"ஜெர்சி எண் 7 " ரகசியத்தை உடைத்த டோனி…!!

சூரத், ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் 26 ஆம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது. மார்ச் 26ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை -கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதற்காக  சென்னை அணி வீரர்கள் கேப்டன் டோனி தலைமையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் சமூகவலைத்தளம் வாயிலாக ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த டோனி தான் ஏன் 7-வது எண் கொண்ட ஜெர்சி அணிந்து விளையாடுகிறேன் என விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து … Read more

பெண்கள் உலகக்கோப்பை : வங்காளதேச அணிக்கு 141 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்

மவுண்ட் மவுங்காணு, பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் மவுண்ட் மவுங்காணுவில் இன்று நடைபெற்று வரும் 17-ஆவது லீக் போட்டியில் வங்காளதேச அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷெமைன் கேம்பல் 53 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற … Read more

பெண்கள் உலகக்கோப்பை : வங்காளதேச அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி

மவுண்ட் மவுங்காணு, பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் மவுண்ட் மவுங்காணுவில் இன்று நடைபெற்று வரும் 17-ஆவது லீக் போட்டியில் வங்காளதேச அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷெமைன் கேம்பல் 53 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற … Read more

விராட் கோலி இனி எதிரணிக்கு அபாயகரமான வீரராக இருப்பார்’: மேக்ஸ்வெல் சொல்கிறார்

புது டெல்லி,  15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் தனது முதல் லீக் ஆட்டத்தில் 27-ந்தேதி பஞ்சாப் கிங்சை சந்திக்கிறது. பெங்களூரு அணியின் கேப்டனாக நீண்ட காலமாக பணியாற்றிய விராட் கோலி, ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத விரக்தியில் பொறுப்பில் இருந்து விலகினார். ஒரு வீரராக அந்த அணியில் நீடிக்கிறார். பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக தென்ஆப்பிரிக்காவின் … Read more

ஐசிசி-இன் புதிய விதிமுறைகளுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் வரவேற்பு

மும்பை, இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் ஒருசில முறை மன்கட் முறையில் எதிர்முனையில் நின்றுகொண்டிருக்கும் பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்ததால், பல முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்ச்கர்களும் இவரை சாடினர்.  இந்த நிலையில்,மன்கட் முறையில் ‘ரன்-அவுட்’ செய்தால் அதை அதிகாரபூர்வ ரன்-அவுட்டாக எடுத்து கொள்ளும் வகையில் சர்வதேச கிரிக்கெட் விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்லது. இதனை இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,  ‘ என் சக பந்து … Read more

பெண்கள் உலகக்கோப்பை : நியூசிலாந்து அணியை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி

ஹாமில்டன், நியூசிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஹாமில்டனில் நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க,  நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது.  முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 228 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சோபி டிவெய்ன் அதிரடியாக விளையாடி 93 ரன்கள் குவித்தார். இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. … Read more

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் : காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் ரபேல் நடால்

இண்டியன்வெல்ஸ், பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தய சுற்று இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்பெயின் அணியின் நட்சத்திர டென்னிஸ் வீரரும் உலகின் முன்னாள் நம்பர் 1 வீரருமான ரபேல் நடால் அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்காவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய நடால்  7-6 (3), 7-6 (5) என்ற கணக்கில் ரெய்லியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் … Read more

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் : ஜோ ரூட் சதம் அடித்து அசத்தல்

பிரிட்ஜ்டவுன், இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் இந்திய நேரப்படி நேற்று இரவு தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய கிராவ்லி ரன் ஏதும் எடுக்காத நிலையில் நடையை கட்டினார். … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து : கேரளா-ஹைதராபாத் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ஜாம்ஷெட்பூர் (13 வெற்றி, 4 டிரா, 3 தோல்வி), ஐதராபாத் (11 வெற்றி, 5 டிரா, 4 தோல்வி), ஏ.டி.கே.மோகன் பகான் (10 வெற்றி, 7 டிரா, 3 தோல்வி), கேரளா பிளாஸ்டர்ஸ் (9 வெற்றி, 7 தோல்வி, 4 டிரா) ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.  அரைஇறுதியில் … Read more

ரஞ்சி கோப்பை; 880 ரன்கள் குவித்து கால்இறுதிக்கு தகுதி பெற்ற ஜார்கண்ட் அணி!

கொல்கத்தா, ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் ஜார்கண்ட்- நாகாலாந்து அணிகள் இடையிலான கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஜார்கண்ட் அணி 880 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது.  பின்னர் ஆடிய நாகாலாந்து முதல் இன்னிங்சில் 289 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அடுத்து 591 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய ஜார்கண்ட் அணி நேற்றைய கடைசி நாளில் 6 விக்கெட்டுக்கு 417 ரன்கள் எடுத்திருந்த போது டிராவில் முடித்துக் … Read more