உதவித்தொகையை உயர்த்த கோரி மாற்றுத் திறனாளிகள் மறியல் போராட்டம்: சென்னையில் 662 பேர் கைது

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தக் கோரி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர். அண்டை மாநிலமான ஆந்திராவில் வழங்குவதைப்போல, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், புதியதாக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும், தகுதியான அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, … Read more

ஞானசேகரனுக்கு என்ன ஆச்சு? அதிகாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

பாலியல் வழக்கில் சிறையில் உள்ள ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாலை வலிப்பு வந்ததால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணாநகர் சிறுமியின் வாக்குமூல வீடியோ பொதுவெளியில் வெளியானது எப்படி? – சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க நீதிபதிகள் உத்தரவு

சென்னை: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அண்ணா நகர் சிறுமி வாக்குமூலம் அளித்த வீடியோ பொதுவெளியில் வெளியானது எப்படி என்பது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சென்னை அண்ணா நகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது குறித்து புகார் அளிக்கச் சென்ற அந்த சிறுமியின் பெற்றோரை பெண் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸார் தாக்கிய சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐ … Read more

யுஜிசி வரைவு; மாநில உரிமைகளுக்காக ஓரணியில் திரள்வது காலத்தின் கட்டாயம்: அமைச்சர் கோவி.செழியன்

யுஜிசி வரைவு அறிக்கைக்கு எதிராக தமிழகத்தைத் தொடர்ந்து கேரள அரசும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை சுட்டிக்காட்டி, மாநில உரிமைகளுக்காக ஓரணியில் திரள்வது காலத்தின் கட்டாயம் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.வி.செழியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களாட்சியையும் மாநிலங்களின் கல்வி சுயாட்சியையும் சிதைக்க நினைக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒன்றாக நின்று பேராட வேண்டிய நேரமிது. மாநில அரசு இதுவரை உருவாக்கி வளர்த்து வைத்துள்ள பல்கலைக்கழகங்களை யுஜிசி வாயிலாகக் கைப்பற்றி, … Read more

ஆன்லைன் பதிவுக்கு வரும் பத்திரங்களை உரிய காரணமின்றி திருப்பியனுப்பக் கூடாது: பதிவுத்துறை அறிவுறுத்தல்

ஆன்லைன் வாயிலாக பதிவுக்கு வரும் பத்திரங்களை உரிய காரணம் இல்லாமல் திருப்பியனுப்பக் கூடாது என்று சார்பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆன்லைன் வழியாக சமர்ப்பிக்கப்படும் பத்திரங்களை, தேவையற்ற காரணங்களை தெரிவித்து திருப்பியனுப்பும் போக்கு நிலவுவது கவனத்துக்கு வந்துள்ளது. இந்நிலை மிகவும் கண்டிக்கத்தக்கது. விதிகள் படி, ஆதார் வழி ஆவணதாரர் அடையாளம் காணப்படும் நிலையிலேயே, பத்திரம் எழுதிக் கொடுத்ததை ஒப்புக் கொண்டதாகக் கருத வேண்டும். ஆதார் வழி … Read more

தமிழக அரசின் 22% ஈரப்பத நெல் கொள்முதல் கோரிக்கை: மத்திய குழு விரைவில் தமிழகம் வருகை

டெல்டா மாவட்டங்களில் 22 சதவீதம் ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்ய அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய நிலையில், மத்திய குழுவினர் ஆய்வுக்காக தமிழகம் வரவுள்ளனர். வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு காலதாமதமாகத் தொடங்கிய நிலையில், தொடர்ச்சியாக பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக விட்டு விட்டு கனமழை பெய்துள்ளது. இதனால், அறுவடை செய்யும் நெல் மணிகள் அதிக ஈரப்பதத்தில் உள்ளன. மேக மூட்டம், மழைப்பொழிவும் உள்ளதால், விவசாயிகள் நெல்லை உலர … Read more

“மாட்டுக்கறி சாப்பிடுகின்றனர்; ஆனால், கோமியம் என்றால் எதிர்க்கின்றனர்” – தமிழிசை ஆதங்கம்

ஆயுர்வேதத்தில் மாட்டுக் கோமியத்தை ‘அமிர்த நீர்’ என குறிப்பிடுவதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார். சென்னையில் நேற்று நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஜெயிலுக்கு அமைச்சர், பெயிலில் வந்த அமைச்சர் இருந்தாலும் ரயிலுக்கு அமைச்சர் இருப்பதில்லை. தமிழகத்துக்கென ரயில்வே அமைச்சர் இருந்தால் மேலும் ரயில் திட்டங்களை கொண்டு வர முடியும். கிழக்கு கடற்கரை சாலையில் ரயில் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டால் பசுமை சூழலுக்கு பாதிப்பு வருமா என்பது தொடர்பான … Read more

அண்ணா நகர் சிறுமியின் வாக்குமூல வீடியோ வெளியானது எப்படி? – விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான அண்ணாநகர் சிறுமியின் வாக்குமூல வீடியோ பொதுவெளியில் வெளியானது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளானது குறித்து புகார் அளிக்கச் சென்ற அந்த சிறுமியின் பெற்றோரை பெண் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸார் தாக்கிய சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச … Read more

நெல்லையில் பிப்.6, 7-ல் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு: ரூ.6,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 6 மற்றும் 7-ம் தேதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது ரூ.6.18 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு பயணத்தின்போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அந்த வகையில் வரும் 6 மற்றும் 7-ம் தேதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் கள … Read more

பரந்தூர் ஏர்போர்ட்.. மக்கள் பாதிக்காத வகையில் அமைக்கப்படும்.. தமிழக அரசு விளக்கம்!

பரந்தூர் விமான நிலையம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதியாகத் தேவைப்படும் ஒன்றாக இருக்கும் காரணத்தினால் மக்கள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என தமிழக அரசு கூறியுள்ளது.