கேலலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு பெங்களூருவில் தொடங்கியது

பெங்களூரு, இளையோருக்கான 2-வது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் பெங்களூருவில் உள்ள கான்டீரவா ஸ்டேடியத்தில் நேற்று கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகதொடங்கியது.  போட்டியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார். விளையாட்டை ஊக்குவிக்கும் பிரதமர் மோடியின் வீடியோ பேச்சு விழாவில் ஒளிபரப்பப்பட்டது.  வருகிற 3-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 200 பல்கலைக்கழகங்களை சேர்ந்த 3, 879 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் 20 வகையான விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள்.

சதங்களின் நாயகன்.. யுகத்தின் தலைவன் – கிரிக்கெட்டின் கடவுளுக்கு பிறந்தநாள் இன்று..!

மும்பை சச்சின் தெண்டுல்கர் பெயர் அனைத்தையும் சொல்கிறது. கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட் லிஜண்ட்  கிரிக்கெட் உலகில் அவரது அசாதாரண செயல்திறனுக்காக வழங்கப்பட்ட தலைப்புகளில் சில மட்டுமே. சச்சின் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்றார். கிரிக்கெட்டின் கடவுளுக்கு இன்று 49 வயதாகிறது. சச்சின் தெண்டுல்கர் பிறந்த நாளை  முன்னிட்டு அவருக்கு  வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. உலகம் முழுவதும் உள்ள  அவரது ரசிகர்கள் விளையாட்டு வீரர்கள் முக்கிய … Read more

ஆசிய மல்யுத்த போட்டி: இந்திய வீரர் ரவிகுமார் தங்கம் வென்று சாதனை

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியாவில் நடந்து வருகிறது. இதில் 57 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரரான ரவிகுமார் தாஹியா 12-2 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானின் ரஹாத் கால்ஜானை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதன் மூலம் அரியானாவை சேர்ந்த 24 வயதான ரவிகுமார் ஆசிய சாம்பியன்ஷிப்பில் தொடர்ச்சியாக 3 தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சொந்தமாக்கினார். அவர் ஏற்கனவே 2020, 2021-ம் ஆண்டுகளிலும் … Read more

ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் கொல்கத்தா, ஆமதாபாத்தில் நடக்கும்- கங்குலி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. லீக் முடிந்து பிளே-ஆப் சுற்று ஆட்டங்களை கொல்கத்தா மற்றும் ஆமதாபாத்தில் நடத்துவது என்று ஐ.பி.எல். உயர்மட்ட குழு கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று (மே 24-ந்தேதி), வெளியேற்றுதல் சுற்று (மே 26-ந்தேதி) கொல்கத்தா ஈடன் கார்டனிலும், இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்று (மே 27-ந்தேதி), இறுதிப்போட்டி (மே 29-ந்தேதி) ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களுரு அணியை பந்தாடிய ஐதராபாத்..!! 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய 36-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.  இதனை தொடர்ந்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டு பிளிஸ்சிஸ் மற்றும் அனுஜ் ராவத் களமிறங்கினர். 7 பந்துகளை சந்தித்த கேப்டன் டு பிளிஸ்சிஸ் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்கொ ஜன்சன் பந்து வீச்சில் போல்ட் முறையில் அவுட் ஆனார். அடுத்துவந்த … Read more

ஐபிஎல் 2022 :அகமதாபாத்-ல் நடைபெறுகிறது இறுதிப்போட்டி..!

மும்பை, ஐபிஎல் தொடரின் 15-வது சீசன்  கடந்த 26ம் தேதி தொடங்கி சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது.கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் மும்பை .புனே நகரங்களில் நடைபெற்று வருகிறது ஐபிஎல்  தொடரின் லீக் ஆட்டங்கள் மட்டும் அங்கு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது இந்நிலையில் ஐபிஎல் பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிபோட்டி நடைபெறும் இடங்கள் ,பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்துள்ளார் . முதல் பிளே-ஆப் சுற்று மற்றும் எலிமினேட்டர் சுற்று போட்டிகள் மே 24 … Read more

தூத்துக்குடியில் பெருந்துறைமுகங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி தொடங்கியது

தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் மற்றும் பெருந்துறைமுக விளையாட்டு கழகம் ஆகியவை இணைந்து, அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டியை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக மைதானத்தில் நடத்தியது. இந்த போட்டிகளில் 4 பெருந்துறைமுக அணிகள் பங்கேற்று உள்ளன.  போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு வ.உ.சி. துறைமுக விளையாட்டு கழக செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். துறைமுக ஆணைய துணைத்தலைவர் பிமல்குமார் ஜா முன்னிலை வகித்தார். வ.உ.சி. துறைமுக விளையாட்டு கழக தலைவர் சுரேஷ் பாபு வரவேற்று பேசினார். … Read more

டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தனிமைப்படுத்தப்பட்டார்

மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் வீரர்கள் மிட்செல் மார்ஷ், டிம்செய்பெர்ட் மற்றும் 4 உதவியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குடன் அணியின் ஓட்டல் அறையில் தங்கி இருந்த அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்றில் சிக்கி இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.  இதையடுத்து ரிக்கி பாண்டிங்கின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பாண்டிங்குக்கு இரண்டு முறை நடத்தப்பட்ட … Read more

“டோனி களத்தில் இருந்ததால் வெற்றி கிடைக்கும் என்பது தெரியும்” – சென்னை கேப்டன் ஜடேஜா

மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தபரபரப்பான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி -வது வெற்றியை பெற்றது.  இதில் மும்பை நிர்ணயித்த 156 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் டோனி 6,4,2,4 என ரன்கள் விளாசி வெற்றி பெற்ற வைத்தார். 40 வயதானாலும் ஆட்டத்தை வெற்றிகரமாக … Read more

உபேர் கோப்பை பேட்மிண்டனில் இருந்து சிக்கி ரெட்டி-அஸ்வினி ஜோடி விலகல்

புதுடெல்லி,  தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் மே 8-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பெண்களுக்கான உபேர் கோப்பை போட்டிக்குரிய இந்திய அணியில் இரட்டையர் இணையான சிக்கி ரெட்டி, அஸ்வினி ஆகியோர் இடம் பிடித்து இருந்தனர்.  இந்த நிலையில் சிக்கி ரெட்டிக்கு வயிற்று பகுதியில் தசை நார் கிழிவு ஏற்பட்டு இருப்பது ஸ்கேன் பரிசோதனையில் தெரியவந்தது. எனவே அவரை 4-6 வாரங்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். … Read more