தனியாக பாகிஸ்தான் பறக்கும் ரோஹித் சர்மா… இதுதான் காரணம்!

Champions Trophy 2025 Latest News Updates: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடைசியாக 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. அதற்கு பின் இந்த தொடரை கைவிடுவதாக ஐசிசி அறிவித்திருந்தது. இருப்பினும் தற்போது மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை தூசுத் தட்டி இம்முறை நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் இதனை நடத்துகிறது. சாம்பியன்ஸ் டிராபி: இதுவரை சாம்பியன்கள் இதுவரை 8 முறை சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றுள்ளது. முதலில் இந்த தொடரின் பெயர் ஐசிசி நாக்-அவுட் கோப்பை என … Read more

சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா! கடைசி போட்டி இதுதான்!

கடந்த சில வாரங்களாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா எப்போது ஓய்வை அறிவிப்பார் என்ற கேள்வி இருந்து வருகிறது, இதற்கு அவரின் சமீபத்திய பார்ம் தான் முக்கிய காரணம். இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 முடிந்தவுடன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து பிசிசிஐ-யிடம் ரோஹித் பேசி வருவதாகவும், விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ஒய்வை அறிவிப்பார் என்றும், ஐபிஎல் தொடரில் … Read more

சாம்பியன்ஸ் டிராபி: இர்பான் பதான், கவாஸ்கர் இணைந்து தேர்வு செய்த இந்திய அணி

மும்பை, 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம், நியூசிலாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. 19-ந் தேதி கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- … Read more

ஆக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் 5-வது வெற்றி பெற்று அசத்தல்

ரூர்கேலா, 8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது ஆக்கி இந்தியா லீக் தொடர் ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி, டெல்லி எஸ்.ஜி. பைபர்சை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது. 6-வது லீக் ஆட்டத்தில் ஆடி 5-வது வெற்றியை சுவைத்த தமிழ்நாடு அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த … Read more

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: கடைசி போட்டியில் இந்தியா-அயர்லாந்து அணிகள் நாளை மோதல்

ராஜ்கோட், அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 116 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இந்தியா-அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் … Read more

வீரர்களின் மனைவிகளுக்கு செக் வைத்த பிசிசிஐ… கடுமையான கட்டுப்பாடுகள்!

India National Cricket Team, BCCI: 2024-25 டெஸ்ட் சீசன் இந்திய அணிக்கு நினைத்தபடி சரியாக அமையவில்லை எனலாம். வங்கதேசத்திடம் மட்டும் ஆறுதலாக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி (Team India), நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணிலேயே டெஸ்டில் வைட்வாஷ் ஆனது, கடந்த 6-7 வருடங்களாக  தக்கவைத்து வந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையை (Border Gavaskar Trophy) ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்தது என தோல்விக்கு மேல் தோல்வியே இந்திய அணிக்கு கிடைத்தது. இதனால், இந்திய … Read more

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; 2வது சுற்றுக்கு முன்னேறினார் கார்லஸ் அல்காரஸ்

மெல்போர்ன், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து கொண்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் ஷெவ்சென்கோ உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய அல்காரஸ் 6-1, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஷெவ்சென்கோவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். தினத்தந்தி Related Tags : ஆஸ்திரேலிய … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: நார்த் ஈஸ்ட் யுனைடெட் – கோவா அணிகள் இன்று மோதல்

கவுகாத்தி, 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இதில் இரவு 7.30 மணிக்கு கவுகாத்தியில் தொடங்கும் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி – எப்.சி.கோவா அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி 5வது இடத்திலும், எப்.சி.கோவா 4வது … Read more

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் பிசிசிஐ ஒப்பந்தம் நீக்கப்பட வாய்ப்பு! ஏன் தெரியுமா?

கேப்டன் ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடர் ஆகியவற்றை இழந்துள்ளது இந்திய அணி. இந்திய அணியின் வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடாதது தோல்விக்கு காரணம் என்று தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்திருந்தார். மேலும் சர்வதேச போட்டிகள் இல்லாத சமயத்தில் அனைத்து வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட்டில் … Read more

Champions Trophy: இந்திய அணியின் 2 பிரச்னைகள்… யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

Champions Trophy 2025, Team India: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அணிகள் தங்களின் ஸ்குவாடை அறிவிக்க ஜன. 12ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், பிசிசிஐ நடந்து முடிந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையை காரணம் காட்டி இன்னும் ஒரு வார காலம் ஐசிசியிடம் நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மொத்தம் 8 அணிகள் விளையாடும் நிலையில், தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியும் இந்திய அணியும் மட்டுமே இன்னும் தங்களது ஸ்குவாடை அறிவிக்கவில்லை. … Read more