ஆசிய பேட்மிண்டன் போட்டி: இந்திய ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

மணிலா, ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத் விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, தாய்லாந்தின் அபிலுக் காடெரா ஹாங்-நாட்சனோன் துலாமோக் இணையை எதிர்கொண்டது.  27 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி கூட்டணி 21-13, 21-9 என்ற நேர் செட்டில் எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.  … Read more

சென்னை அணி வீரர் மொயீன் அலி விரைவில் உடல் தகுதி பெறுவார் – பயிற்சியாளர் பிளமிங் நம்பிக்கை

மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹர், ஆடம் மில்னே ஆகியோர் காயம் காரணமாக விலகி விட்டனர்.  இந்த நிலையில் பயிற்சியின் போது கணுக்காலில் காயம் அடைந்த சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி (இங்கிலாந்து) நேற்று முன்தினம் நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடவில்லை. அத்துடன் அந்த லீக் ஆட்டத்தின் போது பீல்டிங் செய்கையில் கையில் காயம் அடைந்த பேட்ஸ்மேன் அம்பத்தி … Read more

இந்திய பெண்கள் ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் மரணம்

பெங்களூரு,  இந்திய பெண்கள் ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனான எல்வெரா பிரிட்டோ(வயது 81) வயது மூப்பு பிரச்சினை காரணமாக பெங்களூருவில் நேற்று காலை மரணம் அடைந்தார். 1965-ம் ஆண்டில் அர்ஜூனா விருது பெற்றவரான எல்வெரா பிரிட்டோ ஆஸ்திரேலியா, இலங்கை, ஜப்பான் ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணிக்காக விளையாடி இருக்கிறார்.  இவருடைய சகோதரிகளான ரிதா, மே ஆகியோரும் ஆக்கி வீராங்கனைகள் ஆவர். 1960-களில் கர்நாடக மாநில அணி 7 முறை தேசிய சாம்பியன் பட்டத்தை … Read more

பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி- புள்ளி பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேற்றம்

மும்பை, 10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. இந்த தொடரில் புனேயில் இன்று நடைபெற்ற 39-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளேசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர் படிக்கல் ஒற்றை இலக்க … Read more

”மின் நெருக்கடி ஏன் உள்ளது” – ஜார்கண்ட் அரசுக்கு கிரிக்கெட் வீரர் டோனி மனைவி கேள்வி

ராஞ்சி நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் எதிரொலியால், பல்வேறு மாநிலங்களிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு  பிரச்சினைக்கு மத்தியில் ஜார்கண்ட் மாநிலத்தில் நிலவும் மின் நெருக்கடி தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனியின் மனைவி சாக்‌ஷி சிங் அம்மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சாக்‌ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஜார்கண்டின் வரி செலுத்துபவராக, இங்கு … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை பழிதீர்க்கும் முனைப்பில் ராஜஸ்தான்..!!

புனே,  8 ஆட்டங்களில் விளையாடி 5-ல் வெற்றி, 3-ல் தோல்வி என்று 10 புள்ளிகளுடன் உள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முந்தைய ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இந்த சீசனில் ஒரு அணியின் மோசமான ஸ்கோர் இது தான்.  விராட் கோலி தொடர்ந்து 2 ஆட்டங்களில் ‘டக்-அவுட்’ ஆகி இருப்பது கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. இதே நிலை நீடித்தால் அவரது இடத்துக்கு ஆபத்து வந்து விடும் என்பதால் கூடுதல் கவனமுடன் … Read more

சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; அரையிறுதிக்குள் நுழைந்த மேற்கு வங்கம், கர்நாடகா அணிகள்!

திருவனந்தபுரம், 75-வது தேசிய அளவிலான சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர், கேரள மாநிலம் மலப்புரத்தில்  நடைபெற்று வருகிறது. சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடரில், மலப்புரம் கொட்டப்பாடி பய்யநாடு மைதானத்தில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-ஏ பிரிவு ஆட்டத்தில், மேற்கு வங்கம்-ராஜஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்தின.  முக்கியமான இந்த  ஆட்டத்தில் மேற்கு வங்க  அணி, 3-0 என்ற கோல் கணக்கில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், மேற்கு வங்கம் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.  முன்னதாக, பஞ்சாப் … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி..!!

மும்பை,  15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது. இன்று நடைபெற்று வரும் 38-வது லீக் ஆட்டத்தில்  நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொண்டது.  இந்தப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.  பஞ்சாப் அணியில் துவக்க வீரர் ஷிகர் அதிரடி காட்டினார். ஒரு முனையில் சீராக விக்கெட்டுகள் விழுந்தாலும் ஷிகர் … Read more

ஷிகர் தவான் அதிரடி; சென்னை அணிக்கு 188- ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்

மும்பை,  15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது. இன்று நடைபெற்று வரும் 38-வது லீக் ஆட்டத்தில்  நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொண்டது.  இந்தப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.  பஞ்சாப் அணியில் துவக்க வீரர் ஷிகர் அதிரடி காட்டினார். ஒரு முனையில் சீராக விக்கெட்டுகள் விழுந்தாலும் ஷிகர் … Read more

5 முறை சாம்பியனான மும்பைக்கு வந்த சோதனை…விடாது துரத்தும் தொடர் தோல்விகள் – தகரும் பிளே-ஆப் கனவு?

மும்பை, ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சீசனில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.  2008 ஆம் ஆண்டு தொடங்கி 14 ஆண்டுகள் நடைபெற்ற தொடர்களில் மும்பை அணி ஐந்து முறை சாம்பியன் ஆகியுள்ளது. ஆனால், இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் மும்பை அணி விளையாடிய எட்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.  இந்த சீசனின் மும்பை விளையாடிய முதல் போட்டியில் டெல்லியிடம் 4 … Read more