ஒரு ஆண்டில் அதிக சிக்சர்கள்: 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை

திருவனந்தபுரம், திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 4-வது வரிசையில் களம் கண்ட இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் திரட்டி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். கடைசி வரை நிலைத்து நின்று அசத்திய சூர்யகுமார் யாதவ் சர்வதேச 20 ஓவர் போட்டியில் … Read more

டி20 போட்டியில் ஒரு வருடத்தில் அதிக ரன்கள்- ஷிகர் தவானின் சாதனையை முறியடித்தார் சூர்யகுமார் யாதவ்

திருவனந்தபுரம், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று நடந்த முதல் டி20 போட்டியிலும் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சமீப காலமாக தொடர்ந்து ரன்களை குவித்து வரும் அவர். டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் துருப்பு சீட்டாக விளங்குகிறார். நேற்றைய போட்டியில் 50 ரன்களை எடுத்ததை தொடர்ந்து இந்த வருடம் 732 ரன்களை எடுத்துள்ள அவர், சர்வதேச டி20 … Read more

தென் ஆப்பிரிக்க அணியின் 5 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தியது திருப்பு முனையாக அமைந்தது – ரோகித் சர்மா

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக டி … Read more

தேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

புதுடெல்லி, சர்வதேச விளையாட்டு போட்டியில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல்ரத்னா, அர்ஜூனா விருது, சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா, விளையாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்போருக்கு வாழ்நாள் சாதனையாளர்களுக்கு தயான் சந்த் உள்ளிட்ட தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் வீரர், வீராங்கனைகளின் கடந்த 4 ஆண்டு சாதனைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். விருதுக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு விருதுடன், ஊக்கத்தொகையும் கிடைக்கும். இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுக்கு தகுதி படைத்தவர்கள் செப்டம்பர் 27-ந் … Read more

7,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் தேசிய விளையாட்டு போட்டி – குஜராத்தில் இன்று தொடக்கம்

ஆமதாபாத், இந்தியாவில் கவுரவமிக்க போட்டிகளில் ஒன்றான தேசிய விளையாட்டு 1924-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட இந்த போட்டி பின்னர் நடைமுறை சிக்கல் காரணமாக சில சமயங்களில் குறிப்பிட்ட காலத்துக்குள் நடைபெறவில்லை. கடைசியாக 35-வது தேசிய விளையாட்டு 2015-ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்றது. அதன் பிறகு தேசிய விளையாட்டு போட்டி கோவாவில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்ட இந்த … Read more

இரானி கோப்பை கிரிக்கெட்: ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு ஹனுமா விஹாரி கேப்டன்

புதுடெல்லி, 2019-20-ம் ஆண்டுக்கான ரஞ்சி சாம்பியன் சவுராஷ்டிரா-ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில் வருகிற 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக 3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இரானி கோப்பை போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான ரெஸ்ட் ஆப் இந்தியா அணியை, இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. டெஸ்ட் பேட்ஸ்மேனான ஹனுமா விஹாரி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். … Read more

5வது டி20 போட்டி: 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி

லாகூர், இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. 4 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்றுள்ளன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலை வந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5வது டி-20 போட்டி லாகூரில் நேற்று இரவு தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து … Read more

கே.எல். ராகுல் அணிக்காக தனது விக்கெட்டை தியாகம் செய்தார் – சுனில் கவாஸ்கர்

மும்பை, சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் முதல் ஆட்டத்தில் 55 ரன் எடுத்தார். 2-வது ஆட்டத்தில் 10 ரன்னிலும், 3-வது ஆட்டத்தில் ஒரு ரன்னிலும் அவுட் ஆனார். அடுத்த மாதம் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி நடைபெறும் சூழலில் லோகேஷ் ராகுல் பார்ம் பற்றி சிலர் விமர்சனங்களை முன் வைத்தனர். இந்த நிலையில் லோகேஷ் ராகுலுக்கு முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். … Read more

அமெரிக்க செஸ் வீரர் நீமான் மோசடி செய்து என்னை வீழ்த்தினார் – உலக சாம்பியன் கார்ல்சென் பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி, செஸ் விளையாட்டில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற சாதனையாளரும், ‘நம்பர் ஒன்’ வீரருமான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) அமெரிக்காவில் நடந்த சின்கெபீல்டு கோப்பைக்கான செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் ஹான்ஸ் நீமானிடம் (அமெரிக்கா) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதன் மூலம் கிளாசிக்கல் செஸ் போட்டியில் 53 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் வந்த கார்ல்செனின் வீறுநடை முடிவுக்கு வந்தது. மேலும் 6 சுற்றுகள் எஞ்சியிருந்த நிலையில் சின்கெபீல்டு போட்டியில் இருந்து கார்ல்சென் திடீரென விலகினார். பின்னர் … Read more

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் – இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்

திருவனந்தபுரம், இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று அமர்க்களப்படுத்திய இந்திய அணி சூட்டோடு சூடாக தென்ஆப்பிரிக்காவுடன் மோத உள்ளது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு … Read more