மக்கள் நலனுக்காக பழநிக்கு யாத்திரை செல்லும் வானதி சீனிவாசன்!

கோவை: மக்கள் நலனுக்காக பழநிக்கு யாத்திரை செல்கிறார் வானதி சீனிவாசன். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு யாத்திரை செல்ல விரதம் இருந்து மாலையை அணிந்து கொண்டார் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன். பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பாஜக தேசிய மகளிர் … Read more

திருப்பரங்குன்றம் தர்காவை வேறு இடத்திற்கு மாற்றுங்கள் – ஹெச்.ராஜா அதிரடி!

இந்து மக்களுக்கு எதிராக செயல்படும் திமுக தாலிபன் அரசுக்கு 2026ல் மக்கள் பதிலளிப்பார்கள் என்று மதுரையில் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

“திருப்பரங்குன்றத்தில் அயோத்தி யுத்தம்…” – பழங்காநத்தம் ஆர்ப்பாட்டத்தில் ஹெச்.ராஜா பேச்சு

மதுரை: “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இந்து மக்களுக்கு எதிரான நிர்வாகம் நடைபெறுகிறது” என திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டினார். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க கோரி மதுரை பழங்காநத்தத்தில் இந்து முன்னணி சார்பில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மாநிலச் செயலாளர் சேவகன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டச் செயலாளர் அரசப்பாண்டியன் வரவேற்றார். இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியது: “தமிழகத்தில் … Read more

விண்வெளி பூங்காவுக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு: உடன்குடியில் போராடிய 200 பேர் கைது  

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் விண்வெளி பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து உடன்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை போலீஸார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அருகே தமிழ்நாடு தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை (டிட்கோ) சார்பில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ஆதியாகுறிச்சி, மாதவன் குறிச்சி, வெங்கட் ராமானுஜபுரம், … Read more

போலி ஆவணம் தயாரித்து கடன் வழங்கி வங்கி அதிகாரிகள்! நூதன முறையில் மோசடி!

நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு விசாரணையை மீண்டும் துவக்கியுள்ள நிலையில், வழக்கை போலீசார் சரியான முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேசவ பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த ஐகோர்ட் அனுமதி – நிபந்தனை என்னென்ன?

மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலான ஒரு மணி நேரம் மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொள்ள அனுமதியளித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் வெறுப்பைத் தூண்டும் முழக்கங்களைத் தவிர்க்கவும், ஆர்ப்பாட்டம் முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளையும் உயர் நீதிமன்றம் விதித்து உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. … Read more

டங்ஸ்டன் விவகாரத்தில் தமிழக மக்களின் தூக்கத்தை கெடுத்தது மத்திய அரசு: எம்.பி சு.வெங்கடேசன் பேச்சு

புதுடெல்லி: மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாத்தில் பேசிய, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், டங்கஸ்டன் விவகாரத்தில் தமிழக மக்களின் தூக்கத்தை கெடுத்தது மத்திய அரசு என்று குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்தில் மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதத்தில் எம்.பி சு.வெங்கடேசன் பேசியதாவது: “மத்திய அரசின் டங்ஸ்டன் சுரங்க சதித் திட்டத்தை முறியடித்த பெருமையோடு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அவையிலே நின்று கொண்டிருக்கிறோம். தமிழக முதல்வர் தனித்தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டுவந்து … Read more

இந்து அமைப்புகள் போராட்ட அறிவிப்பு: 3 அடுக்கு பாதுகாப்பால் வெறிச்சோடிய திருப்பரங்குன்றம் 

மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தடையை மீறி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதனால் அப்பகுதியில் சட்டம் , ஒழுங்கை பாதுகாக்க 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் 2300-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் விசுவநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா உள்ளது. கோயில், தர்காவுக்கு பக்தர்கள், இஸ்லாமியர்கள், பொதுக்கள் சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்ட … Read more

இனி இவர்களும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசு அறிவிப்பு!

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு முன்பு விண்ணப்பித்து அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு தற்போது மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: மதுரை புறப்பட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் கைது

திருப்பூர்: திருப்பரங்குன்றம் செல்வதற்காக தனது அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுடன் புறப்பட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி தொண்டர்கள் திடீரென தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தின் போது இந்து முன்னணி தொண்டர் ஒருவர் திடீரென பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம் தொடர்பாக இன்றைய தினம் திருப்பரங்குன்றத்தில் … Read more