ரியோ ஓபன் டென்னிஸ் – கோப்பையை கைப்பற்றினார் ஸ்பெயின் வீரர் அல்கராஸ்

ரியோ டி ஜெனிரோ: ரியோ ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று முன்தினம் . இதில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், அர்ஜெண்டினா வீரர் டியகோ ஸ்கெவெர்ட்ஸ்மேன் மோதினர்  விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில்  சிறப்பாக விளையாடிய கார்லோஸ் அல்கராஸ் 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றனார்  18 வயதான கார்லோஸ் அல்கராஸ் ,இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

“சாஹாவின் கருத்து என்னை காயப்படுத்தவில்லை" – ராகுல் டிராவிட்

மும்பை, இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பரான விருத்திமான் சாஹா, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்தார். அணியில் தேர்வு செய்யப்படாததற்கு ராகுல் டிராவிட்டை குற்றம்சாட்டினார். பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்னை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுமாறு அறிவுறுத்தினார் என்று சாஹா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து டிராவிட் பேசியுள்ளார். “விருத்திமான் சாஹாவின் கருத்துகளால் காயமடையவில்லை, அவர் நேர்மைக்கும் தெளிவுக்கும் தகுதியானவர்” என்று இந்திய … Read more

ஐசிசி டி20 தரவரிசை: 6 ஆண்டுக்கு பிறகு “முதல் இடத்தில்” இந்தியா…!!

துபாய்,  வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றிக்கனியை பறித்த இந்திய அணி தொடரையும் 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ச்சியாக பதிவு செய்த 9-வது வெற்றி இதுவாகும். முன்னதாக ஒருநாள் தொடரையும் இந்தியா 3-0 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. இந்நிலையில், ஐ.சி.சி வெளியிட்டுள்ள டி20 அணிகளுக்கான தரவரிசைப் … Read more

சர்வதேச தற்காப்பு கலை போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற விர்தி குமாரிக்கு பாராட்டு விழா!

சென்னை, அபுதாபியில் சமீபத்தில் நடந்த ‘கலப்பு மார்சியல் ஆர்ட்ஸ்’ என்ற சர்வதேச தற்காப்பு கலை போட்டியில் இந்திய வீராங்கனை விர்தி குமாரி வெண்கலப்பதக்கம் வென்றார். இதன்மூலம், இந்த பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.  அவருக்கு சென்னையில் நேற்று பாராட்டு விழா நடந்தது. அதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு அவரை வாழ்த்தினார். விர்தி குமாரியை வாழ்த்தி பேசிய கனிமொழி கூறியதாவது, “விர்தி குமாரி பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்” என்று வாழ்த்தினார். … Read more

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு..!

பீஜிங்,  24-வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த 4-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. முழுக்க முழுக்க உறைபனியில் நடந்த 15 வகையான விளையாட்டு போட்டிகளில் 91 நாடுகளைச் சேர்ந்த 2,871 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.  இந்தியா சார்பில் கலந்து கொண்ட ஒரே வீரரான பனிச்சறுக்கு வீரர் ஆரிப்கான் இரு பந்தயத்திலும் ஏமாற்றம் அளித்தார். போட்டியின் கடைசி நாளான நேற்று ஐஸ் ஆக்கியில் பின்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான ரஷியாவை … Read more

ஒளிபரப்பு உரிமம் ஏலம்: ஐ.பி.எல். கிரிக்கெட்டின் வளர்ச்சியை பிரதிபலிக்கும்…!! – இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர்

புதுடெல்லி,  இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இந்திய வீரர்களுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த பிரபல நட்சத்திர வீரர்களும் கலந்து கொண்டு விளையாடுவதால், உலகளவில் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் தொடராக உள்ளது. 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடருக்கான மவுசு ஆண்டுக்கு ஆண்டு பன்மடங்கு எகிறிக் கொண்டே செல்கிறது. விளம்பரம், ஸ்பான்சர் மூலம் வருவாய் கொட்டுவதால், முன்னணி நிறுவனங்களும் ஐ.பி.எல்லை விளம்பர மீடியமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். வீரர்களுக்கும் கோடிகளில் பணம் கிடைப்பதால், ஐ.பி.எல் … Read more

புரோ கபடி லீக் போட்டி; புனேரி பால்டன், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் வெற்றி!

பெங்களூரு, பெங்களூருவில் நடந்து வரும் 8-வது புரோ கபடி லீக் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் புனேரி பால்டன் அணி 37-30 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தியது.  மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 36-33 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியனான யு மும்பாவுக்கு அதிர்ச்சி அளித்தது.  இன்னொரு ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ் … Read more

தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி; கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது

கடைசி 20 ஓவர் கிரிக்கெட் இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 8 ரன் வித்தியாசத்திலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் … Read more

ரியோ ஓபன் டென்னிஸ் தொடர் – இத்தாலி வீரர் பெரட்டினி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

ரியோ டி ஜேனிரோ, ரியோ ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டத்தில் பிரேசில் வீரர் மோண்டேரோவுடன் பெரட்டனி மோதினார். இதில் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் பெரட்டினி வென்றார். இரண்டாவது செட்டை 7-6 என்ற கணக்கில் மோண்டேரோ கைப்பற்றினார்.  இதனையடுத்து வெற்றியாளரை நிர்மாணிக்கும் கடைசி செட்டை 6-3 என்ற கணக்கில் பெரட்டினி வென்று காலிறுதிக்குள் நுழைந்தார். இன்று இரவு நடைபெறும் காலிறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் அல்கராஸ் உடன் … Read more

இலங்கைக்கு எதிரான தொடர்: இந்திய 20 ஓவர் அணியில் மீண்டும் ஜடேஜா, சஞ்சு சாம்சன்..!!

புதுடெல்லி,  இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் இருந்து ரஹானே, புஜாரா நீக்கப்பட்டனர். காயத்தில் இருந்து மீண்ட ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன் ஆகியோர் 20 ஓவர் போட்டி அணிக்கு திரும்பினர். இலங்கை கிரிக்கெட் அணி இந்த மாதம் இறுதியில் இருந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது … Read more