ஐ.எஸ்.எல் கால்பந்து : பெங்களூரு அணி அதிர்ச்சி தோல்வி

பனாஜி, கோவாவில் நடந்து வரும் 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு அரங்கேறிய 94-வது லீக் ஆட்டத்தில், நார்த் ஈஸ்ட் யுனைடெட்(கவுகாத்தி) – பெங்களூரு எப்.சி. அணிகள் பலப்பரிட்சை நடத்தின.  இந்த போட்டியில், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி.க்கு அதிா்ச்சி தோல்வி அளித்தது.நார்த் ஈஸ்ட் யுனைடெட்(கவுகாத்தி) அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் … Read more

ஆசிய பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி வெளியேற்றம்

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) நடப்பு சாம்பியன் இந்தோனேஷியாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் இந்தோனேஷியாவிடம் தோல்வியை தழுவியது. இந்திய அணியில் லக்‌ஷயா சென், மிதுன் மஞ்சுநாத் ஒற்றையர் பிரிவில் வெற்றி கண்டனர்.  கிரண் ஜார்ஜ் (ஒற்றையர்), ஹரிகரன் அம்சகருணன்-ரூபன் குமார், மஞ்சித் கவாய்ராக்பாம்- கோந்துஜாம் (இரட்டையர் … Read more

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வெற்றி தொடருகிறது

இலங்கை-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று நடந்தது. முதல் 3 போட்டியிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்ட ஆஸ்திரேலிய அணி ‘டாஸ்’ ஜெயித்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்களில் கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக பதும் நிசங்கா 46 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ஜய் ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன் தலா 2 விக்கெட்டுகளை … Read more

பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி அட்டவணை வெளியீடு..!

லொசன்னே, பெண்களுக்கான 15-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்தில் ஜூலை 1-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.  இதற்கான போட்டி அட்டவணையை சர்வதேச ஆக்கி சம்மேளம் நேற்று வெளியிட்டது. இந்திய அணி ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கிறது. இங்கிலாந்து, நியூசிலாந்து, சீனா அணிகளும் அந்த பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜூலை 3-ந்தேதி இங்கிலாந்தை சந்திக்கிறது.  இது குறித்து இந்திய … Read more

புரோ கபடி லீக்: பாட்னா அணியை வீழ்த்தியது டெல்லி..!

பெங்களூரு,  8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் தபாங் டெல்லி மற்றும் பாட்னா பைரட்ஸ் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 26-23 என்ற புள்ளி கணக்கில் பாட்டா பைரட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இது டெல்லி அணியின் 11 வது வெற்றியாகும். புள்ளிகள் பட்டியலில் பாட்னா பைரட்ஸ் 81 புள்ளிகளுடன் முதலிடத்திலும் தபாங் டெல்லி … Read more

ஆசிய பேட்மிண்டன் போட்டி: இந்திய அணிக்கு முதல் வெற்றி

ஷா ஆலம், ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) இந்திய அணி, ஹாங்காங்கை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தியது.  ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் லக்‌ஷயா சென், மிதுன் மஞ்சுநாத் ஆகியோரும், இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஹரிகரன் அம்சகருணன்-ரூபன் ரத்தினசபாபதி குமார் ஜோடியும் வெற்றி கண்டனர். ஒற்றையர் பிரிவில் கிரண் … Read more

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை கைப்பற்றும் ஆவலில் இந்தியா

20 ஓவர் கிரிக்கெட் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 158 … Read more

‘அர்ஜூன் ஆட்டத்தை நேரில் பார்க்கமாட்டேன்’ – தெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கரை ஐ.பி.எல். ஏலத்தில் ரூ.30 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. இடக்கை வேகப்பந்து வீச்சாளரான 22 வயதான அர்ஜூன் உள்ளூர் 20 ஓவர் போட்டியில் மும்பை அணிக்காக 2 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார். மும்பை ரஞ்சி அணியில் இடம் பெற்றுள்ளார்.  இந்த நிலையில் மகனின் ஆட்டம் குறித்து தெண்டுல்கர் யுடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் ‘பெற்றோர் தங்களது பிள்ளைகள் விளையாடுவதை நேரில் பார்க்கும் போது … Read more

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்; ரஹானே, புஜாரா களம் இறங்குகிறார்கள்

ஆமதாபாத்,  ‘இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பு’ என்று வர்ணிக்கப்படும் உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பை போட்டி 1935-36-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதல்முறையாக ரஞ்சி கோப்பை போட்டி கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. கொரோனா இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராததால் இந்த சீசனில் ரஞ்சி ஆட்டங்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்து, கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி 87-வது ரஞ்சி கிரிக்கெட் … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை-ஒடிசா ஆட்டம் ‘டிரா’

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இதில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி மற்றும் ஒடிசா எப்.சி அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. சென்னை அணியில் ரஹிம் அலி 2-வது நிமிடத்திலும், … Read more