“டங்ஸ்டன் திட்டத்தை ஒருபோதும் வர விடமாட்டோம்” – மேலூர் ஆர்ப்பாட்டத்தில் வைகோ உறுதி

மதுரை: டங்ஸ்டன் திட்டத்தை ஒருபோதும் வரவிடமாட்டோம் என மேலூர் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, எட்டிமங்கலம், கூலானிபட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு ஏலம் விட்டது. இதற்கு எதிராக கிராம மக்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளும் போராட்டம் நடத்தினர். இத்திட்டத்தை முழுமையாக … Read more

காட்பாடி: 7 மணி நேர காத்திருப்புக்குப் பின் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை

வேலூர்: காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சுமார் 7 மணி நேரம் காத்திருப்புக்குப் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். பூட்டியிருந்த வீட்டின் மாற்று சாவியை பயன்படுத்தி திமுக முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திமுக பொதுச்செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு காட்பாடி காந்திநகரில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும் வேலூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு, … Read more

‘அரசியல் கருவியாகும் அமலாக்கத் துறை’ – முத்தரசன் கண்டனம்

சென்னை: “பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளான அதானியை காப்பாற்றி வரும் மோடியின் மத்திய அரசு, தமிழகத்தில் அமலாக்கத் துறை மூலம் மூத்த அமைச்சர், திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் வீட்டில் சோதனை என்ற பெயரில் தாக்குதலை நடத்தி வருகிறது. பாஜகவின் அதிகார அத்துமீறலையும், எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வன்மத்தையும் வன்மையாக கண்டிக்கிறேன்.” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் மிகப்பெரும் பன்னாட்டு குழும நிறுவனங்களில் ஒன்றான அதானி … Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் போது அதிமுக என்ன செய்தது? திமுக அமைச்சர் கேள்வி!

பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து கடந்த ஆட்சியில் நாங்கள் போராட்டம் செய்த பொழுது அதிமுகவினர் என்ன நடவடிக்கை எடுத்தனர்? தொழில் நிர்வாக துறை அமைச்சர் தா மோ அன்பரசன் கேள்வி.

ஆடுகளை அடைக்கும் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட குஷ்பு, பாஜகவினர்: மதுரையில் பரபரப்பு

மதுரை: மதுரையில் தடையை மீறி நீதி யாத்திரை நடத்த முயன்று கைதான நடிகை குஷ்பு மற்றும் பாஜகவினர் ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக மகளிரணி சார்பில் மதுரை செல்லத்தம்மன் கோயில் முன்பு நீதி யாத்திரை தொடக்க நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இந்த யாத்திரைக்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி பாஜகவினர் நீதி யாத்திரையை தொடங்கினர். இதையடுத்து பாஜக தேசிய செயற்குழு … Read more

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 கிடைக்குமா? சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!

Tamil Nadu Latest News: பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்கத் தொகை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

அமலாக்கத் துறை சோதனைக்கு பாஜக எப்படி காரணமாக முடியும்? – கே.பி.ராமலிங்கம் கேள்வி

தருமபுரி: “அமைச்சர் துரைமுருகன் வீடுகளில் நடைபெறும் அமலாக்கத் துறை சோதனைக்கு பாஜக எப்படி காரணமாகும். துறை சார்ந்த அதிகாரிகள் நியாயமான நடவடிக்கைகளைத் தான் மேற்கொள்கின்றனர். நடவடிக்கைக்கு உள்ளாகும் திமுக-வினரில் சிலர், பின்னர் நீதிமன்றம் சென்று விடுதலை ஆகின்றனர். நடவடிக்கைகளின் பின்னணியில் பாஜக இருப்பதாகக் கொண்டால், எப்படி அவர்கள் விடுதலையாக முடியும்,” என தருமபுரியில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கேள்வி எழுப்பினார். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா மணி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள பாரத … Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை! ஏன் தெரியுமா?

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பல அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் உறைபனி: கருகும் பயிர்கள்; விவசாயிகள் கவலை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலை உறைய வைக்கும் உறை பனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், விவசாய நிலங்களில் பனிப்பொழிவால் செடிகள் கருகி வருகின்றன. அதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வழக்கமாக டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைப் பனி காலமாக இருக்கும். இம்முறை டிசம்பர் மாதம் பரவலாக மழை பெய்ததால் உறை பனி குறைந்து அடர் பனிமூட்டம் நிலவியது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை வெகுவாக குறைந்து கடும் குளிர் … Read more

வேலூரில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

வேலூர்: வேலூரில் தமிழக நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று (வெள்ளிக்கிழமை) சோதனை நடத்தி வருகின்றனர். காட்பாடி காந்திநகரில் உள்ள அமைச்சரின் வீடு, மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகம், அமைச்சரின் நம்பிக்கைக்குரிய பூஞ்சோலை சீனிவாசன் அவரது உறவினர் வீடு உள்பட 4 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. அமைச்சர் துரைமுருகனும், எம்.பி. கதிர் ஆனந்தும் இப்போது வேலூர் வீட்டில் இல்லாததால் அதிகாரிகள் வெளியில் காத்திருக்கின்றனர். சோதனையின் பின்னணி … Read more