ஐபிஎல் கிரிக்கெட் : லக்னோ அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

மும்பை, ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி மும்பை மற்றும் புனேயில் நடைபெற்றது. 25-வது நாளான இன்று நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்-டுபெலிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரூ அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக அனுஜ் ராவத் டு  பிளேசிஸ் … Read more

'அரபிக் குத்து' பாடலுக்கு நடனமாடிய பி.வி சிந்து – வைரலாகும் வீடியோ..!

சென்னை, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் ‘பீஸ்ட்’. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். View this post on Instagram A post shared by Sindhu Pv (@pvsindhu1)

இது தான் என் திட்டம்.. ஆனால்.. தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கருத்து

மும்பை, ஐபிஎல் தொடரில் நேற்று  நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் ராஜஸ்தான்-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.  20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில்  அதிகபட்சமாக பட்லர்  சதம் அடித்தார்   218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற … Read more

சென்னை அணி வீரரின் திருமண கொண்டாட்டம் : வேஷ்டி சட்டையில் அசத்தும் தோனி- வைரலாகும் புகைப்படம்

மும்பை, ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை அணி 6 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் சென்னை அணி வீரர்கள் தற்போது கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு காரணம் சென்னை அணியின் நியூசிலாந்து வீரர் டெவன் கான்வெ. அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக இன்று சென்னை அணி வீரர்கள் பாரம்பரியமாக … Read more

டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் முதலிடத்தில் நீடிப்பு

நியூயார்க்,  சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் வீரர்கள் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முதலிடத்தில் நீடிக்கிறார்.  மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் போட்டியில் 2-வது சுற்றுடன் வெளியேறிய போதிலும் அவரது ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆபத்து இல்லை. ஜோகோவிச் இதுவரை 366 வாரங்கள் முதலிடத்தில் இருந்துள்ளார்.  2-வது இடத்தில் டேனில் மெட்விடேவும் (ரஷியா), 3-வது இடத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் (ஜெர்மனி), 4-வது இடத்தில் ரபெல் நடாலும் (ஸ்பெயின்), 5-வது இடத்தில் … Read more

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்: கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன்..!

மான்ட்கார்லோ, மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வந்தது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 5-வது இடம் வகிப்பவருமான சிட்சிபாஸ் (கிரீஸ்), 46-ம் நிலை வீரர் டேவிடோவிச் போகினாவை (ஸ்பெயின்) சந்தித்தார்.  1 மணி 36 நிமிடங்கள் நீடித்த இந்தமோதலில் சிட்சிபாஸ் 6-3, 7-6 (7-3) என்ற நேர் செட்டில் போகினாவை தோற்கடித்து மீண்டும் மகுடம் சூடினார். ‘ஓபன் எரா’ வரலாற்றில் (1968-ம் ஆண்டுக்கு பிறகு) … Read more

ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்திய சஹால்- கொல்கத்தா அணியை வீழ்த்தி ராஜஸ்தான் திரில் வெற்றி

மும்பை, ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் ராஜஸ்தான்-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர் – தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். ஏற்கனவே இந்த தொடரில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் முன்னணி வகிக்கும் … Read more

கார் விபத்தில் தமிழக வீர‌ர் உயிரிழப்பு – தேசிய டேபிள் டென்னிஸ் தொடரில் பங்கேற்க சென்ற போது நேர்ந்த சோகம்

ஷிலாங்க், 83-வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் மேகாலயாவில் இன்று தொடங்குகிறது. இதில், தமிழ்நாடு சார்பில் இளம் வீரரான தீனதயாளன் விஷ்வா உள்பட 4 வீரர்கள் நேற்று கார் மூலம் அசாமில் இருந்து மேகாலயாவுக்கு புறப்பட்டு சென்றனர். அசாம் தலைநகர் கவுகாத்தில் இருந்து மேகாலயாவின் ஷிலாங்க் நோக்கி கார் சென்றுகொண்டிருந்தது. மேகாலயாவின் ஷாங்க்பங்க்லா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் எதிரே வந்த லாரி வீரர்கள் பயணித்த கார் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர … Read more

ஐபிஎல் 2022: புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் குஜராத் அணி

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் இன்று  நடைபெற்ற  ஆட்டத்தில்  குஜராத் – சென்னை  அணிகள் மோதின.  இந்த ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது .இதனால் விளையாடிய 6 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று குஜராத் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது . 2வது இடத்தில் லக்னோ அணியும் ,3 வது இடத்தில் பெங்களூரு அணியும் ,4 வது … Read more

தேசிய சீனியர் ஆண்கள் ஆக்கி போட்டி: அரியானா அணி சாம்பியன்..!

போபால், 12-வது தேசிய சீனியர் ஆண்கள் ஆக்கி போட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் தமிழ்நாடு – அரியானா அணிகள் மோதின.  விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் வழக்கமான நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் அரியானா 3-1 என்ற கணக்கில் தமிழகத்தை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.  2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்ற தமிழக அணி வீரர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் … Read more