந்தது. மெல்போர்னில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இங்கிலாந்தின் அபாரமான பந்துவீச்சால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் அதிரடியால் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 … Read more

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

மெல்போன்ர், 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் முதல் சுற்று, ‘சூப்பர்12’ சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா ‘சூப்பர் 12’ சுற்றுடன் வெளியேறியது. முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தையும், 2-வது அரைஇறுதியில் இங்கிலாந்து அணி இந்தியாவையும் பந்தாடி இறுதிபோட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் கோப்பை … Read more

டி20 உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இங்கிலாந்து-பாகிஸ்தான் இன்று மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் முதல் சுற்று, ‘சூப்பர்12’ சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா ‘சூப்பர் 12’ சுற்றுடன் வெளியேறியது. முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தையும், 2-வது அரைஇறுதியில் இங்கிலாந்து அணி இந்தியாவையும் பந்தாடி இறுதிபோட்டிக்கு முன்னேறின. இந்த … Read more

டி20 உலக கோப்பை இறுதி போட்டி: இங்கிலாந்து அணிக்கு வாழ்த்து கூறிய பிரதமர்

லண்டன், 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் முதல் சுற்று, ‘சூப்பர்12’ சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா ‘சூப்பர் 12’ சுற்றுடன் வெளியேறியது. முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணியும், 2-வது அரைஇறுதியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் கோப்பை … Read more

"இதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம்" – பாகிஸ்தான் பிரதமரின் ட்வீட்டுக்கு இர்பான் பதான் பதிலடி

புதுடெல்லி, டி-20 உலகக் கோப்பை தொடரின் அரைஇறுதி ஆட்டத்தில், இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. லீக் சுற்றுகளில் 4 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் நாக் அவுட்டில் நுழைந்த இந்திய அணி, இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வியை சந்தித்தது. கோப்பையை … Read more

ஆசிய குத்துச்சண்டை: இந்திய வீரர் ஷிவ தபாவுக்கு வெள்ளிப்பதக்கம்

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 63.5 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஷிவ தபா, உஸ்பெகிஸ்தானின் அப்துல்லா ரஸ்லனை சந்தித்தார். இதன் 2-வது ரவுண்டில் பின்தங்கி இருந்த நிலையில் ஷிவ தபா கீழே விழுந்தார். இதில் அவருக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக போட்டி நிறுத்தப்பட்டு ஷிவ தபாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. வலி அதிகம் இருந்ததால் ஷிவ தபா போட்டியில் இருந்து … Read more

உலக கோப்பை கால்பந்து : மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி அறிவிப்பு ..!

பாரீஸ், 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் வருகிற 20-ந் தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது. கத்தாரில் உள்ள தோகா, அல் கோர், லுசைல், அல் ரையான், அல் வக்ரா ஆகிய 5 நகரங்களில் உள்ள 8 மைதானங்களில் போட்டி அரங்கேறுகிறது. அரபு நாட்டில் முதல்முறையாக நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா … Read more