டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தனிமைப்படுத்தப்பட்டார்

மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் வீரர்கள் மிட்செல் மார்ஷ், டிம்செய்பெர்ட் மற்றும் 4 உதவியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குடன் அணியின் ஓட்டல் அறையில் தங்கி இருந்த அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்றில் சிக்கி இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.  இதையடுத்து ரிக்கி பாண்டிங்கின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பாண்டிங்குக்கு இரண்டு முறை நடத்தப்பட்ட … Read more

“டோனி களத்தில் இருந்ததால் வெற்றி கிடைக்கும் என்பது தெரியும்” – சென்னை கேப்டன் ஜடேஜா

மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தபரபரப்பான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி -வது வெற்றியை பெற்றது.  இதில் மும்பை நிர்ணயித்த 156 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் டோனி 6,4,2,4 என ரன்கள் விளாசி வெற்றி பெற்ற வைத்தார். 40 வயதானாலும் ஆட்டத்தை வெற்றிகரமாக … Read more

உபேர் கோப்பை பேட்மிண்டனில் இருந்து சிக்கி ரெட்டி-அஸ்வினி ஜோடி விலகல்

புதுடெல்லி,  தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் மே 8-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பெண்களுக்கான உபேர் கோப்பை போட்டிக்குரிய இந்திய அணியில் இரட்டையர் இணையான சிக்கி ரெட்டி, அஸ்வினி ஆகியோர் இடம் பிடித்து இருந்தனர்.  இந்த நிலையில் சிக்கி ரெட்டிக்கு வயிற்று பகுதியில் தசை நார் கிழிவு ஏற்பட்டு இருப்பது ஸ்கேன் பரிசோதனையில் தெரியவந்தது. எனவே அவரை 4-6 வாரங்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். … Read more

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: வெள்ளிப்பதக்கம் வென்றார் அன்ஷூ மாலிக்

உலான்பாடர் (மங்கோலியா), ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 57 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் ஜப்பானின் சுகுமி சகுராயிடம் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். அரியானாவை சேர்ந்த 20 வயதான அன்ஷூ ஆசிய போட்டியில் கைப்பற்றிய 3-வது பதக்கம் இதுவாகும். அவர் 2020-ம் ஆண்டு வெண்கலப்பதக்கமும், கடந்த ஆண்டு தங்கப்பதக்கமும் வென்று இருந்தார். மேலும் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய … Read more

‘விஸ்டன்’ கவுரவ பட்டியலில் இந்திய வீரர்கள்

லண்டன், கிரிக்கெட்டின் ‘பைபிள்’ என்று வர்ணிக்கப்படும் விஸ்டன் இதழ் இங்கிலாந்தில் இருந்து வெளியாகிறது. கிரிக்கெட் தகவல்களை தாங்கி வரும் இந்த இதழில் வீரர்களின் பெயர் இடம் பிடிப்பது கவுரவமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விஸ்டன் பதிப்பில் சிறந்த வீரர்களாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, நியூசிலாந்து பேட்ஸ்மேன் டிவான் கான்வே, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் மற்றும் தென்ஆப்பிரிக்க வீராங்கனை டேன்வான் நிகெர்க் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் … Read more

ஆசிய விளையாட்டுக்கான இந்திய பேட்மிண்டன் அணியில் இடம்பெற்ற 14 வயது வீராங்கனை

புதுடெல்லி, தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் மே 8-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடக்கிறது. காமன்வெல்த் விளையாட்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரையும், ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 10-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையும் நடக்கிறது.  இந்த மூன்று போட்டிக்கான இந்திய பேட்மிண்டன் அணிக்கு தரவரிசையில் டாப்-15 இடத்திற்குள் இருப்பவர்கள் நேரடியாக அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு 6 நாட்கள் டெல்லியில் தகுதி போட்டி நடத்தப்பட்டது. … Read more

“ஜோஸ் பட்லரை போல் சதம் அடிக்காதது ஏன் என எனது மகள்கள் கேள்வி எழுப்புகிறார்கள்” – வார்னர்

மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சை 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி பந்தாடியது. இந்த ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் குவித்த டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அளித்த பேட்டியில், ‘பந்து வீச்சாளர்கள் தங்களது பணியை அருமையாக செய்தார்கள்.  இதனால் எங்களது வேலை எளிதாகிவிட்டது. பந்து வீச்சாளர்களுக்கே எல்லா பெருமையும் சாரும். ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான் அணி) போல் என்னால் … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை இளம் வீரர் சேர்ப்பு

மும்பை,  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் தசைப்பிடிப்பு காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். காயம் குணமடையாததால் அவர் எஞ்சிய போட்டிகளில் இருந்தும் ஒதுங்கினார்.  இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடம் மில்னேவுக்கு பதிலாக இலங்கையை சேர்ந்த 19 வயது வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா சேர்க்கப்பட்டு … Read more

தோனி அதிரடியால் சென்னை அணி திரில் வெற்றி : மும்பைக்கு 7-வது தோல்வி..!!

மும்பை, ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற  போட்டியில் மும்பை -சென்னை அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – இஷான் கிஷன் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய முகேஷ் சவுத்ரி  2-வது பந்திலே ரோகித் … Read more

டி.என்.பி.எல். கிரிக்கெட்: அணிகளில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியீடு

சென்னை,  5-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன் 3-வது வாரத்தில் தொடங்கி ஜூலை இறுதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி சேலம், நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்த போட்டிக்கான அணிகளில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை டி.என்.பி.எல். நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அலெக்சாண்டர், அருண், அருண்குமார், ஹரிஷ்குமார், என்.ஜெகதீசன், ஜெகநாத் சீனிவாஸ், கவுசிக் … Read more