டி.என்.பி.எல்: திண்டுக்கல்லுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை அணி வெற்றி..!

திண்டுக்கல், 6-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் நடந்தது. அடுத்த கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் விஷால் வைத்யா … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: நடால், கிர்கியோஸ் அரையிறுதிக்கு தகுதி..!

லண்டன், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், அமெரிக்காவின் டெய்லர் பிட்சுடன் மோதினார். ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் மற்றும் 3வது செட்டை டெய்லரும், 2வது மற்றும் 4வது செட்டை நடாலும் கைப்பற்றினர். இந்த நிலையில் வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை நடால் வென்றார். இறுதியில் 3-6, 7-5, 3-6, … Read more

திருச்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி..!

நத்தம் 6-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் நடந்தது. அடுத்தகட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற 12-வது ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. சேப்பாக் … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: ஹாலெப், ரைபகினா அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

லண்டன், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார். இந்த போட்டியில் ஹாலெப் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் அனிசிமோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினா, ஆஸ்திரேலிய வீராங்கனை அஜிலா டாம்ஜனோவிக்குடன் மோதினார். இந்த போட்டியில் அஜிலாவை 4-6, 6-2, 6-3 … Read more

குமாரபாளையம் அருகே சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

நாமக்கல் குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே உள்ள சாணார்பாளையம் சக்தி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா ஆகம முறைப்படி நேற்று நடைபெற்றது. இதையொட்டி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், முளைப்பாரி அழைத்தல், யாகசாலை வழிபாடு, நான்கு கால பூஜைகள் போன்ற ஆன்மீக சடங்கு, சம்பிரதாயங்கள் நடைபெற்றன. நேற்று அதிகாலை மங்கள இசை, விநாயகர் பூஜை, மகா பூர்ணா குதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து … Read more

டிஎன்பிஎல்: திருச்சி அணிக்கு 204 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் நடந்தது. அடுத்தகட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.இன்று நடைபெறும் 12-வது ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.இதில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் கவுசிக் … Read more

எங்களை கண்டு இனி எதிரணி பயப்படுவார்கள்- இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்

பர்மிங்காம் டெஸ்டில் 378 ரன்கள் இலக்கை விரட்டி பிடித்த பிறகு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், ‘வீரர்கள் இது போன்று விளையாடும் போது எனது பணி எளிதாகி விடுகிறது. என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவு இருந்து விட்டால் இத்தகைய இலக்கை அடைவது எளிது. 5 வாரங்களுக்கு முன்பு 378 ரன்கள் இலக்கு என்பது அச்சத்தை அளித்திருக்கும். ஆனால் இப்போது எல்லாமே நன்றாக இருக்கிறது. எல்லா பெருமையும் பேர்ஸ்டோ, ஜோ ரூட்டையே சாரும். இங்கிலாந்து மண்ணில் … Read more

விம்பிள்டன் டென்னிஸ் – ஜோகோவிச், நூரி அரையிறுதிக்கு முன்னேறினர்

லண்டன், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார். இதில் முதல் இரு செட்களை 7-5, 6-2 என சின்னர் கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அதிரடியாக ஆடி 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் அடுத்த 3 சுற்றுகளை வென்றார். இதன்மூலம் ஜோகோவிச் அரையிறுதிச் … Read more

நடுவரின் தவறான முடிவுக்காக சிந்துவிடம் வருத்தம் தெரிவித்த ஆசிய பேட்மிண்டன் கூட்டமைப்பு

பிலிப்பைன்சில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-13, 19-21, 16-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் அகானே யமாகுச்சியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கைப்பற்றிய சிந்து 2-வது செட்டில் 14-11 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது போட்டி நடுவர் சிந்துவுக்கு ஒரு புள்ளியை அபராதமாக விதித்தார். அதாவது அந்த புள்ளி எதிராளி கணக்கில் சேர்க்கப்பட்டது. சர்வீஸ் … Read more

ஆஸ்திரேலிய பெண்கள் அணி சாதனையை முறியடித்த இந்திய பெண்கள் அணி

பல்லேகல்லே, இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக காஞ்சனா 46 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக ஷவாலி வர்மா-மந்தானா ஆடினர். 25.4 ஓவரில் இந்திய அணி விக்கெட் ஏதும் … Read more