ஐ.பி.எல். டி.வி. ஒளிபரப்பு, டிஜிட்டல் உரிமம் மொத்தம் ரூ.48,390 கோடிக்கு விற்பனை : பிசிசிஐ அறிவிப்பு

மும்பை, அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐ.பி.எல். டி.வி. ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமம் மொத்தம் ரூ.48, 390 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை அடுத்த 5 ஆண்டுக்கு (2023 முதல் 2027-ம் ஆண்டு வரை) டி.வி. ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமம் வழங்குவதற்கான மின்னணு ஏலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முன்னணி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் தங்களது தொகையை குறிப்பிட்டு போட்டிபோட்டு ஏலம் கேட்டன. … Read more

ஈட்டி எறிதலில் புதிய தேசிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா

பின்லாந்து பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதன் மூலம் அவர் இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் 89.83 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து பின்லாந்தின் ஆலிவர் ஹெலாண்டருக்க தங்கப் பதக்கம் கிடைத்தது. டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு நீரஜ் விளையாடும் முதல் போட்டி இதுவாகும். டோக்கியோ ஒலிம்பிக்கின் போது 87.58 மீட்டர் … Read more

தேசிய சீனியர் தடகளம்: தமிழக அணி 'சாம்பியன்'

சென்னை, சென்னையில் நடந்த தேசிய சீனியர் தடகள போட்டியில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடைசி நாளில் தமிழக வீரர் பிரவீன், வீராங்கனைகள் தனலட்சுமி, வித்யா ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர். மாநிலங்களுக்கு இடையிலான 61-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 5 நாட்கள் நடந்தது. இதில் கடைசி நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் தனலட்சுமி (23.27 வினாடி) நட்சத்திர வீராங்கனை … Read more

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி:இந்திய அணி சாம்பியன்

காத்மாண்டு, சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேபாளம் நாட்டில் உள்ள காத்மாண்டு முல்பானி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான 3 தொடர் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்று கோப்பையை பெற்றது. இந்த தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் தொடர் ஆட்டநாயகன் விருதை இந்திய அணியின் கேப்டன் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த செய்யது ஷா அஜிஸ் பெற்றார். சிறந்த பந்துவீச்சாளர் … Read more

சர்வதேச பாரா நீளம் தாண்டுதல் போட்டியில் உலக சாதனை படைத்த ஜெர்மனி விரர்

சிட்னி, ஆஸ்திரேலியாவின் இன்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற சர்வதேச பாரா ஒலிம்பிக் போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னனி வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த வீரர் மார்க்கஸ் ரெஹ்ம், 8.66 மீட்டர் தூரத்தை தாண்டினார். இதன் மூலம் புதிய உலக சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு 8.62 மீட்டர் தூரத்தை தாண்டி மார்க்கஸ் ரெஹ்ம் சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் தற்போது 8.66 மீட்டர் தூரத்தை தாண்டி, தனது முந்தையை சாதனையை அவரே முறியடித்துள்ளார். தினத்தந்தி … Read more

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை : இந்திய அணியை பின்னுக்கு தள்ளியது பாகிஸ்தான்..!!

துபாய், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் அணி 4-வது இடத்தை பிடித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதனால் புள்ளி பட்டியலில் அந்த அணி இந்திய அணியை விட 1 ரேட்டிங் புள்ளிகள் கூடுதலாக பெற்று 4-வது இடத்தை … Read more

ஏ.டி.பி டென்னிஸ் தரவரிசை : நோவக் ஜோகோவிச்சை பின்னுக்கு தள்ளி மெத்வதேவ் முதலிடம்..!!

லண்டன், சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலை ஏ.டி.பி. வெளியிட்டுள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்-சை பின்னுக்கு தள்ளி ரஷியாவின் டேனில் மெத்வதேவ் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 7,950 புள்ளிகள் உடன் மெத்வதேவ் முதலிடத்துக்கு முன்னேறினார். இந்த பட்டியலில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7,075 புள்ளிகளுடன் 2-ம் இடத்துக்கு முன்னேறினார். தொடர்ந்து பல ஆண்டுகளாக முதல் இரண்டு இடங்களுக்குள் இருந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6,770 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார். பிரெஞ்சு … Read more

"கனா படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது" – ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் அணியின் கேப்டன் தீர்த்தா

துபாய், மகளிர் ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட ஐக்கிய அரபு அமீரக அணி அண்மையில் தகுதி பெற்றது. அந்த அணியின் கேப்டனும், தமிழகத்தில் பிறந்தவருமான தீர்த்தா சதீஷ் அணி வெற்றிக்கு வழிநடத்தி பலரது கவனத்தை ஈர்த்தார். அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், பள்ளி பருவத்தில் ஆர்வத்துடன் கிரிக்கெட் விளையாடி வந்ததாகவும், ஜூனியர் அணியில் விளையாட முதலில் வாய்ப்பு வந்த போது தயக்கமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். எனினும் கனா படம் தனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், … Read more

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: வாழ்வா-சாவா நிலையில் இந்தியா..!

விசாகப்பட்டினம், பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெல்லியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், கட்டாக்கில் நடந்த 2-வது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள … Read more

ஆசிய கோப்பை கால்பந்து போட்டி: இந்திய வீரர்களை தாக்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள்

ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களை திடீரென ஆப்கானிஸ்தான் வீரர்கள் தாக்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஆசிய கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியா ஆப்கானிஸ்தானை 2- 1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றிப்பெற்றது. இந்தநிலையில், இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு நடுவே முதலில் வாக்குவாதமாக நடைபெற்ற சண்டை பின்னர் கைகலப்பாக மாறியது. ஒரு ஆப்கானிஸ்தான் ரிசர்வ் வீரர் இந்திய … Read more