மகன் பற்றிய கேள்விக்கு சச்சின் டெண்டுல்கரின் பதில்

மும்பை, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகனும், இடக்கை வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜூன் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். தொடர்ந்து 2-வது ஆண்டாக அவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த ஆண்டில் ஐ.பி.எல்.-ல் அர்ஜூனின் ஆட்டத்தை பார்க்க ஆர்வமுடன் இருந்தீர்களா? என்ற கேள்விக்கு தெண்டுல்கர் பதில் அளிக்கையில், ‘இது வித்தியாசமான ஒரு கேள்வி. ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமல்ல. இந்த சீசனில் மும்பை அணிக்குரிய … Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்காளதேச அணி வித்தியாசமான உலக சாதனை

மிர்புர், இலங்கை- வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் 24 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து ஊசலாடிய நிலையில் விக்கெட் கீப்பர் லிட்டான் தாசும் (135 ரன்), முஷ்பிகுர் ரஹிமும் (115 ரன்) சதம் அடித்து அணியை காப்பாற்றினர். தொடக்க நாளில் அந்த அணி 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து … Read more

ஆசிய கோப்பை ஆக்கி: ஜப்பான் அணியிடம் இந்தியா தோல்வி

ஜகார்த்தா, 11-வது ஆசிய கோப்பை ஆக்கி தொடர் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 2-வது நாளான நேற்று நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஆசிய விளையாட்டு சாம்பியனான ஜப்பானை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 24-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஜப்பான் வீரர் கென் நகாயோஷி கோல் அடித்தார். 40-வது நிமிடத்தில் … Read more

'பிளே-ஆப்' சுற்று மழையால் பாதித்தால் சூப்பர் ஓவர் முறையில் முடிவு

புதுடெல்லி, 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. அதே மைதானத்தில் நாளை நடக்கும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் லக்னோ-பெங்களூரு அணிகள் சந்திக்கின்றன. 2-வது தகுதி சுற்று ஆட்டம் ஆமதாபாத்தில் 27-ந் தேதி நடக்கிறது. அதே மைதானத்தில் இறுதிப்போட்டி 29-ந் தேதி நடக்கிறது. இறுதிப்போட்டிக்கு மட்டும் மாற்று நாள் உண்டு. மற்ற போட்டிகளுக்கு மாற்று நாள் எதுவும் கிடையாது. இறுதிப்போட்டி … Read more

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வீரர் குசல் மென்டிஸ் நெஞ்சுவலியால் வெளியேறினார்

மிர்புர், இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த வங்காளதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மக்முதுல் ஹசன் ஜாய், தமிம் இக்பால் ஆகியோர் ரன் ஏதுமின்றியும் கேப்டன் மொமினுல் ஹக் 9 ரன்னிலும், நஜ்முல் ஹூசைன் 8 ரன்னிலும், ஷகிப் அல்-ஹசன் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த … Read more

100 மீட்டர் தடை ஓட்டத்தில் ஆந்திர வீராங்கனை ஜோதி புதிய சாதனை

புதுடெல்லி, லாக்போரா சர்வதேச தடகள போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஆந்திர வீராங்கனை ஜோதி யர்ராஜி 13.11 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன்பு கடந்த 10-ந் தேதி சைபிரஸ் நாட்டில் நடந்த போட்டியில் 22 வயதான ஜோதி 13.23 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தேசிய சாதனை படைத்து இருந்தார். தற்போது அவர் தனது சொந்த சாதனையை … Read more

பெண்கள் சேலஞ்ச் கிரிக்கெட்: சூப்பர்நோவாஸ் அணி வெற்றி

புனே, பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முன்னோடியாக கருதப்படும் பெண்களுக்கான சேலஞ்ச் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி புனேயில் நேற்று தொடங்கியது. 28-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான டிரையல்பிளாசர்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ், தீப்தி ஷர்மா தலைமையிலான வெலோசிட்டி ஆகிய 3 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா, கிரெஜ்சிகோவா அதிர்ச்சி தோல்வி

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்) 5-7, 4-6 என்ற நேர்செட்டில் அமெரிக்க வீராங்கனை அமன்டா அனிசிமோவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இதேபோல் நடப்பு சாம்பியன் பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு) 6-1, 2-6, 3-6 என்ற செட் கணக்கில் 19 வயது பிரான்ஸ் வீராங்கனை … Read more

தாமஸ் கோப்பையை வென்று சாதித்த பேட்மிண்டன் வீரர்களுக்கு பிரதமர் மோடி நேரில் பாராட்டு

புதுடெல்லி, சமீபத்தில் தாய்லாந்தில் நடந்த தாமஸ் கோப்பை பேட்மிண்டனில் இந்திய அணி, பலம்வாய்ந்த இந்தோனேஷியாவை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து முதல்முறையாக தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. 73 ஆண்டுகால தாமஸ் கோப்பை பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியா மகுடம் சூடியது இதுவே முதல் முறையாகும். சாதனை படைத்த இந்திய வீரர்களான ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி உள்ளிட்டோரை பிரதமர் மோடி நேற்று காலை நேரில் வரவழைத்து பாராட்டினார். அவர்களுடன் உற்சாகமாக கலந்துரையாடிய பிரதமர் மோடி, … Read more

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: டொமினிக் திம், ஜாபியர் அதிர்ச்சி தோல்வி

பாரீஸ் , ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது. களிமண்தரை போட்டியான இதில் முதல் நாளில் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன. பெண்கள் ஒற்றையர் பிரிவில் 6-ம் நிலை வீராங்கனை ஆன்ஸ் ஜாபியரை (துனிசியா), தரவரிசையில் 52-வது இடத்தில் உள்ள மேக்டா லினெட் (போலந்து) 3-6, 7-6 (7-4), 7-5 என்ற செட் கணக்கில் போராடி சாய்த்தார். இந்த ஆட்டம் 2 மணி 28 நிமிடங்கள் … Read more