தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: வேங்கைவயல், அண்ணா பல்கலை. வன்கொடுமை விவகாரங்களை கிளப்புகிறது விசிக

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில், வேங்கைவயல், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கான கோரிக்கைகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் நாளை (ஜன.6 திங்கள் கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். நேற்று முன்தினம் ராஜ்பவனுக்கு, பேரவைத் தலைவர் மு.அப்பாவு மற்றும் … Read more

ஃபெஞ்சல் புயல் தீவிர இயற்கை பேரிடர்: அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு

ஃபெஞ்சல் புயலை தீவிர இயற்கை பேரிடராக தமிழக அரசு அறிவித்து, அரசிதழில் வெளியிட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. நீர்வரத்து அதிகரித்து சாத்தனூர் அணையில் அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டதால், தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின. கனமழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மண் சரிவு … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான 3 பெண்களை விடுவிக்க கோரிய மனுக்களை விசாரிக்க முடியாது: நீதிமன்றம் மறுப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஞ்சலை உள்ளிட்ட 3 பெண்களை விடுவிக்கக் கோரிய மனுக்கள் மீது, தற்போதைய நிலையில் விசாரணை நடத்த முடியாது என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்பட 29 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். … Read more

அண்ணா பல்கலை. வழக்கில் சிபிஐ விசாரணை தேவை: ஆளுநரை சந்தித்த பின் தமிழிசை வலியுறுத்தல்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும்” என்றார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, பாஜக நிர்வாகிகள் ராதிகா, விஜயதாரணி, சசிகலா புஷ்பா உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் … Read more

கபிலனுக்கு பாரதியார் விருது, ரவிக்குமாருக்கு அம்பேத்கர் விருது – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: 2024ம் ஆண்டுக்கான தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருதுக்கு கவிஞர் கபிலனும், டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு து.ரவிக்குமாரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2025-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கு புலவர் மு.படிக்கராமு-வும், 2024ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதுக்கு எல்.கணேசனும், மகாகவி பாரதியார் விருதுக்கு கவிஞர் கபிலனும், பாவேந்தர் பாரதிதாசன் விருதுக்கு கவிஞர் பொன்.செல்வகணபதியும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதுக்கு … Read more

பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்துக: மார்க்சிஸ்ட் மாநாட்டு தீர்மானங்கள்

விழுப்புரம்: ‘பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்துக. தமிழக குழந்தைகள் நல ஆணையத்துக்கு தலைவரை நியமித்திட வேண்டும்’ என்று உள்ளிட்ட தீர்மானங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த மூன்று நாள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள்: > வளங்கள் – வாழ்வாதாரங்களை பாதுகாப்போம். மதவெறியை வீழ்த்தி முற்போக்கு விழுமியங்களை முன்னெடுப்போம். பேரிடராக வளர்ந்து கொண்டிருக்கும் பாஜக மற்றும் … Read more

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: போர்மேன், மேற்பார்வையாளர் கைது

விருதுநகர்: விருதுநகர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமானதில் 6 பேர் உயிரிழந்தனர்.விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் காவல் துறையினர், ஆலையின் போர்மேன் மற்றும் மேற்பார்வையாளரை கைது செய்துள்ளனர். விருதுநகர் அருகே பொம்மையாபுரம் சாய்நாத் பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து வருவாய்த் துறையினர் நடத்திய விசாரணையில், சாய்நாத் பட்டாசு ஆலை உள்ள இடம் … Read more

அண்ணா பல்கலை., வன்கொடுமை வழக்கு: தமிழக காவல்துறை கொடுத்த முக்கிய அறிவிப்பு!

Anna University Sexual Assualt Case: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னையில் சாலை வெட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சாலைகளை வெட்ட விதிக்கப்பட்ட தடையை நீக்கி மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகரப் பகுதியில் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் பணி, குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணி, பிஎஸ்என்எல் மற்றும் பல்வேறு தனியார் தொலைத்தொடர்பு நிறுவன கேபிள் பதிக்கும் பணிகள், மின் வாரிய கேபிள் பதிக்கும் பணிகள் போன்றவற்றில் ஏதோ ஒன்றுக்காக ஆண்டு முழுவதும் சாலையை வெட்டும் பணிகள் … Read more

வானிலை முன்னறிவிப்பு: ஜன.10-ல் டெல்டா மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜன.10-ம் தேதியன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிழக்கு திசை காற்றின் … Read more