திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; ஸ்பிரே, அலாரம் கருவியை வைத்துக்கொள்ள வேண்டும்: இபிஎஸ் அறிவுரை

திமுக ஆட்சியில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே வெளியில் செல்லும்போது தற்காப்புக்காக ஸ்பிரே, அலாரம் கருவி உடன் வைத்திருக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கைது செய்யப்பட்டவர், திமுக நிர்வாகி. அவருடன் பேசிய ‘அந்த சார் யார்?’ என்பதை இதுவரை இந்த ஆட்சியாளர்கள் கண்டுபிடிக்கவில்லை. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அனைவரையும் … Read more

ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது: எதிர்கட்சித் தலைவர்கள் கண்டனம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி கைது செய்யப்பட்டார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், அந்த மாணவிக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும் பாமக மகளிரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. எனவே, தடையை மீறி போராட்டம் நடத்த பாமகவினர் … Read more

புதுச்சேரியில் பாஜக அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் முயற்சி தோல்வி!

புதுச்சேரி: பாஜக அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் புதுச்சேரி வந்தார். அதிருப்தி எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவி கேட்டு போர்கொடி தூக்கினர். அதில் எதிர்ப்பும் கிளம்பியது. இதனால் சமாதான முயற்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், முதல்வருடன் திடீர் சந்திப்பு நடந்தபோது எம்எல்ஏக்கள் செயல்பாட்டில் தனது நிலைப்பாட்டை ரங்கசாமி தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர், முதல்வர் ரங்கசாமி இக்கூட்டணிக்கு தலைமை வகிக்கிறார். … Read more

‘தமிழக அரசின் நிலைப்பாடு பாரபட்சமானது’ – பொங்கல் போனஸ் அறிவிப்புக்கு அரசு ஊழியர்கள் சங்கம் கண்டனம்

மதுரை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அறிவித்த போனஸ் ஏமாற்றம் தரும் அறிவிப்பாக உள்ளது என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் சு.ஜெயராஜ ராஜேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘சி’ மற்றும் ‘ டி’ பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் கருணைத் தொகையும், தொகுப்பூதியம், சிறப்பு கால முறை சம்பளம் பெறும் பணியாளர்கள் மற்றும் … Read more

“மாநில மகளிர் ஆணையம் செல்லாதது ஏன்?” – அண்ணா பல்கலை. விவகாரத்தில் குஷ்பு கேள்வி

சென்னை: “தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் விசாரணைக்கு சென்றபோது, அவர்களுடன் மாநில மகளிர் ஆணையம் ஏன் செல்லவில்லை? ‘யார் அந்த சார்’ என்பதற்கும் தற்போதுவரை பதில் இல்லை. கடுமையான தண்டனைகள் கொடுக்காதவரை நமது சமுதாயத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் நடந்து கொண்டுதான் இருக்கும்,” என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “அண்ணா பல்கலைக்கழக சம்பவத்துக்குப் பிறகாவது … Read more

ஜன.14 முதல் 17 வரை ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ | நிகழ்விட விவரம்

சென்னை: சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிகளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜன.13 அன்று தொடங்கி வைக்கிறார். ஜன.14 முதல் ஜன.17 வரை நான்கு நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 18 இடங்களில் சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னையில், தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் நாட்களில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா என்ற பிரம்மாண்ட … Read more

2026 விக்கிரவாண்டியா? விருதாச்சலமா? விஜய்யின் V செண்டிமெண்ட் வர்க்-அவுட் ஆகுமா?

TVK Vijay V Sentiment : ஒவ்வொரு கட்சித் தலைவரும் அவருக்கு ஏற்ற தொகுதி எது என ஆய்வு செய்து அதில்தான் போட்டியிடுவார்கள். அதன்படி முன்னாள் மற்றும் இந்நாள் தலைவர்கள் பலரும் தொடர்ந்து ஒரே தொகுதியில் போட்டியிட்டு வருகின்றனர்.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்குவதற்காக 163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2023-2024-ஆம் ஆண்டுக்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம், ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட163.81 கோடி ரூபாய் … Read more

Pongal Bonus | அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்த முதலமைச்சர்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Pongal Bonus Latest News: ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட உத்தரவு.

திசாநாயக்க சொன்ன பிறகும் தீர்வு கிடைக்கலையே! – தொடரும் கைதுகளால் துவளும் மீனவர்கள்

டிசம்பர் 15-ல் அரசு முறை பயணமாக இந்தியா வந்திருந்தார் இலங்கையின் புதிய அதிபர் அனுர குமார திசாநாயக்க. அப்போது, “மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும்” என்று திசாநாயக்கவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். அவரும், “இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ள மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர மற்றும் நிலையான தீர்வைக்காண விரும்புகிறோம்” என்று நம்பிக்கை தெரிவித்தார். இதைக் கேட்டு தமிழக மீனவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனல், அந்த நிம்மதி 10 நாள்கூட நீடிக்கவில்லை. இலங்கை … Read more