கோவை: அகில இந்திய அளவிலான கூடைப்பந்து இறுதிப்போட்டி

கோவை: கோவை நேரு விளையாட்டு அரங்கில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பைக்கான 55-வது ஆண்டு ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி, சி.ஆர்.ஐ. கோப்பைக்கான 19-வது ஆண்டு பெண்களுக்கான அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கடந்த 29-ந் தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 9 அணிகள், பெண்கள் பிரிவில் 8 அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் அரையிறுதி போட்டிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் … Read more

கிரிக்கெட் போட்டி மூலம் இலங்கை மக்கள் முகத்தில் புன்னகையை கொண்டு வருவோம் – ஆரோன் பிஞ்ச் நம்பிக்கை

கொழும்பு, இலங்கைக்கு சென்றுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா-இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 7-ந்தேதி கொழும்பில் நடக்கிறது. இந்த தொடர் முடிந்ததும் அங்கு 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது. இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடுகிறது. இதற்கு மத்தியில் நடக்கும் இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், ‘நாங்கள் … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ரபெல் நடால்- கேஸ்பர் ரூட் மோதல்

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கி விட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில் நேற்றிரவு அரங்கேறிய முதலாவது அரைஇறுதியில் 13 முறை சாம்பியனும், 5-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), தரவரிசையில் 3-வது இடம் வகிப்பவருமான ஒலிம்பிக் சாம்பியன் (ஜெர்மனி) அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார். முதல் கேமிலேயே நடாலின் சர்வீசை முறியடித்து அமர்க்களமாக தொடங்கிய அலெக்சாண்டர் 4-2 என்று வலுவான முன்னிலை பெற்றார். … Read more

டி.என்.பி.எல். கிரிக்கெட்: 100 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி

நெல்லை, 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 23-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரை நெல்லை, சேலம், கோவை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடக்கிறது. நெல்லையில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நெல்லை ராயல் கிங்சை சந்திக்கிறது. இதையொட்டி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி நேற்று நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ டி.என்.பி.எல். கிரிக்கெட்டுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன. போட்டியை நேரில் … Read more

காமன்வெல்த் விளையாட்டு: இந்திய குத்துச்சண்டை அணி அறிவிப்பு

பாட்டியாலா, காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது. இதில் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் அணியை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டிகள் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நேற்று நடந்தது. தகுதி போட்டியில் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியவரான அமித் பன்ஹால் 51 கிலோ எடைப்பிரிவில் சர்வீசஸ் வீரர் தீபக்கை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்தார். இதே போல் உலக போட்டியில் பதக்கம் வென்றவரான … Read more

வங்காளதேச டெஸ்ட் அணிக்கு ஷகிப் அல்-ஹசன் மீண்டும் கேப்டன்

டாக்கா, வங்காளதேச டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் மொமினுல் ஹக் தொடர்ச்சியான தோல்வி மற்றும் மோசமான பேட்டிங் எதிரொலியாக சில தினங்களுக்கு முன்பு கேப்டன்ஷிப்பில் இருந்து விலகினார். இந்த நிலையில் வங்காளதேச அணியின் டெஸ்ட் கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் நேற்று மீண்டும் நியமிக்கப்பட்டார். துணை கேப்டனாக லிட்டான் தாஸ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 35 வயதான ஷகிப் அல்-ஹசன் டெஸ்ட் கேப்டன் பதவிக்கு வருவது இது 3-வது முறையாகும். முதலில் 2009-ம் ஆண்டில் இருந்து 2011-ம் … Read more

உலக கோப்பை கால்பந்து: தகுதி சுற்றில் உக்ரைன் அணி அபார வெற்றி

கிளாஸ்கோ, 32 அணிகள் இடையிலான 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கத்தாரில் நடக்கிறது. இந்த போட்டிக்கு 29 அணிகள் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 3 அணிகளை தேர்வு செய்வதற்கான இறுதிகட்ட தகுதி சுற்று இப்போது தொடங்கியுள்ளது. இதில் நேற்று முன்தினம் இரவு கிளாஸ்கோவில் நடந்த பிளே-ஆப் சுற்றில் உக்ரைன் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை சாய்த்தது. ஆன்ட்ரி யார்மோலென்கோ, ரோமன் யரெம்சுக், ஆர்டெம் டோவ்பைக் ஆகியோர் உக்ரைன் அணியில் கோல் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்த நியூசிலாந்து அணி

லண்டன், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இங்கிலாந்து-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட போட்டி என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 17 டெஸ்டில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. தொடர்ச்சியான தோல்வி எதிரொலியாக கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் விலகினார். புதிய கேப்டனாக ஆல்-ரவுண்டர் பென் … Read more

காதலியை கரம் பிடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர்..!!

ஆக்ரா, ஐபிஎல்லில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்து வருபவர் தீபக் சாஹர். ஐபிஎல்-லில் சிறப்பாக செயல்பட்டதால் பின்னர் இந்திய அணிக்கு தேர்வானார். இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.14 கோடிக்கு சிஎஸ்கே அணி இவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால் காயம் காரணமாக இவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை அணியின் ஒரு போட்டியின் போது தனது நீண்ட நாள் தோழியான … Read more

ஜூலையில் வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி: போட்டி அட்டவணை அறிவிப்பு

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணி ஜூலையில் வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. போட்டி அட்டவணையை இரு கிரிக்கெட் வாரியங்களும் நேற்று அறிவித்தன. அதன்படி முதல் ஒருநாள் போட்டி ஜூலை 22 ஆம் தேதியும், இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை 24 ஆம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜூலை 27 ஆம் தேதியும் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. … Read more