இந்திய அணி தனது ஆயிரமாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற 177 ரன்கள் இலக்கு!

ஆமதாபாத், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று  நடைபெற்று வருகிறது. இந்த போட்டி இந்தியாவின் 1,000-வது ஒருநாள் போட்டி என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய வெஸ்ட் … Read more

1000-வது ஒருநாள் போட்டியில் 100-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார் யுஸ்வேந்திர சாஹல்..!

ஆமதாபாத், இந்தியாவின் 1,000-வது ஒருநாள் போட்டி ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று  நடைபெற்று வருகிறது.  இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த நிலையில், போட்டியின் 20-வது ஓவரை யுஸ்வேந்திர சாஹல் வீசிய போது அந்த ஓவரின் கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி … Read more

ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: 189 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து.!

ஆன்டிகுவா, 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஆன்டிகுவாவில் இன்று நடைபெறும் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜேக்கப் 2 ரன்னிலும், கேப்டன் டாம் பிரஸ்ட் ரன் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர். ஜேம்ஸ் ரீவ் ஒருபுறம் … Read more

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டி; 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

ஆமதாபாத், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாட உள்ளது.  இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஆமதாபாத்தில் நாளை நடக்கிறது. இந்த போட்டி இந்திய அணியின் ஆயிரமாவது போட்டியாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய அணியில் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஷ் அய்யர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் வலை பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி பெங்களூரு வெற்றி

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும், ஜாம்ஷெட்பூர் அணியும் மோதின. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே ஜாம்ஷெட்பூர் அணியின் டேனியேல் சீமா ஒரு கோல் அடித்தார். இதையடுத்து பெங்களூரு அணியில் சுனில் சேத்ரி 54-ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், … Read more

புரோ கபடி லீக்: யு மும்பாவிடம் வீழ்ந்தது தமிழ் தலைவாஸ்

பெங்களூரு,  8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் யு மும்பா அணியும், தமிழ் தலைவாஸ்  அணியும் மோதின. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 35-33 என்ற புள்ளிகள் கணக்கில் யு மும்பாவிடம் தோல்வியடைந்தது. தற்போது தமிழ் தலைவாஸ் அணி 15 போட்டிகளில் விளையாடி 5 வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது.

ஜூனியர் உலக கோப்பை இறுதிப்போட்டி; டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்!

ஆன்டிகுவா, 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஆன்டிகுவாவில் இன்று நடைபெறும் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.  யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டாவையும், கால்இறுதியில் வங்காளதேசத்தையும், அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி கம்பீரமாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. டாம் பிரிஸ்ட் தலைமையிலான இங்கிலாந்து அணி லீக் சுற்றில் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், கனடாவையும், … Read more

ஆஷஸ் தோல்வி எதிரொலி: இங்கிலாந்து தலைமைப்பயற்சியாளர் விலகல்

லண்டன், இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது. ஒரு போட்டியை போராடி டிரா செய்தது. ஆஷஸ் தொடரில் படுதோல்வி அடைந்ததால் இங்கிலாந்து அணியின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. கேப்டன் ஜோ ரூட் மற்றும் அணி நிர்வாகம் மீது முன்னாள் வீரர்கள் பலர் பல்வேறு விமர்சனங்களை வெளிப்படுத்தி வந்தனர். இதையடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட்டின் … Read more