ஐபிஎல் 2022: அகமதாபாத் அணியின் அதிகாரப்பூர்வ பெயர் வெளியானது

15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் அகமதாபாத், லக்னோ ஆகிய இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அணிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், லக்னோ அணிக்கு ‘லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.  இந்நிலையில், மற்றொரு புதிய அணியான அகமதாபாத் அணியின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அகமதாபாத் அணிக்கு ‘குஜராத் டைட்டன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய … Read more

இந்தியாவுக்கு எதிரான 2வது போட்டி – டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச முடிவு

ஆமதாபாத், பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி அதே மைதானத்தில் இன்று நடக்கிறது.  இப்போட்டியில் டாஸ் வென்ற … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து : மோகன் பகான் அணி வெற்றி ..

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் -ஏ.டி.கே மோகன் பகான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க்க முடியவில்லை .தொடர்ந்து இரண்டாவது பாதியில் மோகன் பகான் அணியின் லிஸ்டன் கோலாகோ … Read more

2-வது ஒருநாள் போட்டி : இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நாளை மோதல்

ஆமதாபாத், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 2 வது ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது. நாளைய போட்டியில் வெற்றிபெற்று  இந்திய அணி  தொடரை வெல்லுமா என எதிர்பார்க்கப்படுகிறது .   … Read more

ஐ.பி.எல் 2022 : அகமதாபாத் அணியின் பெயர் வெளியானது..?

இந்தாண்டு நடைபெறவிருக்கும் ஐ.பி.எல். 15-வது தொடரில் அகமதாபாத், லக்னோ ஆகிய புதிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால்  ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் லக்னோ அணிக்கு  லக்னோ  சூப்பர் ஜெய்ண்ட்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.லக்னோ அணிக்கு கே எல் ராகுல் கேப்டனாக செயல்படவுள்ளார். இந்நிலையில், மற்றொரு அணியான அகமதாபாத், தனது அணியின் பெயரை அகமதாபாத் டைட்டன்ஸ்  என பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு ஆண்டு ஐ.பி.எல். மெகா ஏலம் வரும் 12,13 … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத்-ஏ.டி.கே.மோகன் பகான் மோதல்

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 84-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை தோற்கடித்து 6-வது வெற்றியை தனதாக்கியது. ஒடிசா அணியில் ஜோனதஸ் கிறிஸ்டியன் 23-வது நிமிடத்திலும், ஜாவி ஹர்னாண்டஸ் 75-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஈஸ்ட் பெங்கால் அணியில் அந்தோணி பெரோசிவிச் 64-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். ஈஸ்ட் பெங்கால் சந்தித்த … Read more

டி20 உலகக் கோப்பை 2022: இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஐந்து நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன!

மெல்போர்ன், ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2022 ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை நடைபெற உள்ளது, இதில் மொத்தம் 45 போட்டிகள் நடைபெற உள்ளது. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன், அடிலெய்டு, ஜிலாங், ஹோபார்ட் மற்றும் பெர்த் ஆகிய ஏழு இடங்களில் விளையாடப்பட உள்ளது. 2020 ஆம் ஆண்டில் ஒத்திவைக்கப்பட்ட உலகக் கோப்பை போட்டிகள் தற்போது நடைபெறவுள்ளது.  உலகக் கோப்பைக்கான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது, இரண்டு போட்டி நாட்களுக்கான  டிக்கெட் விற்பனைக்கு … Read more

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக உலகக்கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் நியமனம்!

லண்டன், இங்கிலாந்து அணியின் உதவி பயிற்சியாளராக செயல்பட்டு வந்த முன்னாள் வீரர் பால் காலிங்வுட், அடுத்த மாதம் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரை தலைமைப் பயிற்சியாளராக நீடிப்பார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. முன்னதாக தலைமைப் பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட், ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் படுமோசமாக இங்கிலாந்து இழந்ததையடுத்து அப்பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் … Read more

பீஜிங் ஒலிம்பிக்; பயோ-பபிள் தனிமைப்படுத்தலில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு பணிவிடை செய்யும் ரோபோக்கள்

பீஜிங், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவாமல் ஒலிம்பிக் போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற சீன அரசு பீஜிங் நகருக்குள் இன்னொரு நகரத்தை கட்டமைத்து உள்ளது. பிரத்யேகமாக கட்டமைக்கப்பட்டுள்ள அந்த நகரத்தில், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் ஒலிம்பிக் விளையாட்டு நிர்வாக ஊழியர்கள் பயிற்சியாளர்கள் என அதனை சார்ந்தவர்கள் மட்டுமே இருப்பார்கள்.வெளி உலகிலிருந்து, அதாவது பீஜிங் நகரவாசிகளிடமிருந்து கொரோனா தொற்று ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்களுக்கு பரவி விடக்கூடாது என்பதற்காக இந்த அமைப்பை … Read more

பீஜிங் ஒலிம்பிக்;மாஸ்க் அணிந்து கொண்டு வியர்க்க விறுவிறுக்க ஐஸ்-ஆக்கி விளையாடிய வீராங்கனைகள்!

பீஜிங், குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இன்று நடைபெற்ற பெண்கள் ஐஸ்-ஆக்கி போட்டியில் ரஷியா-கனடா அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இந்த போட்டியில் 6-1 என்ற கோல் கணக்கில் கனடா வெற்றி பெற்றது. இந்நிலையில், போட்டி தொடங்கும் முன் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவர சிறிது கால தாமதமானதால் போட்டி தாமதமாக தொடங்கியது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த போட்டியில் விளையாடிய இருநாட்டு வீராங்கனைகளும் கொரோனா பரவாமல் இருக்க ‘கே என்.95’ ரக மாஸ்க் அணிந்து கொண்டு போட்டியில் … Read more