இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட புஜாரா முடிவு!

புதுடெல்லி, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரரான புஜாரா இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் வருகிற சீசனில் விளையாட முடிவு செய்துள்ளார்.  சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்காத நிலையில், புஜாரா இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் வருகிற சீசனில் விளையாட முடிவு செய்துள்ளார். இந்தியாவின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த தவறிய பிறகு அவர் இந்திய டெஸ்ட் அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. … Read more

தனி விமானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்படும் ஷேன் வார்னேவின் உடல்..!

பாங்காக், மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்  ஷேன் வார்னேவின் உடல் தாய்லாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு தனி விமானத்தில் புறப்பட்டது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானத்தில் அவரது உடல்,  இன்று அதிகாலை பாங்காக் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மெல்போர்ன் விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா சென்றடைந்ததும், வார்னேவின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் தனிப்பட்ட இறுதிசடங்குகளை செய்ய உள்ளனர்.  அதைத் தொடர்ந்து வருகிற 30-ந்தேதி புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் அவருக்கு அரசு மரியாதையுடன் பிரியா விடை அளிக்க … Read more

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் பங்கேற்கமாட்டார்..!

பெல்கிரேட்,   செர்பிய டென்னிஸ் சூப்பர் ஸ்டார் நோவக் ஜோகோவிச் இரண்டு வாரங்களுக்கு முன்பு துபாயில், இந்தியன் வெல்ஸில் விளையாடுவதற்கு அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவரின் பெயர் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் போட்டி மெயின் டிராவில் இடம் பெற்றது, இது அவரது ரசிகர்களுக்கிடையே குழப்பத்திற்கு வழிவகுத்தது. தற்போது இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் நோவக் ஜோகோவிச் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், ஜோகோவிச் பிபிசியிடம் தடுப்பூசி போடவில்லை என்பதை உறுதிப்படுத்தினார், மேலும் … Read more

ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு

ஹாமில்டன், ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.  இதில், நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி பங்கேற்கும் 8வது ஆட்டம் ஹாமில்டன் நகரில் பகல்-இரவு போட்டியாக நடைபெறுகிறது.  இன்றைய போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.  இந்த போட்டியில், இந்திய அணியில் ஷபாலி வர்மாவுக்கு பதிலாக யாஸ்திகா பாட்டியா அணியில் சேர்க்கப்பட்டு அவர் விளையாடுகிறார்.

சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளில் அதிரடி மாற்றம்: தெண்டுல்கர் வரவேற்பு..!

லண்டன்,  சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு விதிமுறைகளை வகுப்பது மற்றும் விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டு வருவது போன்ற பணிகளை லண்டனில் செயல்படும் மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) கவனிக்கிறது. இந்த கிளப் உருவாக்கும் விதிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒப்புதல் வழங்கி அமல்படுத்துகிறது.  இந்த நிலையில் தற்போதைய கிரிக்கெட் விதிமுறைகளில் சில திருத்தங்களை எம்.சி.சி. கொண்டு வந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:- * எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேன், பந்து வீசுவதற்கு முன்பே கிரீசை விட்டு வெளியேறும் போது பவுலர் … Read more

பிப்ரவரி மாதத்துக்கான ஐ.சி.சி. விருது பட்டியலில் ஸ்ரேயாஸ், மிதாலி ராஜ்..!!

துபாய்,  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் (ஐ.சி.சி.) மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதத்துக்கான (பிப்ரவரி) சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர், ஐக்கிய அரபு அமீரக பேட்ஸ்மேன் விருத்தியா அரவிந்த், நேபாள அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் திபேந்திர சிங் ஐரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  இதேபோல் சிறந்த வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இந்திய பெண்கள் அணியின் … Read more

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால், லக்‌ஷயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

பெர்லின், ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் போட்டி முல்கேம் அன்டெர் ரூ நகரில் நேற்று தொடங்கி 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தனது முதல் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூரை சேர்ந்த யோ ஜியா மின்னை எதிர்கொண்டார்.  47 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில், அவர் 21-15, 17-21, 21-14 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில், லக்‌ஷயா சென், தாய்லாந்தின் கன்டாபோன் வாங்சரோனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி … Read more

எனது பரிசுத் தொகையை நன்கொடையாக வழங்கப் போகிறேன்- டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே

லண்டன், கடந்த மாத இறுதியில் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதாக உலகின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே கூறினார். ஐ.நா அகதிகள் நிறுவனம், செவ்வாயன்று அதன் பிரத்யேக இணையதளத்தில் 20 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர் என கூறியுள்ளது, அவர்களில் நூறாயிரக்கணக்கானோர் இளைஞர்கள் என்று ஜ.நா நம்புகிறது. இந்நிலையில் டென்னிஸ் வீரரான ஆண்டி … Read more

பெண்கள் உலக கோப்பை 2022: இந்தியா-நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்…!

ஹாமில்டன், நியூசிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை (வியாழக்கிழமை) ஹாமில்டனில் உள்ள செடான் பார்க்கில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, முன்னாள் சாம்பியன் சோபி டேவின் தலைமையிலான நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. வலுவான நியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அந்த அணி அடுத்த ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்தது. இந்திய அணி தனது … Read more

“சிறுவயதில் இருந்தே அடுத்த கபில்தேவ் ஆக விரும்பினேன்”-அஸ்வின்

பெங்களூரு,  சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த கபில்தேவை (434 விக்கெட்) பின்னுக்கு தள்ளிய தமிழக சுழற்பந்து வீச்சாளர் 35 வயதான ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- 28 ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லியின் (431 விக்கெட்) சாதனையை கபில்தேவ் முறியடித்த போது நான் எனது தந்தையுடன் சேர்ந்து பார்த்து உற்சாகம் அடைந்தேன். கபில்தேவின் விக்கெட் எண்ணிக்கையை தாண்டுவேன் என்று … Read more