விளையாட்டில் திறமையை வளர்த்தால் பெரிய இடத்தை அடையலாம் – முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப்பதான்

சேலம், சேலம் பழைய சூரமங்கலம் ராமலிங்க வள்ளலார் பள்ளி வளாகத்தில் பதான்ஸ் கிரிக்கெட் அகாடமியின் (CAP) 31-வது பயிற்சி மையம் தொடக்க விழா இன்று நடந்தது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பதான்ஸ் கிரிக்கெட் அகாடமியின் இயக்குனருமான யூசுப் பதான் கலந்து கொண்டு கிரிக்கெட் அகாடமி மையத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கிரிக்கெட் பயிற்சி பெறும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இது குறித்து கிரிக்கெட் வீரர் யூசுப்பதான் நிருபர்களிடம் கூறியதாவது:- சேலத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள … Read more

காமன்வெல்த் போட்டியில் இருந்து நீக்கம் : மத்திய அரசு மீது வழக்கு தொடர்ந்த அர்ச்சனா காமத்

பெங்களூரு, உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் பெண்கள் இரட்டையர் பிரிவில் 4ம் இடத்தில் இருக்கும் வீராங்கனை இந்தியாவின் அர்ச்சனா காமத். இவர் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறுவதில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அர்ச்சனா முதலில் டேபிள் டென்னிஸ் அணியில் சேர்க்கப்பட்டார், ஆனால் பிறகு இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு வகுத்துள்ள தேர்வு அளவுகோல்களை பூர்த்தி செய்யாததால் நிர்வாகிகள் குழுவால் அவர் கைவிடப்பட்டார். இந்த நிலையில் அர்ச்சனா … Read more

சீனாவின் மாகாணமாக தைவானை குறிப்பிட்ட கத்தார் – உலகக்கோப்பை படிவத்தில் மாற்றம்..!!

தோகா, ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை இந்த ஆண்டு நவம்பர் மாதம் கத்தாரில் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு கத்தார் சார்பாக பட்டியலிடப்பட்ட பார்வையாளர்களுக்கான அதிகாரபூர்வ விண்ணப்பப் படிவம் ஒன்றில் “தைவான், சீனாவின் மாகாணம்” என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு தைவான் அமைச்சகம் சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பார்வையாளர்கள் அனைவரும் பெற வேண்டிய அடையாள அட்டை இணையதளத்தில் கீழ்தோன்றும் ஆன்லைன் மெனுவில் ‘தைவான், சீனாவின் மாகாணம்’ என்பதற்குப் பதிலாக ‘தைவான்’ என தற்போது … Read more

இந்திய கால்பந்து அணியின் பொற்காலத்தின் ஒரு பகுதியாக இருக்க காத்திருக்கிறேன்- சாஹல் அப்துல் சமத்

கொல்கத்தா, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு 13 அணிகள் நேரடியாக தகுதி பெற்று இருந்தன. மீதம் 11 அணிகளை தேர்வு செய்வதற்கான 3-வது கட்ட தகுதி சுற்று போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி தங்கள் கடைசி போட்டியில் ஹாங்காங் அணியை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதி ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது. ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணி தொடர்ந்து 2-வது முறையாக … Read more

பார்வை குறைபாடு உள்ளோருக்கான கிரிக்கெட்டில் ஆஸி. வீரர் புதிய சாதனை

பிரிஸ்பேன், பிரிஸ்பேனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான பார்வை குறைபாடு உள்ளோருக்கான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 40 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 542 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஸ்டெபன் நீரோ 309 ரன்கள் (140 பந்து, 49 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார். இந்த வகையிலான கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை நீரோ நிகழ்த்தினார். இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 270 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தினத்தந்தி Related … Read more

கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டு சென்ற இந்திய அணி

மும்பை, இந்திய – தென் ஆப்பிரிக்க இடையிலான 20 ஓவர் தொடர் முடிந்த பிறகு அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. 2 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பெயரை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. இந்த மாதம் 26 மற்றும் 28 ஆம் தேதிகளில் இந்த டி20 போட்டி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 1 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 … Read more

"யுவராஜ் சிங் நிலைதான் அவருக்கும் " – இளம் வீரர் மீதான விமர்சனங்களுக்கு கபில் தேவ் பதிலடி

மும்பை, இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் இஷான் கிஷான் 2 அரைசதங்கள் அடித்து அசத்தியுள்ளார். இந்த தொடருக்கு முன்பாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை 15 கோடி கொடுத்து வாங்கியது. கடந்த … Read more

நீலகிரி வீராங்கனை தேர்வு

நீலகிரி ஊட்டி மஞ்சூர் அருகே உள்ள தங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மதுமிதா. கால்பந்து வீராங்கனை. தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் கால்பந்து வீரர், வீராங்கனைகள் தேர்வு தொடர்பான போட்டி, சென்னையில் நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் மதுமிதா கலந்துகொண்டார். அதில் சிறப்பாக செயல்பட்ட அவர், தமிழ்நாடு அணிக்கான போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டார். வருகிற 19-ந் தேதி முதல் அடுத்த மாதம்(ஜூலை) 4-ந் தேதி வரை அசாமில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் … Read more

பாரா பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் : முதல் நாளில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்

பியோங்டேக், 2022 ஆம் ஆண்டிற்கான ஆசியா ஓசியானியா பாரா பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் தென் கொரியாவின் பியோங்டேக் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற முதல் நாள் போட்டியில் பெண்களுக்கான 41 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மன்பிரீத் கவுர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 2 சுற்றுகளின் முடிவில் மொத்தம் 173 கிலோ எடையை தூக்கி அவர் சாதனை படைத்துள்ளார். Glimpses of India’s Manpreet Kaur winning bronze medal at … Read more

இலங்கைக்கு எதிரான 2 ஆவது ஒருநாள்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

பல்லேகல்லே, ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. தினத்தந்தி Related Tags : இலங்கை ஆஸ்திரேலியா … Read more