வெளிநாடு வேலை குட் நியூஸ்…! 10ம் வகுப்பு தேர்ச்சி, சம்பளம் ரூ.78,000 – அரசு அறிவிப்பு

Job Alert | வெளிநாடு வேலை தேடுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு குட்நியூஸ் அறிவித்துள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 78,000 ரூபாய் சம்பளத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றலாம்.

முதல்வர் காப்பீட்டு திட்ட நிதி குறித்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை நிர்வாகம் ஆய்வு

சென்னை: முதல்வர் காப்பீட்டுத் திட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்த ஆய்வை துறை ரீதியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள 44 துறைகளில் மொத்தம் 3,800 படுக்கை வசதிகள் உள்ளன. தினமும் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். தினமும் சுமார் 450 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். இவை தவிர பிற மாநிலங்களிலிருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக … Read more

சகாயம் ஐஏஎஸ் எழுதிய ‘கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலை’ நூல் வெளியீடு

சென்னை: தேசத்​தின் நம்பிக்கை மாத இதழ் மற்றும் அப்பா பதிப்​பகம் சார்​பில், ஓய்வு​பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் எழுதிய ‘கடைசித் தறியில் கண்டாங்​கிச் சேலை’ நூல் வெளி​யீட்டு விழா சென்னை தேனாம்​பேட்​டை​யில் நேற்று நடைபெற்​றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் இரா.நல்​ல​கண்ணு தலைமை வகித்து, நூலை வெளி​யிட்​டார். தமிழ்​நாடு தன்னுரிமைக் கழகத் தலைவர் பழ.கருப்​பையா நூலின் முதல் பிரதி​யைப் பெற்றுக்​கொண்​டார். தொடர்ந்து, இரா.நல்​ல​கண்​ணு​வின் 100-வது பிறந்த நாளை, கேக் வெட்​டிக் கொண்​டாடினர். பின்னர், சகாயத்​தின் ஆதரவற்​றோருக்கான … Read more

துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு! சிக்கிய முக்கிய ஆவணங்கள்..

ED Raid At Durai Murugan House : மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வீட்டில் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமலாக்க துறை சோதனை நள்ளிரவு இரண்டு மணி அளவில் நிறைவு.  

சென்னை மியூசிக் அகாடமியின் 90 ஆண்டு கலை சேவை உலக அளவில் ஒரு சாதனை: கொரியா தூதரக தலைவர் புகழாரம்

சென்னை: மியூசிக் அகாடமி கடந்த 90 ஆண்டுகளாக இசை, நாட்டியம் போன்ற கலைகளுக்கு ஆற்றிவரும் சேவை உள்நாட்டு அளவிலும் உலக அளவிலும் ஒப்பற்ற ஒரு சாதனை என்று சென்னைக்கான கொரியா குடியரசு தூதரகத்தின் தலைவர் சாங் நியுன் கிம் தெரி வித்துள்ளார். மியூசிக் அகாடமியின் 18-வது ஆண்டு நாட்டிய விழா நேற்று சென்னை மயிலாப்பூர் டிடிகே அரங்கில் தொங்கியது. சென்னைக்கான கொரியா குடியரசு தூதரகத்தின் தலைவர் சாங் நியுன்கிம், விழாவை தொடங்கி வைத்து, மோகினியாட்டக் கலைஞர் டாக்டர் … Read more

சென்னை மாரத்தான்: மெட்ரோ ரயில்கள் நாளை அதிகாலை 3 மணிமுதல் இயக்கம்

சென்னை: மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு நாளை சிறப்பு மெட்ரோ ரயில்கள் அதிகாலை 3 மணிமுதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாரத்தான் ஓட்டம் நாளை (5-ம் தேதி) நடைபெறுகிறது. மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில், மெட்ரோ ரயில் சேவை நாளை அதிகாலை 3 மணிமுதல் 5 மணிவரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். அதன் பிறகு, ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின்படி மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும். மாரத்தான் பங்கேற்பாளர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட மராத்தான் ‘க்யூஆர்’ குறியீடு பதியப்பட்ட … Read more

7 மணி நேரம் காத்திருந்த அமலாக்கத் துறை அதிகாரிகள்: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடந்தது என்ன?

கதிர் ஆனந்தின் பொறியியல் கல்லூரி உட்பட 4 இடங்களிலும் நடத்தப்பட்டது. வேலூர்: காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகனின் வீடு உட்பட 4 இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு வேலூர் அருகே காட்பாடி காந்திநகரில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும் வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சிஆர்பிஎப் காவலர்கள் பாதுகாப்புடன் அமைச்சர் துரைமுருகனின் வீடு மற்றும் கதிர் … Read more

வறுமை ஒழிப்​பில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு பாராட்டி உள்ளதாக அரசு பெருமிதம்

வறுமை ஒழி்ப்பில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதற்கு மத்திய அரசு பாராட்டியுள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை சீராக நிர்வகிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் காரணமாகவும், ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைக்கு 2 கிலோ அரிசி வழங்குவது உள்ளிட்ட திட்டங்களாலும் வறுமை முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆய்வு வாயிலாக, வறுமை ஒழிப்பில் இந்தியாலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கடந்த 40 … Read more

ஸ்கரப் டைபஸ் தொற்றால் தமிழகத்தில் 5,000 பேர் பாதிப்பு

தமிழகத்தில் பரவி வரும் ஸ்கரப் டைபஸ் தொற்றால் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் 10 முதல் 20 பேர் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் ஸ்கரப் டைபஸ் தொற்று பரவி வருகிறது. அதேபோல, கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பாதிப்புகள் காணப்படுகின்றன. ஸ்கரப் டைபஸ் என்பது ஒரு வகையான பாக்டீரியா தொற்றாகும். … Read more

‘வங்கதேசத்தில் இருந்து தமிழகத்துக்கு ஊடுருவும் நபர்களை பிடிக்க தனிப் பிரிவு’ – அரசுக்கு இந்து முன்னணி வலியுறுத்தல்

சென்னை: “தமிழக அரசு உடனடியாக அந்நிய நாட்டில் இருந்து தமிழகத்தில் ஊடுருபவர்களுக்கு போலி ஆதார் கார்டு எடுத்து தரும் ஏஜெண்டுகளை கண்காணித்து உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும். தமிழகத்தின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு ஊடுருவல்காரர்களைப் பிடிக்க தமிழக அரசும், காவல் துறையும் இணைந்து சிறப்பு தனி பிரிவை அமைக்க வேண்டும்,” என்று இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கதேச இஸ்லாமியர்கள் அசாம் – திரிபுரா எல்லை … Read more