வறுமை ஒழிப்​பில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு பாராட்டி உள்ளதாக அரசு பெருமிதம்

வறுமை ஒழி்ப்பில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதற்கு மத்திய அரசு பாராட்டியுள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை சீராக நிர்வகிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் காரணமாகவும், ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைக்கு 2 கிலோ அரிசி வழங்குவது உள்ளிட்ட திட்டங்களாலும் வறுமை முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆய்வு வாயிலாக, வறுமை ஒழிப்பில் இந்தியாலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கடந்த 40 … Read more

ஸ்கரப் டைபஸ் தொற்றால் தமிழகத்தில் 5,000 பேர் பாதிப்பு

தமிழகத்தில் பரவி வரும் ஸ்கரப் டைபஸ் தொற்றால் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் 10 முதல் 20 பேர் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் ஸ்கரப் டைபஸ் தொற்று பரவி வருகிறது. அதேபோல, கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பாதிப்புகள் காணப்படுகின்றன. ஸ்கரப் டைபஸ் என்பது ஒரு வகையான பாக்டீரியா தொற்றாகும். … Read more

‘வங்கதேசத்தில் இருந்து தமிழகத்துக்கு ஊடுருவும் நபர்களை பிடிக்க தனிப் பிரிவு’ – அரசுக்கு இந்து முன்னணி வலியுறுத்தல்

சென்னை: “தமிழக அரசு உடனடியாக அந்நிய நாட்டில் இருந்து தமிழகத்தில் ஊடுருபவர்களுக்கு போலி ஆதார் கார்டு எடுத்து தரும் ஏஜெண்டுகளை கண்காணித்து உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும். தமிழகத்தின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு ஊடுருவல்காரர்களைப் பிடிக்க தமிழக அரசும், காவல் துறையும் இணைந்து சிறப்பு தனி பிரிவை அமைக்க வேண்டும்,” என்று இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கதேச இஸ்லாமியர்கள் அசாம் – திரிபுரா எல்லை … Read more

“போராடும் பெண்களை ஆட்டு மந்தையுடன் அடைத்தது திமுக அரசின் ஆணவத்தை காட்டுகிறது” – வானதி சீனிவாசன்

கோவை: ஜனநாயக முறையில் போராடுபவர்களை, அதுவும் பெண்களை ஆட்டு மந்தைகளுடன் அடைத்து வைப்பது திமுக அரசின் அதிகார ஆணவத்தை, குரூர மனப்பான்மையைக் காட்டுகிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மாணவியின் புகாரில் குறிப்பிட்டுள்ள ‘சார்’ என்பவர் யார் என்பது … Read more

‘நவீன எமர்ஜென்சி’ போக்கை முதல்வர் ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்: தமிழக பாஜக

சென்னை: “மக்கள் விரோத திமுக அரசு எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் தமிழக பாஜகவின் மீதும், மற்ற கட்சிகள் மீதும் காவல் துறையின் தொடர் அடக்கு முறையை பயன்படுத்தி மிரட்டுவது, தடுக்க நினைப்பது, வழக்கு பதிவு, கைது செய்வது என்று நவீன எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்துவது போல் செயல்படுவதை தமிழக முதல்வர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தமிழக பாஜக கூறியுள்ளது. இது குறித்து தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், “பெண் … Read more

யார் அந்த சார்? விடை தேடும் போலீஸ்..அண்ணா பல்கலைக்கழக விவகாரம் விசாரணை அப்டேட்!

Latest News Of Anna University Student Harassment Case : அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி தன்னை யாரோ ஒரு சாருடன் செல்ல கைதாகியுள்ள குணசேகரன் மிரட்டியதாக புகாரித்த நிலையில் அது தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் அந்த சார்? 

“டங்ஸ்டன் திட்டத்தை ஒருபோதும் வர விடமாட்டோம்” – மேலூர் ஆர்ப்பாட்டத்தில் வைகோ உறுதி

மதுரை: டங்ஸ்டன் திட்டத்தை ஒருபோதும் வரவிடமாட்டோம் என மேலூர் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, எட்டிமங்கலம், கூலானிபட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு ஏலம் விட்டது. இதற்கு எதிராக கிராம மக்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளும் போராட்டம் நடத்தினர். இத்திட்டத்தை முழுமையாக … Read more

காட்பாடி: 7 மணி நேர காத்திருப்புக்குப் பின் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை

வேலூர்: காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சுமார் 7 மணி நேரம் காத்திருப்புக்குப் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். பூட்டியிருந்த வீட்டின் மாற்று சாவியை பயன்படுத்தி திமுக முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திமுக பொதுச்செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு காட்பாடி காந்திநகரில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும் வேலூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு, … Read more

‘அரசியல் கருவியாகும் அமலாக்கத் துறை’ – முத்தரசன் கண்டனம்

சென்னை: “பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளான அதானியை காப்பாற்றி வரும் மோடியின் மத்திய அரசு, தமிழகத்தில் அமலாக்கத் துறை மூலம் மூத்த அமைச்சர், திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் வீட்டில் சோதனை என்ற பெயரில் தாக்குதலை நடத்தி வருகிறது. பாஜகவின் அதிகார அத்துமீறலையும், எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வன்மத்தையும் வன்மையாக கண்டிக்கிறேன்.” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் மிகப்பெரும் பன்னாட்டு குழும நிறுவனங்களில் ஒன்றான அதானி … Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் போது அதிமுக என்ன செய்தது? திமுக அமைச்சர் கேள்வி!

பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து கடந்த ஆட்சியில் நாங்கள் போராட்டம் செய்த பொழுது அதிமுகவினர் என்ன நடவடிக்கை எடுத்தனர்? தொழில் நிர்வாக துறை அமைச்சர் தா மோ அன்பரசன் கேள்வி.