அக்சர், லலித் அதிரடி : மும்பையை வீழ்த்தி டெல்லி அசத்தல் வெற்றி

மும்பை, 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன், 2-வது லீக் ஆட்டம் மும்பை வாங்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் களமிறங்கினர்.  இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். கேப்டன் ரோகித் சர்மா … Read more

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? – மிதாலிராஜ் விளக்கம்

கிரிஸ்ட்சர்ச், இந்திய பெண்கள் அணி உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறும் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோல்வியை தழுவி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த நிலையில், போட்டி முடிந்த பின்னர் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலிராஜ், மெய்நிகர் வீடியோவில் போட்டியளித்தார். அப்போது ஓய்வு முடிவு குறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது,  நாங்கள் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுவோம் என்று நினைத்தோம். ஆனால் எதிர்பாராதவிதமாக அது நடக்கவில்லை. அரையிறுதிக்கு தகுதிபெற … Read more

ஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு

மும்பை, 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டாவதாக நடைபெறும் 3 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி பெங்களூரு அணி முதலில் விளையாடி வருகிறது. 

ஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு

மும்பை, ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டில் உதயமானது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இந்த ‘சரவெடி’ ஆட்டம் ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது. இதன்படி 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்கியது.  2022- ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி … Read more

அடுத்த ஆண்டு முதல் மகளிர் ஐ.பி.எல் போட்டிகள்..?

மும்பை: மகளிர்  ஐ.பி.எல். போட்டியை அடுத்த ஆண்டு (2023) முதல் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டு உள்ளது. 6 அணிகள் பங்கேற்கும் மகளிர் ஐபிஎல் போட்டிகளை நடத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் பிளே – ஆப் சுற்று நடைபெறும்போது 3 அணிகள் பங்கேற்கும் மகளிர் டி20 தொடர் நடைபெற உள்ளது குறிப்ப்பிடத்தக்கது 

ஆஸ்திரேலிய தோல்வி எதிரொலி: பாகிஸ்தான் அணியை சாடிய அக்தர்

கராச்சி, ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடர் குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர், பாகிஸ்தான் அணியை சாடினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,  “பாகிஸ்தான் … Read more

ஐ.பி.எல் தொடக்க விழாவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களை கவுரவிக்கும் பிசிசிஐ

மும்பை, ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டில் உதயமானது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இந்த ‘சரவெடி’ ஆட்டம் ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது. இதன்படி 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று  தொடங்குகிறது. இந்த முறை குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் புதிதாக அறிமுகம் ஆவதால், அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அணிகள் மோதும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதிக தடவை ஐ.பி.எல். … Read more

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியால் அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு உள்ளதா..?

வெலிங்டன், பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் போட்டிகள் நாளையுடன் முடிவடைய உள்ளன. இதில் தற்போது வரையில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகள் மட்டும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. எஞ்சியுள்ள இரு இடங்களுக்கு இந்திய உட்பட 4 அணிகள் மல்லுக்கட்டுகின்றன. நாளை கடைசி இரு லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளின் முடிவில் அரையிறுதிக்கு தகுதிபெறும் அணி எது என்பது தெரிந்துவிடும். எனினும், இந்தியா நாளை தன் கடைசி … Read more

தோல்வி எதிரொலி : ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் சரிவை சந்தித்த பாகிஸ்தான் அணி

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 1-0 என கைப்பற்றியது .3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2  போட்டிகள் டிராவில் முடிவடைந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது  இந்த வெற்றியினால் ஆஸ்திரேலிய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும் , இந்த தொடரில்  தோல்வி அடைந்ததால்  இரண்டாம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி 4 வது  இடத்துக்கு தள்ளப்பட்டது .இந்திய அணி … Read more

லாகூர் டெஸ்ட் : பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி

லாகூர்,   பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் இரு டெஸ்ட் போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் கடந்த மார்ச் 21ம் தேதி தொடங்கியது  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். … Read more