பாஜக நிர்வாகி கைது: சாலை மறியலில் தொண்டர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளு – பழனியில் பரபரப்பு

Tamil Nadu News: மதுபான கூடத்திற்குள் அத்துமீறி நுழைந்தது, பணியாளர்களை தாக்கியது உள்பட ஐந்து பிரிவுகளின் கீழ் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் மீது பழனி நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு 

விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இருந்த கே. பாலகிருஷ்ணின் பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து சண்முகம் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.3) தொடங்கி நடைபெற்றது. அன்றிலிருந்து இன்று வரை மூன்று நாட்கள் மாநாடு நடைபெற்றது. முதல்நாளில் செந்தொண்டர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இரண்டாவது நாளான சனிக்கிழமை மாநாட்டு பிரதிநிதிகளின் விவாதம் நடைபெற்றது. மூன்றாது … Read more

சில நிமிடங்களில் முடிந்த பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு – பொதுமக்கள் ஏமாற்றம்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல அறிவிக்கப்பட்ட 4 சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய நிலையில், முக்கிய நாள்களில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்தது. இதனால், பயணிகள் ஏமாற்றமடைந்தனர். தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை ஜன.14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஜன.15-ம் தேதி மாட்டுப் பொங்கல், ஜன.16-ம் தேதி காணும் பொங்கல் ஆகிய பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு தினசரி … Read more

இந்து பெண்களுக்கு கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதாக குற்றம் சாட்டிய இந்து முன்னணி மாநில செயலாளர் கைது

திருநெல்வேலி: இந்து பெண்களுக்கு அவர்கள் சம்மதம் இன்றி கருத்தடை சாதனம் பொருத்தும் செயல் இந்துக்களின் மக்கள் தொகையை கருவறுக்கும் செயலாகும் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த, இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி டவுனைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுக்கு அவரது குடும்பத்தினரின் சம்மதம் எதுவும் பெறாமல் கருத்தடை சாதனமான காப்பர் டி வைத்துள்ளனர் என்று இந்து முன்னணி … Read more

'கிறிஸ்துவர்கள் ஓட்டு விஜய்க்கு போகக் கூடாது என உதயநிதி இதை செய்கிறார்' – ஹெச். ராஜா பளீர்

Tamilnadu News Updates: குறிப்பிட்ட சமுதாயத்தினரை பாதுகாக்க பிசிஆர் சட்டம் உள்ளதுபோல் பிராமண சமுதாயத்திற்கும் பாதுகாப்பு சட்டம் தேவை என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா மதுரையில் பேசி உள்ளார்.

தமிழக அரசின் விருதுகளை பெற உள்ள ஆளுமைகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

சென்னை: சமூகம், பொருளாதாரம், அரசியல், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலை, வரலாறு என பல்வேறு தளங்களில் தங்களின் தனித்த முத்திரையை பதித்து தமிழக அரசின் விருது பெறுபவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொன்மை வரலாற்றை கொண்டியிங்கும் தமிழ் சமூகத்தின் மொழியின் சீரிளமையின் திறனை, மொழி ஆராய்ச்சி உலகம் வியந்து பார்த்து வருகிறது. ”யாமறிந்த மொழிகளிலே, தமிழ் மொழி போல் … Read more

‘‘2025-ல் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்?’’: அன்புமணி கேள்வி

சென்னை: 2025-ஆம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? என்றும் அதன் விவரங்களை வெளியிடாமல் மூடி மறைப்பது ஏன்? என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2025-ஆம் ஆண்டு பிறந்து ஐந்து நாட்களுக்கு மேலாகியும் நடப்பாண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் எவ்வளவு பேர் அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் எவ்வளவு … Read more

அடுக்குமாடி குடியிருப்புகளில் செல்லப் பிராணிகளுக்கான கட்டுப்பாடுகள் ரத்து

சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகளில் செல்லப் பிராணிகளுக்கான கட்டுப்பாடுகளை ரத்து செய்து சென்னை பெருநகர கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்துவரும் 78 வயது மூதாட்டியான மனோரமா ஹிதேஷி என்பவர் சென்னை பெருநகர 16-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: எனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் வளர்த்து வருகிறேன். ஆனால் நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம், செல்லப் பிராணிகள் பொது வெளியில் மலம் கழித்தால் … Read more

எடப்பாடி பழனிசாமிக்கு விரைவில் மிகப்பெரிய பிரச்சனை வரப்போகுது – டிடிவி தினகரன்

TTV Dinakaran | எடப்பாடி பழனிசாமி கூடிய விரைவில் மிகப்பெரிய பின்விளைவுகளை சந்திக்கப்போகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

‘பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்’ – திமுக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை

சென்னை: அரசு ஊழியர், சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர், பள்ளி-கல்லூரிகளின் ஆசிரியர்கள் ஆகியோரின் கோரிக்கைகள் மீதான தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-யின் 24-வது தமிழ்நாடு மாநில மாநாடு ஜனவரி 3, 5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் ஆனந்தா திருமண மண்டபத்தில் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் … Read more