ஒளிபரப்பு உரிமம் ஏலம்: ஐ.பி.எல். கிரிக்கெட்டின் வளர்ச்சியை பிரதிபலிக்கும்…!! – இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர்

புதுடெல்லி,  இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இந்திய வீரர்களுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த பிரபல நட்சத்திர வீரர்களும் கலந்து கொண்டு விளையாடுவதால், உலகளவில் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் தொடராக உள்ளது. 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடருக்கான மவுசு ஆண்டுக்கு ஆண்டு பன்மடங்கு எகிறிக் கொண்டே செல்கிறது. விளம்பரம், ஸ்பான்சர் மூலம் வருவாய் கொட்டுவதால், முன்னணி நிறுவனங்களும் ஐ.பி.எல்லை விளம்பர மீடியமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். வீரர்களுக்கும் கோடிகளில் பணம் கிடைப்பதால், ஐ.பி.எல் … Read more

புரோ கபடி லீக் போட்டி; புனேரி பால்டன், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் வெற்றி!

பெங்களூரு, பெங்களூருவில் நடந்து வரும் 8-வது புரோ கபடி லீக் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் புனேரி பால்டன் அணி 37-30 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தியது.  மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 36-33 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியனான யு மும்பாவுக்கு அதிர்ச்சி அளித்தது.  இன்னொரு ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ் … Read more

தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி; கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது

கடைசி 20 ஓவர் கிரிக்கெட் இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 8 ரன் வித்தியாசத்திலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் … Read more

ரியோ ஓபன் டென்னிஸ் தொடர் – இத்தாலி வீரர் பெரட்டினி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

ரியோ டி ஜேனிரோ, ரியோ ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டத்தில் பிரேசில் வீரர் மோண்டேரோவுடன் பெரட்டனி மோதினார். இதில் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் பெரட்டினி வென்றார். இரண்டாவது செட்டை 7-6 என்ற கணக்கில் மோண்டேரோ கைப்பற்றினார்.  இதனையடுத்து வெற்றியாளரை நிர்மாணிக்கும் கடைசி செட்டை 6-3 என்ற கணக்கில் பெரட்டினி வென்று காலிறுதிக்குள் நுழைந்தார். இன்று இரவு நடைபெறும் காலிறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் அல்கராஸ் உடன் … Read more

இலங்கைக்கு எதிரான தொடர்: இந்திய 20 ஓவர் அணியில் மீண்டும் ஜடேஜா, சஞ்சு சாம்சன்..!!

புதுடெல்லி,  இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் இருந்து ரஹானே, புஜாரா நீக்கப்பட்டனர். காயத்தில் இருந்து மீண்ட ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன் ஆகியோர் 20 ஓவர் போட்டி அணிக்கு திரும்பினர். இலங்கை கிரிக்கெட் அணி இந்த மாதம் இறுதியில் இருந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து : கேரளா -மோகன் பகான் அணிகள் மோதிய ஆட்டம் 'டிரா'

கோவா 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா   -மோகன் பகான் அணிகள் மோதின  இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் கேரளா அணியின் அட்ரியன் லூனா 7 வது மற்றும் 64  வது நிமிடத்தில் கோல் அடித்தார் . மோகன் பகான் அணியின் … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மீது வயது மோசடி புகார்!

மும்பை, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையை வென்ற இந்திய ஜூனியா் அணியில் இடம் பெற்றிருந்தவர் ஆல்-ரவுண்டர் ராஜ்வா்தன் ஹேங்கர்கேகர். இந்நிலையில், மும்பையை சேர்ந்த ராஜ்வா்தன் ஹேங்கர்கேகர் வயது மோசடியில் ஈடுபட்டதாக மராட்டிய மாநில விளையாட்டு மற்றும் இளைஞர்துறை ஆணையர் ஓம்பிரகாஷ் பகோரியா குற்றம் சாட்டியுள்ளார்.  ஹேங்கர்கேகர் 8-ம் வகுப்பில் மீண்டும் சேர்ந்த போது பிறந்த தேதியை ஜனவரி 10, 2001-க்கு பதிலாக நவம்பர் 10, 2002 என்று மாற்றியுள்ளார். இந்த வயது குறைப்பால் தான் அவரால் ஜூனியர் … Read more

இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி

இந்தியா – நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுனில் நேற்று நடந்தது. இதில் முதலில் ‘பேட்’ செய்த இந்திய அணி 49.3 ஓவர்களில் 279 ரன் எடுத்து ஆல்-அவுட் ஆனது. மேகனா (61 ரன்), ஷபாலி வர்மா (51 ரன்), தீப்தி ஷர்மா (69 ரன்) ஆகிேயாா் அரைசதம் அடித்தனர். கேப்டன் மிதாலிராஜ் (23 ரன்), ஹர்மன்பிரீத் கவுர் (19 ரன்) பெரிய அளவில் சோபிக்கவில்லை. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து : பெங்களூரு அணி அதிர்ச்சி தோல்வி

பனாஜி, கோவாவில் நடந்து வரும் 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு அரங்கேறிய 94-வது லீக் ஆட்டத்தில், நார்த் ஈஸ்ட் யுனைடெட்(கவுகாத்தி) – பெங்களூரு எப்.சி. அணிகள் பலப்பரிட்சை நடத்தின.  இந்த போட்டியில், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி.க்கு அதிா்ச்சி தோல்வி அளித்தது.நார்த் ஈஸ்ட் யுனைடெட்(கவுகாத்தி) அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் … Read more

ஆசிய பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி வெளியேற்றம்

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) நடப்பு சாம்பியன் இந்தோனேஷியாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் இந்தோனேஷியாவிடம் தோல்வியை தழுவியது. இந்திய அணியில் லக்‌ஷயா சென், மிதுன் மஞ்சுநாத் ஒற்றையர் பிரிவில் வெற்றி கண்டனர்.  கிரண் ஜார்ஜ் (ஒற்றையர்), ஹரிகரன் அம்சகருணன்-ரூபன் குமார், மஞ்சித் கவாய்ராக்பாம்- கோந்துஜாம் (இரட்டையர் … Read more