அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணியில் அவரை சேர்த்திருக்க வேண்டும் – சுனில் கவாஸ்கர்

புதுடெல்லி, அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி அந்த அணிக்கு எதிராக இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக புவனேஸ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் போட்டி 26-ந் தேதியும், 2-வது ஆட்டம் 28-ந் தேதியும் நடைபெறுகிறது. இந்திய அணியில் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் … Read more

விம்பிள்டன் தகுதிச்சுற்றுப் போட்டி : இந்திய வீரர்கள் தோல்வி

கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந் தேதி முதல் ஜூலை 10-ந் தேதி வரை நடக்கிறது.விம்பிள்டன் போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது இன்று நடைபெற்ற தகுதி சுற்று முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், செக் குடியரசின் கோப்ரிவாவிடம் 7-5,6-4 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார் . மற்றோரு இந்திய வீரரான யுகி பாம்ப்ரி,தகுதி சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் மிரால்லஸிடம் 7-5, 6-1 என நேர் செட்களில் தோல்வி அடைந்தார் … Read more

105 வயதில் 100 மீட்டர் தடகள போட்டியில் கலந்து கொண்டு அசத்திய மூதாட்டி..!!

வதோதரா, குஜராத் மாநிலம் வதோதராவில் தேசிய ஓபன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது, இதில் 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் 105 வயது மூதாட்டி ராம்பாய் என்பவர் கலந்து கொண்டார். 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் தனிநபராக கலந்து கொண்டு ராம்பாய் அசத்தியுள்ளார். 45.40 வினாடிகளில் 100 மீட்டர் இலக்கை 105 வயதில் எட்டி அவர் புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் அவர் 200 மீட்டர் ஓட்டத்தில் 1 நிமிடம் 52.17 வினாடிகளில் இலக்கை கடந்து அசத்தினார். … Read more

4வது ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு

கொழும்பு, இலங்கை – ஆஸ்திரேலியா இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளில் இலங்கை அணி 2 போட்டிகளிலும் .ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 4வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது..இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் … Read more

விபத்தில் சிக்கியது கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சொகுசு கார்

போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தாட்ட உலகில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது. கால்பந்தாட்டத்தை தாண்டி ரொனால்டோ ஒரு கார் பிரியர் ஆவார். இவரின் கேரேஜில் பல விலையுயர்ந்த கார்கள் வரிசைகட்டி நிற்கின்றன.இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் ஸ்பெயினில் விடுமுறையில் இருக்கிறார் இந்த நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரூ .16 கோடி மதிப்பிலான புகாட்டி வேய்ரான் கார் இன்று விபத்தில் சிக்கியுள்ளது. ஸ்பெய்னின் .மஜோர்காவில் உள்ள ஒரு வீட்டின் மீது … Read more

காமன்வெல்த் போட்டிகள் 2022 : மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆக்கி அணி அறிவிப்பு

புதுடெல்லி, 2022ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட் முதல் முறையாக இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பெயர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. மன்பிரீத் சிங் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஹர்மன்ப்ரீத் … Read more

நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பீட்டர் சீலர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

அம்ஸ்டர்டம், நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பீட்டர் சீலர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் முதுகுவலி பிரச்சனையால் அவதிப்பட்டார். இந்த நிலையில், அவர் தனது ஓய்வு முடிவினை அறிவித்து உள்ளார். பீட்டர் சீலர் நெதர்லாந்து அணிக்காக 57 ஒருநாள் மற்றும் 77 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2011 உலகக் கோப்பையில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கு எதிராக அவர் 10 ஓவர்களில் 53 … Read more

"அதிக எடை உடையவராக இருக்கிறார் " – ரிஷப் பண்ட் உடற்தகுதி குறித்து முன்னாள் பாக். வீரர் பேச்சு

கராச்சி, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் ரிஷப் பண்ட் கேப்டன்சி குறித்து பலர் விமர்சனம் செய்தனர். இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. குறிப்பாக அவர் கேப்டன் பொறுப்பை ஏற்ற காரணத்தால் அவர் தனது தனிப்பட்ட பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த திணறி வருவதாக விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா ரிஷப் பண்ட் குறித்து … Read more

23 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்தியா அபாரம்!

டப்ளின், 23 வயதுக்குட்பட்டோருக்கான 5 நாடுகள் பங்கேற்கும் யூனிபர் யூனிபர் யு-23 ஆக்கி போட்டிகள் அயர்லாந்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆக்கி தொடரில் பங்கேற்க, இந்திய ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி அயர்லாந்து சென்றுள்ளது. இப்போட்டியின் லீக் சுற்றில் இந்திய அணி அயர்லாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் உக்ரைன் அணிகளுடன் விளையாடுகிறது. யூனிபர் யு-23 ஆக்கி போட்டி தொடரில், நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது. மேலும், மகளிர் ஜூனியர் … Read more

மழையால் கைவிடப்பட்ட பெங்களூரு டி20: டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படுமென கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

பெங்களூரு, இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டியானது பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் இந்திய அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, நான்காம் ஓவரில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால், போட்டியை காண வந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில், போட்டியை காண வந்த ரசிகர்களுக்கு 50 சதவீத கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று கர்நாடக கிரிக்கெட் சங்கம் அறிவித்து உள்ளது. தினத்தந்தி Related Tags : பெங்களூரு டி20 மழை … Read more