கொரோனா அச்சம் : 3-வது முறையாக அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் ரத்து

ஒரு சில நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் பேட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன . இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவில் நடக்க இருந்த இந்த பேட்மிண்டன் பேட்டிகள் கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக 2020, 2021 ஆம் ஆண்டுகள் போட்டிகள் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . தினத்தந்தி Related Tags : அமெரிக்க ஓபன் பேட்மிண்டன்

ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணி 647 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' – சுவேத் பார்கர் இரட்டை சதம் அடித்தார்

பெங்களூரு, 87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4 கால்இறுதி ஆட்டங்கள் (5 நாள் ஆட்டம்) பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புறபகுதியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் மும்பை அணி, உத்தரகாண்டை சந்தித்தது. முதலில் பேட் செய்த மும்பை அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்திருந்தது. அறிமுக வீரராக களம் கண்ட சுவேத் பார்கர் 104 ரன்களுடனும், சர்ப்ராஸ் கான் 69 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 2-வது … Read more

இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை- ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்

கொழும்பு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டியை கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. அதன்படி முதல் டி20 கிரிக்கெட் போட்டியானது கொழும்புவில் உள்ள பிரேமதேசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இதே மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இன்று … Read more

பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி

முல்தான், பாகிஸ்தானுக்கு சென்றுள்ள நிகோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி முல்தானில் இன்று நடக்கிறது. இந்த வாரத்தில் முல்தானில் 113 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எனவே வெயில் தான் இவ்விரு அணி வீரர்களுக்கும் கடும் சவாலாக இருக்கும். வெயிலின் தாக்குதலை சமாளிக்க சிறப்பு … Read more

ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது – பயிற்சியாளர் டிராவிட் பேட்டி

புதுடெல்லி, இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி நாளை இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்திய கேப்டன் ரோகித் சர்மா மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் விளையாடக்கூடிய … Read more

ஸ்டீபிள்சேஸ் பந்தயத்தில் அவினாஷ் புதிய தேசிய சாதனை

ரபாட், டயமண்ட் லீக் தடகள போட்டி மொராக்கோவில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தயத்தில் மராட்டியத்தை சேர்ந்த 27 வயது ராணுவ வீரரான அவினாஷ் சாபேல் 8 நிமிடம் 12.48 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து 5-வது இடத்தை பிடித்தார். அத்துடன் அவர் தனது சொந்த சாதனையை தகர்த்து புதிய தேசிய சாதனை படைத்தார். கடந்த மார்ச் மாதம் திருவனந்தபுரத்தில் நடந்த இந்தியன் கிராண்ட்பிரி போட்டியில் அவினாஷ் சாபேல் 8 நிமிடம் 16.21 … Read more

முதல் டி20 போட்டியில் இலங்கை- ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்

கொழும்பு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டியை கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. அதன்படி இன்று முதல் டி20 கிரிக்கெட் போட்டியானது நடைபெற உள்ளது. தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதேசா மைதானத்தில் இந்த போட்டியானது உள்ளூர் நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. தினத்தந்தி Related Tags : இலங்கை ஆஸ்திரேலியா டி20 Sri Lanka Australia T20

ஜோ ரூட்டால் தெண்டுல்கரின் இந்த சாதனையை முறியடிக்க முடியும்: ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் நம்பிக்கை

மெல்போர்ன், இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு ஜோரூட் முதல் போட்டியில் சதம் அடித்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி கிடைத்தது. அதோடு ஜோரூட் 10 ஆயிரம் ரன்னை தொட்டார். இந்த ரன்னை எடுத்த 14-வது வீரர் ஆவார். இந்த நிலையில் டெஸ்டில் அதிக ரன் எடுத்த தெண்டுல்கரின் (15,921) சாதனையை ஜோரூட் முறியடிப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- ஜோரூட் … Read more

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அபார வெற்றி

லண்டன், இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து 10 விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டி கிராண்ட்ஹொம் 42 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன், மேட் போட்ஸ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். … Read more

ரஞ்சி கிரிக்கெட்: ஜார்கண்டுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்கால் அணி 310 ரன்கள் குவிப்பு

பெங்களூரு, 87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. ஐ.பி.எல். போட்டிக்காக லீக் சுற்று முடிந்ததும் நிறுத்தப்பட்டு இருந்த ரஞ்சி கோப்பை போட்டியின் கால்இறுதி ஆட்டங்கள் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள மைதானங்களில் நேற்று தொடங்கியது. மழை காரணமாக 3 ஆட்டங்கள் சற்று தாமதமாக தொடங்கியது. இதில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் பெங்கால்-ஜார்கண்ட் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த ஜார்கண்ட் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த … Read more