லாகூர் டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 90/1

லாகூர், 24 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.  இதில் ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் இரு டெஸ்ட் போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நேற்று  தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் … Read more

பெண்கள் உலக கோப்பை; 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

வெலிங்டன், பெண்கள் உலக கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றன.  இதில் இன்று நடந்த 21வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் லாரா உல்வார்ட் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து, 90 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் சுனே லூவஸ் 52 ரன்கள் குவித்து வெளியேறினார். இறுதியில் … Read more

பெண்கள் உலகக் கோப்பை: வங்காளதேச அணிக்கு 230 ரன்கள் இலக்கு நிர்ணையித்தது இந்திய அணி

ஹாமில்டன், பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.  இதில் இன்று நடைபெற்று வரும்  22 ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணியும் வங்காளதேச அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய மந்தனா – ஷபாலி வர்மா ஜோடி சிறப்பாக விளையாடினர். ஷபாலி வர்மா 42 ரன்கள் எடுத்த நிலையிலும் ஸ்ம்ரிதி மந்தனா 30 … Read more

மாநில அளவிலான சிலம்ப போட்டி

திருச்சி, மாநில அளவிலான சிலம்ப போட்டி இன்று திருச்சியில் நடந்தது. இதில் குழு மற்றும் ஓபன் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 400-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.  போட்டிகளின் முடிவில் திருச்சி சுருளி ஆண்டவர் தற்காப்பு கலைக்கூடத்தை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் மொத்தம் 30 பதக்கங்களை வென்று முதலிடத்தை பிடித்தனர்.  இதில் இளஞ்சீரியன், சரனேஷ், கார்த்திகேயன், ராகுல், சுமித்ரா, வினோதீபா, சஞ்சனா, லட்சிதா, ஸ்ரீமன்ஹரி, கஜபிரியா ஆகியோர் … Read more

இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ்; காயத்துடன் விளையாடி சாம்பியனான அமெரிக்க இளம் வீரர்

கலிபோர்னியா, பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகின்றன.  இதில் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில், உலக தரவரிசையில் 4வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் மற்றும் உலக தரவரிசையில் 20வது இடம் வகிக்கும் 24 வயதுடைய டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் விளையாடினர். இவர்களில், காயத்தினால் அவதிப்பட்ட அமெரிக்க வீரரான டெய்லர் போட்டியை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற சந்தேகத்தில் இருந்துள்ளார்.  எனினும், இந்த போட்டியை தைரியமுடன் எதிர்கொண்டு விளையாடிய … Read more

இரவில் பணி முடிந்து 10 கி.மீ. தூரம் ஓடும் இளைஞரை பாராட்டிய முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்..!!

லண்டன், உத்தரகாண்டின் பரோலா பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் மெஹ்ரா (வயது 19).  இவர் தன்னுடைய வீட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில்  இருக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். பணி முடிந்து வீடு திரும்ப இரவாகி விடுகிறது. ஆனால், மற்றவர்களை போன்று வாகனம், பேருந்து வசதிகளை பிரதீப் பயன்படுத்தவில்லை.  அதற்கு பதிலாக, பணி முடிந்ததும் இரவில், நொய்டா சாலையில் 10 கி.மீ. தூரம் ஓடியே வீட்டை அடைகிறார். ராணுவத்தில் சேர்வதற்காக தான் ஓடுவதாகவும் காலையில் தினமும் 8 … Read more

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

ஹாமில்டன், பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.  இதில் இன்று நடைபெறும் 20 ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் தற்போது மழை பெய்துவருவதால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்

லாகூர்,  24 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.  இதில் ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் இரு டெஸ்ட் போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 2009-ம் ஆண்டு இலங்கை வீரர்கள் … Read more

2வது ஒருநாள் போட்டி : தென் ஆப்பிரிக்க அணிக்கு 195 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்

ஜோஹன்ஸ்பேர்க், வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில்  வங்காளதேச அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி  இன்று ஜோஹன்ஸ்பேர்க்கில்  நடைபெற்று வருகிறது  இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி கேப்டன் தமீம் இக்பால் பேட்டிங்கை தேர்வு … Read more

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்; மகளிர் இரட்டையர் போட்டியில் சீன வீராங்கனைகள் சாம்பியன்

கலிபோர்னியா, பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகின்றன.  இதில் மகளிர் இரட்டையர் இறுதி போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த ஆசியா முகமது மற்றும் ஜப்பானை சேர்ந்த எனா ஷிபஹாரா இணையை எதிர்த்து சீனாவை சேர்ந்த சூ யிஃபான் மற்றும் யாங் ஜாவோசூவான் என்ற இணை விளையாடியது. முதல் செட்டில் 5-2 என்ற புள்ளி கணக்கில் முகமது மற்றும் ஷிபஹாரா இணை முன்னிலையில் இருந்தது.  ஆனால், சீன இணை அதிரடியாக விளையாடி 7-5 என்ற … Read more