தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி; ஐதராபாத்தில் இன்று நடக்கிறது

கடைசி 20 ஓவர் கிரிக்கெட் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நடந்த மழை பாதிப்புக்குள்ளான 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த … Read more

சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: இந்திய வீரர் அபய் சிங் 'சாம்பியன்'

சென்னை, சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் இந்திய தொடருக்கான சென்னை சுற்று சென்னையில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் அபய் சிங் 11-4, 11-3, 11-4 என்ற நேர்செட்டில் எகிப்தின் காலித் லாபிப்பை எளிதில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் எகிப்து வீராங்கனை கென்சி அய்மான் 11-7, 11-2, 11-6 என்ற நேர்செட்டில் இந்தியாவின் சுனைனா குருவில்லாவை வீழ்த்தி சாம்பியன் … Read more

துல்லியமாக யார்க்கர் வீசிய பும்ரா: ஆட்டமிழந்துவிட்டு பாராட்டு தெரிவித்த ஆரோன் பின்ச்- வைரல் வீடியோ

நாக்பூர், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இன்று 2-வது டி20 போட்டி நடைபெற்றது. ஆடுகளத்தில் ஈரப்பதம் காரணமாக போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு 91 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் … Read more

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் முகுருஜா அதிர்ச்சி தோல்வி

டோக்கியோ, பான் பசிபிக் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 4-6, 2-6 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 30-வது இடத்தில் உள்ள லிட்மிலா சாம்சோனோவாவிடம் (ரஷியா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்ற கால்இறுதி ஆட்டங்களில் ரஷியாவின் வெரோனிகா குடெர்மிடோவா 6-7 (4-7), 7-6 (8-6), 6-1 என்ற செட் கணக்கில் … Read more

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

புதுக்கோட்டை காரையூர் அருகே உள்ள மேலத்தானியத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டன. இதில் முதல் பரிசை திருமலைகுடி அணியினரும், 2-ம் பரிசை மேலத்தானியம் அணியினரும், 3-ம் பரிசை வையாபுரிப்பட்டி அணியினரும், 4-ம் பரிசை பொன்னமராவதி அணியினரும் தட்டி சென்றனர். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் … Read more

குறுவட்டார தடகள போட்டி: ஸ்ரீகலைவாணி பள்ளி சாம்பியன்

தென்காசி திருவேங்கடம்: சங்கரன்கோவில் குறு வட்டார அளவிலான தடகள போட்டிகள் கரிவலம்வந்தநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பாக 2 நாட்கள் நடைபெற்றன. இதில் சங்கரன்கோவில் வட்டாரத்தில் உள்ள 38 அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் ஆண்கள், பெண்கள் அணிகள் கலந்து கொண்டன, இதில் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்கள், பெண்கள் அணி 100 மீட்டர் ஓட்டம், நானூறு மீட்டர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று விளையாடின. இதில் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி … Read more

அடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வழக்கமான நடைமுறையில் நடக்கும் – கங்குலி தகவல்

கொல்கத்தா, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச்சில் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த போட்டி முடிந்ததும் ஆண்களுக்கான ஐ.பி.எல். தொடங்கும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவர் பதவிக்கு எனது பெயரும் அடிபடுவது குறித்து கேட்கிறீர்கள். இந்த விஷயத்தில் எதுவும் எனது கையில் இல்லை. இந்திய அணி ஒன்றிரண்டு ஆட்டங்களில் தோற்பது குறித்து … Read more

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: கரோலினா பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி

டோக்கியோ, பான் பசிபிக் ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், தற்போது தரவரிசையில் 20-வது இடத்தில் இருப்பவருமான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 3-6, 4-6 என்ற நேர்செட்டில் 46-வது இடத்தில் உள்ள குரோஷியாவின் பெட்ரா மார்டிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹாடட் மையாவுக்கு எதிராக … Read more

2-வது 20 ஓவர் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

நாக்பூர், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று ( வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி … Read more

மாவட்ட அளவிலான செஸ் போட்டி: கூடலூர் மாணவிகள் சாம்பியன்

நீலகிரி கூடலூர் ஊட்டியில் மாவட்ட சதுரங்க கழகம் நடத்திய மாவட்ட அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி உதகை ஒய்.எம். சி. ஏ. பள்ளியில் நடைபெற்றது. 9, 11,13, 15, 17 வயதுக்குட்பட்ட மற்றும் பொது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. 9 வயதுக்கான போட்டிகளில் கூடலூர் முதல் மைல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த ஆதினி மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். `11 வயதுக்கான மாணவிகளுக்கான போட்டிகளில் கலந்து கொண்ட டியானி 2-ம் … Read more