உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறுவது யார்? ஆஸ்திரேலியா-பெரு அணிகள் இன்று மோதல்..!

தோகா, 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 21-ந் தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 32 அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் கத்தார் மட்டும் நேரடியாக தகுதி பெற்றது. மற்ற அணிகள் அனைத்தும் தகுதி சுற்று மூலமே தகுதி பெறும். இதுவரை பிரேசில், பெல்ஜியம், ஜெர்மனி, இங்கிலாந்து, போர்ச்சுகல், ஜப்பான், ஈரான் உள்பட 30 அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன. … Read more

புரோ ஆக்கி லீக்: பெல்ஜியம் அணியிடம் இந்தியா தோல்வி

ஆன்ட்வெர்ப், 9 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி, ஒலிம்பிக் சாம்பியன் பெல்ஜியத்துடன் மீண்டும் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. பெல்ஜியம் அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் வென்று இருந்தது நினைவுகூரத்தக்கது. தினத்தந்தி Related Tags : FIH Hockey Pro League … Read more

உலக இளையோர் பளுதூக்குதல்: இந்தியாவுக்கு 2 வெள்ளிப்பதக்கம்

புதுடெல்லி, உலக இளையோர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 40 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அகன்ஷா ‘ஸ்னாட்ச்’ முறையில் 59 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 68 கிலோவும் என மொத்தம் 127 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். இதேபோல் ஆண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் விஜய் பிரஜாபதி ‘ஸ்னாட்ச்’ முறையில் 78 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 97 கிலோவும் … Read more

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவுக்கு எதிரான பாலியல் வழக்கு தள்ளுபடி

லாஸ் ஏஞ்சல்ஸ், போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை அமெரிக்க கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 2009ல் அமெரிக்காவை சேர்ந்த கேத்ரின் மேயோர்கா லாஸ்வேகாஸ் ஓட்டலில் வைத்து ரொனால்டோ தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடுத்து இருந்தார். ஆனால் இதனை ரொனால்டோ மறுத்து வந்தார். இந்த வழக்கு லாஸ் வேகாஸ் நகர கோர்ட்டில் நடைபெற்று வந்தது இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது .வழக்கை விசாரித்த நீதிபதி … Read more

தேசிய சீனியர் தடகளம்: 100 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸ் சாம்பியன்..!

சென்னை, மாநிலங்களுக்கு இடையிலான 61-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. உலக தடகளம் மற்றும் காமன்வெல்த் போட்டிக்கு தகுதி சுற்றாகவும் அமைந்துள்ள இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 700-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 2-வது நாளான நேற்று இந்தியாவின் மின்னல்வேக வீரர் யார் என்பதை நிர்ணயிக்கும் 100 மீட்டர் ஓட்டத்தில் அசாம் வீரர் அம்லான் போர்கோஹைன் (10.47 வினாடி) முதலிடத்தை பிடித்து அசத்தினார். தமிழக … Read more

காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய குத்துச்சண்டை அணிக்கு நிகாத், லவ்லினா தேர்வு..!

புதுடெல்லி, காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி டெல்லியில் நடந்தது. இதில் 50 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் நடப்பு உலக சாம்பியனான நிகாத் ஜரீன் 7-0 என்ற கணக்கில் அரியானாவின் மீனாட்சியை தோற்கடித்து முதலிடம் பிடித்து அணியில் தனது இடத்தை சொந்தமாக்கினார். 70 கிலோ எடைப்பிரிவின் இறுதி … Read more

தென்ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2-வது போட்டி இன்று நடக்கிறது

கட்டாக், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டெல்லியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. லோகேஷ் ராகுல் காயத்தால் விலகியதால் கடைசிநேரத்தில் … Read more

ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று: ஆப்கானிஸ்தானை வென்றது இந்தியா

கொல்கத்தா, 18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான 3-வது கட்ட தகுதி சுற்றின் ‘டி’ பிரிவு ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் தனது தொடக்க ஆட்டத்தில் கம்போடியாவை தோற்கடித்த இந்திய அணி நேற்று ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி 5 நிமிடங்கள் தான் முடிவை தீர்மானிப்பதாக அமைந்தது. 86-வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி ‘பிரிகிக்’ வாய்ப்பில் பிரமாதமாக கோல் போட்டார். அடுத்த இரு நிமிடங்களில் ஆப்கானிஸ்தானின் ஜூபைர் அமிரி பதிலடி … Read more

நார்வே செஸ் குரூப் ஓபன் தொடர் : சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா..!

நார்வே, நார்வேயில் நடந்த குரூப் ஏ ஓபன் செஸ் போட்டித் தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரும் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். மொத்தம் 9 சுற்றில் 6 வெற்றி ,3 டிரா என 7.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் ஆனார் பிரக்ஞானந்தா.கடைசி 9வது சுற்றில் இந்தியாவின் பிரனீத்தை அவர் எதிர்கொண்டார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா 49-வது நகர்த்தலில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார் . ஏற்கனவே , மாஸ்டர்ஸ் செஸ் … Read more

புரோ ஆக்கி லீக்: இந்தியா-பெல்ஜியம் இன்று மோதல்

ஆன்ட்வெர்ப், 9 அணிகள் இடையிலான 3-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். இந்தியா-பெல்ஜியம் அணிகள் இடையிலான 2 லீக் ஆட்டங்கள் பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப் நகரில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டி தொடரில் நெதர்லாந்து அணி 28 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா, பெல்ஜியம் அணிகள் 27 புள்ளிகளுடன் முறையே 2-வது, 3-வது … Read more