ஆசிய பேட்மிண்டன் போட்டி: இந்திய அணிக்கு முதல் வெற்றி

ஷா ஆலம், ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) இந்திய அணி, ஹாங்காங்கை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தியது.  ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் லக்‌ஷயா சென், மிதுன் மஞ்சுநாத் ஆகியோரும், இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஹரிகரன் அம்சகருணன்-ரூபன் ரத்தினசபாபதி குமார் ஜோடியும் வெற்றி கண்டனர். ஒற்றையர் பிரிவில் கிரண் … Read more

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை கைப்பற்றும் ஆவலில் இந்தியா

20 ஓவர் கிரிக்கெட் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 158 … Read more

‘அர்ஜூன் ஆட்டத்தை நேரில் பார்க்கமாட்டேன்’ – தெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கரை ஐ.பி.எல். ஏலத்தில் ரூ.30 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. இடக்கை வேகப்பந்து வீச்சாளரான 22 வயதான அர்ஜூன் உள்ளூர் 20 ஓவர் போட்டியில் மும்பை அணிக்காக 2 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார். மும்பை ரஞ்சி அணியில் இடம் பெற்றுள்ளார்.  இந்த நிலையில் மகனின் ஆட்டம் குறித்து தெண்டுல்கர் யுடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் ‘பெற்றோர் தங்களது பிள்ளைகள் விளையாடுவதை நேரில் பார்க்கும் போது … Read more

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்; ரஹானே, புஜாரா களம் இறங்குகிறார்கள்

ஆமதாபாத்,  ‘இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பு’ என்று வர்ணிக்கப்படும் உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பை போட்டி 1935-36-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதல்முறையாக ரஞ்சி கோப்பை போட்டி கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. கொரோனா இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராததால் இந்த சீசனில் ரஞ்சி ஆட்டங்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்து, கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி 87-வது ரஞ்சி கிரிக்கெட் … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை-ஒடிசா ஆட்டம் ‘டிரா’

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இதில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி மற்றும் ஒடிசா எப்.சி அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. சென்னை அணியில் ரஹிம் அலி 2-வது நிமிடத்திலும், … Read more

20 ஓவர் கிரிக்கெட்: பந்து வீச்சாளர் தரவரிசையில் ஹேசில்வுட் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

துபாய், 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்களின் தரவாிசையில் டாப்-4 இடங்களில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (805 புள்ளி), முகமது ரிஸ்வான் (798 புள்ளி), தென்ஆப்பிரிக்காவின் மார்க்ராம் (796 புள்ளி), இந்தியாவின் லோகேஷ் ராகுல் (729 புள்ளி) ஆகியோர் மாற்றமின்றி தொடருகிறார்கள். இந்தியாவின் விராட் கோலி 10-வது இடமும், ரோகித் சர்மா 11-வது இடமும் வகிக்கிறார்கள். பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் … Read more

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்; மலேஷியாவிடம் தோல்வியடைந்த இந்தியா!

ஷா அலாம், ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவின் ஷா அலாம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் இந்தியா நேற்று நடைபெற்ற தனது தொடக்க ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி மலேஷிய அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் 2-3 என்ற கணக்கில் இந்தியா மலேசியாவிடம் வீழ்ந்தது. எனினும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அஷ்மிதா சாலிஹா, தாரா ஷா வெற்றி பெற்றனர். மற்ற 3 ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் தோல்வி அடைந்தனர். முன்னதாக தென் … Read more

குளிர்கால ஒலிம்பிக்; பனிச்சறுக்கு போட்டியில் இந்திய வீரர் ஆரிப்கான் ஏமாற்றம்!

பீஜிங்,  24-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீன தலைநகர் பீஜிங்கில் நடந்து வருகிறது. இந்த ஒலிம்பிக்குக்கு இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற ஒரே இந்தியரான ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த பனிச்சறுக்கு வீரர் முகமது ஆரிப்கான், ஜெயன்ட் ஸ்லாலோம் பிரிவில் 45-வது இடத்தை பிடித்தார். இந்த நிலையில் அவர் நேற்று மற்றொரு பந்தயமான ஸ்லாலோம் பிரிவில் பங்கேற்றார். பனிப்பாதையில் உயரமான இடத்தில் இருந்து வழியில் நட்டப்பட்டுள்ள குச்சிகளை தட்டியபடி வேகமாக சறுக்கி செல்லும் இந்த போட்டியில்  31 வயதான ஆரிப்கான் … Read more

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ்: முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் இன்று நடக்கிறது.

20 ஓவர் கிரிக்கெட் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கொல்கத்தாவில் இன்றிரவு நடக்கிறது. ஒரு நாள் தொடரை முழுமையாக வசப்படுத்திய இந்திய அணி 20 ஓவர் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் உத்வேகத்துடன் வியூகங்களை தீட்டுகிறது. இன்னும் … Read more

இலங்கை வீரர் ஹசரங்காவுக்கு கொரோனா பாதிப்பு

கான்பெர்ரா,  இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.  இதையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் அவரால் விளையாட முடியாது. நடப்பு தொடரில் கொரோனாவில் சிக்கிய 3-வது இலங்கை வீரர் ஆவார். ஏற்கனவே குசல் மென்டிஸ், பினுரா பெர்னாண்டோ கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 24 வயதான ஹசரங்காவை சில தினங்களுக்கு … Read more