கொடைக்கானலில் உறைபனி: கருகும் பயிர்கள்; விவசாயிகள் கவலை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலை உறைய வைக்கும் உறை பனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், விவசாய நிலங்களில் பனிப்பொழிவால் செடிகள் கருகி வருகின்றன. அதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வழக்கமாக டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைப் பனி காலமாக இருக்கும். இம்முறை டிசம்பர் மாதம் பரவலாக மழை பெய்ததால் உறை பனி குறைந்து அடர் பனிமூட்டம் நிலவியது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை வெகுவாக குறைந்து கடும் குளிர் … Read more

வேலூரில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

வேலூர்: வேலூரில் தமிழக நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று (வெள்ளிக்கிழமை) சோதனை நடத்தி வருகின்றனர். காட்பாடி காந்திநகரில் உள்ள அமைச்சரின் வீடு, மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகம், அமைச்சரின் நம்பிக்கைக்குரிய பூஞ்சோலை சீனிவாசன் அவரது உறவினர் வீடு உள்பட 4 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. அமைச்சர் துரைமுருகனும், எம்.பி. கதிர் ஆனந்தும் இப்போது வேலூர் வீட்டில் இல்லாததால் அதிகாரிகள் வெளியில் காத்திருக்கின்றனர். சோதனையின் பின்னணி … Read more

தமிழ்நாட்டில் ஒரு லட்சம் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிப்பு – ஏன் தெரியுமா

Ration Card | தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

குற்ற சம்பவங்களை குறைத்து காட்ட பொதுமக்கள் புகார்கள் மீது போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்வதில்லை: அண்ணாமலை

சென்னை: தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கவில்லை என்பதை காட்ட பொதுமக்களின் புகார்கள் மீது போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுக்கிறார்கள் என அண்ணாமலை தெரிவித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் அனுமதி பூங்காவாக திகழ்வதாகச் சொல்கிறார். ஆனால், தேசிய குற்ற ஆவணகாப்பகத்தின் 2022-ம் ஆண்டு குற்ற தரவுகள் அறிக்கையில், 2021-ம் ஆண்டை காட்டிலும் தமிழகத்தில் 2022-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 8.29 சதவீதம் அதிகரித்துள்ளன. குறிப்பாக, பாலியல் … Read more

தகவல் தொழில்​நுட்பம் மூலம் விவசாய உற்பத்தி மேம்பாடு: மத்திய வேளாண் அமைச்​சகத்​துடன் சென்னை ஐஐடி ஒப்பந்தம்

சென்னை: தகவல் தொழில்​நுட்ப வசதி மூலம் விவசாய உற்பத்​தியை மேம்​படுத்​தும் புதிய திட்​டத்தை செயல்​படுத்துவது தொடர்பாக மத்திய வேளாண் அமைச்​சகத்​துடன் சென்னை ஐஐடி புரிந்​துணர்வு ஒப்பந்தம் செய்​துள்ளது. இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பு: தகவல் தொழில்​நுட்ப வசதிகள் மூலம் வேளாண் உற்பத்தி, வேளாண் விரிவாக்க முறைகளை மேம்​படுத்​தும் நோக்​கில் ‘விஸ்​டார்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு சோதனை அடிப்​படை​யில் செயல்​படுத்த உள்ளது. இந்த திட்​டத்தை சிறப்பாக நடைமுறைப்​படுத்துவது தொடர்பாக மத்திய வேளாண் மற்றும் … Read more

‘ஏ.ஐ’ தொழில்நுட்ப உதவியுடன் தமிழ் மொழி மேம்பாடு: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

மத்திய அரசின் ‘பாஷினி’ திட்டத்துடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன் தமிழ் மொழியின் பயன்பாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள மொழிகளின் பயன்பாட்டை மேம்படுத்த உதவும் தொழில்நுட்ப கருவிகள், செயலிகள், மென்பொருட்களை உருவாக்க ‘பாஷினி’ என்ற திட்டத்தை மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, வாராணசியில் நடைபெற்ற ‘காசி தமிழ் சங்கமம்-2’ நிகழ்ச்சியில், ‘பாஷினி’ செயலி மூலம் … Read more

ஜனவரி 8-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நெல்லை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றின் நிலவும் வேக மாறுபாடு காரணமாக, … Read more

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; ஸ்பிரே, அலாரம் கருவியை வைத்துக்கொள்ள வேண்டும்: இபிஎஸ் அறிவுரை

திமுக ஆட்சியில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே வெளியில் செல்லும்போது தற்காப்புக்காக ஸ்பிரே, அலாரம் கருவி உடன் வைத்திருக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கைது செய்யப்பட்டவர், திமுக நிர்வாகி. அவருடன் பேசிய ‘அந்த சார் யார்?’ என்பதை இதுவரை இந்த ஆட்சியாளர்கள் கண்டுபிடிக்கவில்லை. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அனைவரையும் … Read more

ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது: எதிர்கட்சித் தலைவர்கள் கண்டனம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி கைது செய்யப்பட்டார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், அந்த மாணவிக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும் பாமக மகளிரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. எனவே, தடையை மீறி போராட்டம் நடத்த பாமகவினர் … Read more

புதுச்சேரியில் பாஜக அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் முயற்சி தோல்வி!

புதுச்சேரி: பாஜக அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் புதுச்சேரி வந்தார். அதிருப்தி எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவி கேட்டு போர்கொடி தூக்கினர். அதில் எதிர்ப்பும் கிளம்பியது. இதனால் சமாதான முயற்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், முதல்வருடன் திடீர் சந்திப்பு நடந்தபோது எம்எல்ஏக்கள் செயல்பாட்டில் தனது நிலைப்பாட்டை ரங்கசாமி தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர், முதல்வர் ரங்கசாமி இக்கூட்டணிக்கு தலைமை வகிக்கிறார். … Read more