எடப்பாடி பழனிசாமிக்கு விரைவில் மிகப்பெரிய பிரச்சனை வரப்போகுது – டிடிவி தினகரன்

TTV Dinakaran | எடப்பாடி பழனிசாமி கூடிய விரைவில் மிகப்பெரிய பின்விளைவுகளை சந்திக்கப்போகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

‘பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்’ – திமுக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை

சென்னை: அரசு ஊழியர், சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர், பள்ளி-கல்லூரிகளின் ஆசிரியர்கள் ஆகியோரின் கோரிக்கைகள் மீதான தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-யின் 24-வது தமிழ்நாடு மாநில மாநாடு ஜனவரி 3, 5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் ஆனந்தா திருமண மண்டபத்தில் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் … Read more

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களை கவர்ந்த ‘சிறை சந்தை’ – என்ன ஸ்பெஷல்? 

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் விற்கப்படும் சிறை கைதிகள் தயாரித்த பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களுக்கு வழக்கறிஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் தண்டனைக் கைதிகள் தயாரிக்கும் பல்வேறு பொருட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் சிறைச் சந்தைக்கு வழக்கறிஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சிறைச் சந்தையில் கைதிகளின் கை வண்ணத்தில் உருவான நல்லெண்ணெய், … Read more

விண்வெளியில் முளைக்க தொடங்கிய காராமணி பயறு விதைகள்: பரிசோதனை வெற்றி என இஸ்ரோ அறிவிப்பு

பிஎஸ் 4 இயந்திரத்தில் கிராப்ஸ் ஆய்வுக் கருவியில் வைக்கப்பட்டிருந்த காராமணி பயறு விதைகள் வெற்றிகரமாக முளைக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரா தெரிவித்துள்ளது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பாரதிய அந்தரிஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு நிலையத்தை 2035-ம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் முதல்கட்ட விண்கலங்கள் 2028-ல் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்டத்தின்கீழ் விண்வெளியில் விண்கலன்களை … Read more

அனுபவமற்ற தொழிலாளர்கள், அளவுக்கு அதிகமான வெடிபொருள் – விருதுநகர் பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம் என்ன?

விருதுநகர்: விருதுநகர் அருகே பொம்மையாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். ஆலை உரிமையாளர்கள், மேலாளர், போர்மேன் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், 2 பேரை கைது செய்தனர். சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர், விருதுநகர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இங்கு 80 அறைகள் உள்ளன. இதில் 40 … Read more

பொங்கலுக்காக 9 நாள் விடுப்பு கிடைக்க வாய்ப்பு: ஜன.17 விடுமுறையால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜன. 17-ம் தேதி விடுமுறை விடப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜன. 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து ஜன. 15, 16, 18, 19 ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்களாகும். அதற்கு … Read more

தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: வேங்கைவயல், அண்ணா பல்கலை. வன்கொடுமை விவகாரங்களை கிளப்புகிறது விசிக

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில், வேங்கைவயல், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கான கோரிக்கைகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் நாளை (ஜன.6 திங்கள் கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். நேற்று முன்தினம் ராஜ்பவனுக்கு, பேரவைத் தலைவர் மு.அப்பாவு மற்றும் … Read more

ஃபெஞ்சல் புயல் தீவிர இயற்கை பேரிடர்: அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு

ஃபெஞ்சல் புயலை தீவிர இயற்கை பேரிடராக தமிழக அரசு அறிவித்து, அரசிதழில் வெளியிட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. நீர்வரத்து அதிகரித்து சாத்தனூர் அணையில் அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டதால், தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின. கனமழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மண் சரிவு … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான 3 பெண்களை விடுவிக்க கோரிய மனுக்களை விசாரிக்க முடியாது: நீதிமன்றம் மறுப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஞ்சலை உள்ளிட்ட 3 பெண்களை விடுவிக்கக் கோரிய மனுக்கள் மீது, தற்போதைய நிலையில் விசாரணை நடத்த முடியாது என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்பட 29 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். … Read more

அண்ணா பல்கலை. வழக்கில் சிபிஐ விசாரணை தேவை: ஆளுநரை சந்தித்த பின் தமிழிசை வலியுறுத்தல்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும்” என்றார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, பாஜக நிர்வாகிகள் ராதிகா, விஜயதாரணி, சசிகலா புஷ்பா உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் … Read more