ஐ.பி.எல்: பெங்களூரு அணியின் புதிய கேப்டன் டு பிளெஸ்சிஸ்?

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.  இந்நிலையில் பெங்களூரு அணி இன்னும் புதிய கேப்டனை அறிவிக்கவில்லை. விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில் ,  யார் … Read more

பைஜூஸ் நிறுவனத்தின் சீருடை ஸ்பான்சர் மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பு

கொல்கத்தா, இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை ஸ்பான்சராக பைஜூஸ் நிறுவனம் 2019-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. இலங்கைக்கு எதிரான போட்டி தொடருடன் பைஜூஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் முடிவதாக இருந்தது.  இந்த நிலையில் பைஜூஸ் நிறுவனத்தின் சீருடை ஸ்பான்சர் ஒப்பந்தம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி: காயம் காரணமாக சுனில் சேத்ரி விலகல்

புதுடெல்லி, இந்திய கால்பந்து அணி வருகிற 21-ந் தேதி பக்ரைன் தலைநகர் மனாமா செல்கிறது. அங்கு வருகிற 23 மற்றும் 26-ந் தேதிகளில் நடைபெறும் சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் இந்திய அணி, முறையே பக்ரைன், பெலாரஸ் அணிகளுடன் மோதுகிறது. இந்த இரண்டு ஆட்டங்களும் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.  உக்ரைன் மீது போர் தொடுத்து இருக்கும் ரஷியாவுக்கு ஆதரவாக பெலாரஸ் இருப்பதால் அந்த அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பங்கேற்குமா? என்பதில் … Read more

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் பங்கேற்பு!

பெர்லின், பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்றவரான இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொள்கிறார். அவர் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள பூசனன் ஓங்பாம்ருங்பானை (தாய்லாந்து) சந்திக்கிறார்.  இதேபோல் காயம் காரணமாக பார்மில் இல்லாமல் தவித்து வரும் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தனது முதல் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூரை சேர்ந்த யோ ஜியா மின்னை எதிர்கொள்கிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலக … Read more

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணியில் அக்‌ஷர் பட்டேல் சேர்ப்பு!

பெங்களூரு,  இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.  இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பகல்-இரவு) ஆட்டமாக பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் காயம் காரணமாக தென்ஆப்பிரிக்க தொடர் மற்றும் … Read more

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: இந்தியா முதலிடம்…!

கெய்ரோ, உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்தது. இதில் நேற்று நடந்த 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான்- அனிஷ் பன்வாலா ஜோடி 17-7 என்ற புள்ளி கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.  முன்னதாக நடந்த ஆண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியா-ஜெர்மனி மோதின. அனிஷ் பன்வாலா, குர்பிரீத் சிங், பாவேஷ் ஷெகாவத் ஆகியோர் … Read more

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: 3 வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 271/2

ராவல்பிண்டி, ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 476 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.  பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 73 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்து இருந்த … Read more

ஜடேஜா டிக்ளேர் முடிவை அறிவிக்க விரும்பியது பாராட்டுக்குரியது; கேப்டன் ரோகித் சர்மா புகழாரம்

 மொகாலி, இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 (228 பந்துகள் 17 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) ரன்கள் குவித்தார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 65 ஓவர்களில் … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: கேரளா பிளாஸ்டர்ஸ் – கோவா ஆட்டம் 'டிரா'

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் கோவா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த போட்டி 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் 4-வது இடம் பிடித்த கேரளா பிளாஸ்டர்ஸ் அரைஇறுதிக்கு … Read more

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்..!!

கெய்ரோ, எகிப்து நாட்டின் கெய்ரோவில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு சம்மேளனத்தின் உலகக் கோப்பை ரைபிள்/பிஸ்டல் போட்டியின் இறுதி நாளான இன்று நடைபெற்ற பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய அணிகளான ராஹி சர்னோபத், ஈஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகியோர் தங்கம் வென்றனர். விறுவிறுப்பான நடைபெற்ற போட்டியில் சிங்கப்பூரை 17-13 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றது. இது உலகக் கோப்பையில் ஈஷா பெற்ற இரண்டாவது … Read more