மியூசிக் அகாடமியின் விருது வழங்கும் விழா: இசையால் மெய்மறந்த இன்பத்தை பெறுகிறோம் – பேராசிரியர் டேவிட் ஷுல்மேன்

சென்னை: இசை​யால் மெய்​மறந்த இன்பத்​தைப் பெறுகிறோம் என்று மியூசிக் அகாட​மி​யின் 98-வது விருது வழங்​கும் விழா​வில், பேராசிரியர் டேவிட் ஷுல்​மேன் தெரி​வித்​துள்ளார். சென்னை மியூசிக் அகாட​மி​யின் 98-வது விருது வழங்​கும் விழா நேற்று மயிலாப்​பூர் டிடிகே அரங்​கில் நடைபெற்​றது. இதில் சங்கீத கலாநிதி விருதை டி.எம்​.கிருஷ்ணாவுக்​கும், சங்கீத கலா ஆச்சார்யா விருதை மிருங்க வித்​வான் பேராசிரியர் பாரசாலா ரவி, விதூஷி கீதா ராஜா ஆகியோ​ருக்​கும், டி.டி.கே.​விருதை திரு​வை​யாறு சகோதரர்​களான பாகவதர்கள் எஸ்.நரசிம்​மன், எஸ்.வெங்​கடேசன், வித்​வான் ஹெச்​.கே.நரசிம்​ம மூர்த்தி … Read more

500 அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுக்க முயற்சி: தமிழக அரசுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்

சென்னை: 500 அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: அடுத்த கல்வியாண்டில் (2025-26) 500 அரசு பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது … Read more

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வேளாங்கண்ணி தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு

நாகப்பட்டினம்: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் 2025 புத்தாண்டு விழா நேற்று முன்தினம் இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் உட்டபட பல்லாயிரக்கணக்கானோர், பேராலய வளாகத்தில் உள்ள விண்மீன் ஆலயத்தில் குவிந்தனர். பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் மறையுரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து, 2025-ம் … Read more

தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்

ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 20 பேர் தாயகம் திரும்பினர். இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க கடந்த மாதம் இந்திய வருகையின்போது, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. அதனடிப்படையில், இலங்கை நீதிமன்றங்களால் சிறை தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில், இலங்கை சிறையிலிருந்து முதல்கட்டமாக விடுதலை செய்யப்பட்ட ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த … Read more

வெம்பக்கோட்டையில் கைரேகை பதிவுடன் அல்லி மொட்டு வடிவ ஆட்டக்காய் முதன்முதலாக கண்டெடுப்பு

சிவகாசி: வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் 3-ம் கட்ட அகழாய்வில் கைரேகை பதிவுடன் கூடிய அல்லி மொட்டு வடிவிலான ஆட்டக்காய் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை வைப்பாற்றின் வடகரையில் உள்ள விஜய கரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் 2022 மார்ச்சில் தொடங்கிய முதல்கட்ட அகழாய்வில் 3,254 பொருட்கள், 2023 ஏப்ரலில் தொடங்கிய இரண்டாம் கட்ட அகழாய்வில் 4,660 பொருட்கள் மற்றும் திமிலுடைய காளை, சங்கு வளையல்கள், சூதுபவளம், வணிக முத்திரை, செப்பு நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பழங்கால … Read more

‘மாணவி பாலியல் வன்கொடுமையில் தனிநபர் ஈடுபட்டதாக கூறுவதில் சந்தேகம்’ – கார்த்தி சிதம்பரம் கருத்து

காரைக்குடி: ‘சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தனிநபர் ஈடுபட்டதாக கூறுவதில் சந்தேகம் உள்ளது’ என மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீமான், வருண்குமார் பிரச்சினையில் அரசியல் தலைவரும், ஐபிஎஸ் அதிகாரியும் பொதுவெளியில் விவாதம் செய்வது நல்லதல்ல. இதில் தலைமை செயலாளர், டிஜிபி தலையிட்டு சட்டம், நிர்வாக ரீதியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஒரே நாடு; ஒரே தேர்தல் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு விரோதமானது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு … Read more

“தமிழகத்தில் பாஜகவை வர விடமாட்டேன்” – வைகோ சூளுரை

சென்னை: “நான் உயிரோடு இருக்கும் வரை திமுக ஆட்சியை கவிழ்க்க விடமாட்டேன். தமிழகத்தில் பாஜகவை வர விடமாட்டேன்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னை – எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஆங்கில புத்தாண்டில் புதிய எழுச்சியுடன் மதிமுக தன்னுடைய கட்சி பணிகளை தொடங்கியுள்ளது. பிப்ரவரி மாதம் மண்டல வாரியாக கட்சி கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம். ஒரே நாடு ஒரே தேர்தல் மிகவும் மோசமான திட்டமாகும். இது சாத்தியமற்றது. … Read more

“500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த கூட தமிழக அரசிடம் நிதி இல்லையா?” – அண்ணாமலை

சென்னை: “500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தக் கூட தமிழக அரசிடம் நிதி இல்லையா? மாணவ சமுதாயத்தின் கல்விக்குக் கூட, தனியார் அமைப்புகளிடம் உதவி கேட்கும் நிலையில் திமுக அரசு தள்ளப்பட்டிருக்கிறதா? அடிப்படை வசதிகளைக் கூட ஏற்படுத்தாமல், இந்த நிதியை என்ன செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு?” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “நேற்றைய தினம் நடைபெற்ற தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் துவக்க … Read more

“திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” – சசிகலா சாடல்

சென்னை: “திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் – ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. மக்கள் நிறைய பேர் பாதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்று சசிகலா குற்றம்சாட்டினார். சென்னை போயஸ் தோட்டத்தில் இல்லத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களை இன்று (ஜன.1) சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “நிதி நிலை சரியில்லை என்று நான் அப்போதே சொன்னேன். இதை இப்போதுதான் திமுக அரசு ஒப்புக்கொண்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கத் தொகை தரப்படவில்லை. திமுக ஆட்சி … Read more

'ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வையுங்கள்…' சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தியின் பேச்சு

Minister Moorthy Viral Video: ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மூர்த்தி பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.