‘சின்னசேலம் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் படுகொலை’ – காவல்துறைக்கு அன்புமணி கண்டனம்

சென்னை: சின்னசேலம் அருகே இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்து 7 நாட்களுக்கு மேலாகியும், அதற்குக் காரணமான மனித மிருகங்களைக் கைது செய்ய தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த திம்மவரத்தைச் சேர்ந்த நிர்மலா என்பவர் கடந்த டிசம்பர் 26ம் தேதி இரவு 7 … Read more

தமிழ்நாடு அரசின் குட்நியூஸ்! இளைஞர்கள் கோடீஸ்வரராகலாம்..!

Tamil Nadu Government | தமிழ்நாடு அரசு இளைஞர்கள் தொழில் முனைவோர் ஆக்கும் வகையில் கெமிக்கல் மற்றும் யூடியூப் பயிற்சிகள் வழங்க உள்ளது. இதில் கலந்து கொள்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

வரும் கல்வி ஆண்டில் புதிய ஐடிஐ தொடங்க நாளை முதல் விண்​ணப்​பிக்​கலாம்: வேலை​வாய்ப்பு பயிற்​சித்துறை அறிவிப்பு

சென்னை: வரும் கல்வி ஆண்டில் புதிய ஐடிஐ தொடங்கவும், அங்கீகாரத்தை புதுப்பிக்கவும், புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கவும் நாளை (ஜன.2) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் பி.விஷ்ணு சந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2025-2026-ம் கல்வியாண்டில் புதிய தொழிற்பயிற்சி பள்ளிகள் (ஐடிஐ) தொடங்குதல், அங்கீகாரத்தை புதுப்பித்தல், புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் … Read more

ராமநாதபுரத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் பாலியல் பலாத்காரம்!

ராமநாதபுரம் அடுத்த புத்தேந்தல் ரயில்வே தண்டவாளம் அருகே 40 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நான்கு பேரை ராமநாதபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குடவோலை முறை கல்வெட்டுகள் தொடர்பாக உத்திரமேரூர் பெருமாள் கோயிலில் ஆளுநர் ஆய்வு

காஞ்சிபுரம்: உத்திரமேரூரில் வைகுண்ட பெருமாள் கோயிலில் உள்ள குடவோலை முறை கல்வெட்டுகள் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஆய்வு செய்தார். உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள வைகுண்ட பெருமாள் கோயிலில் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள் உள்ளன. இதில் கி.பி. 920-ம் ஆண்டில் முதலாம் பராந்தக சோழன் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற குடவோலை முறை தேர்தல் குறித்தும் தகவல்கள் உள்ளன. இதனால் இந்தக் கோயில் குடவோலை முறைக் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் … Read more

சென்னை​யில் நாளை முதல் 25 புறநகர் மின் ரயில்​ நேரம் மாற்றம்

சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் பல்வேறு மார்க்கங்களில் நாளை முதல் 25 ரயில்களின் நேரம் மாற்றப்படுகிறது. 40-க்கும் மேற்பட்ட ரயில்களின் எண்கள் மாற்றப்படுகின்றன. தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை இன்று (ஜன.1) அமலுக்கு வருகிறது. சில மெயில், விரைவு ரயில்களின் நேர மாற்றம் இதில் இடம்பெறுகிறது. இதையடுத்து, பயணிகள் வசதிக்காகவும், இயக்க காரணங்களுக்காகவும் சென்னை ரயில்வே கோட்டத்தில் சில மார்க்கங்களில் புறநகர் மின்சார ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஜன.3 முதல் வீடு வீடாக டோக்கன்

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் ஜனவரி 3-ம் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன் ஜனவரி 3-ம் தேதி … Read more

தேசிய மகளிர் ஆணைய விசாரணை நிறைவு: மத்திய அரசிடம் விரைவில் அறிக்கை தாக்கல்

பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான விசாரணையை முடித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் நேற்று டெல்லி புறப்பட்டனர். விசாரணை அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதன்தொடர்ச்சியாக ஆணைய உறுப்பினர்கள் மம்தா குமாரி, பிரவீன் தீட்ஷித் ஆகியோர் நேற்று முன்தினம் அண்ணா பல்கலைக்கழகத்தில் விசாரணையை தொடங்கினர். பதிவாளர் … Read more

வன்கொடுமை புகார் குறித்த எப்ஐஆர் வெளியானது சட்டவிரோதம்: பழனிசாமி கண்டனம்

காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட வன்கொடுமை புகார் வெளியானது சட்டத்துக்கு புறம்பானது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் திமுக சம்பந்தப்பட்ட நபரை காப்பாற்றுவதற்காக அமைச்சர்கள் முயற்சிக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை கசிந்தது கண்டிக்கத்தக்கது. அந்தப் புகாரில், “அந்த சாரிடம் கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ண வேண்டும்” என்றிருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. எங்களுக்கும் … Read more

தமிழகத்தில் பொங்கல் வரை மழைக்கு வாய்ப்பு: முந்தைய ஆண்டைவிட பருவமழை அதிகம்

தமிழகத்தில் பொங்கல் வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: 2024-ல் 1,179 மிமீ மழை பதிவானது. முந்தைய ஆண்டைவிட இது 143 மி.மீ. அதிகம். தென்மேற்கு பருவமழைக் காலத்தில் 10 சதவீதமும், வடகிழக்குப் பருவமழை காலத்தில் 27 சதவீதம் அதிக மழை பதிவானது. தென்மேற்கு பருவக் காலத்தில் செப்டம்பர் மாதத்தை தவிர, இதர மாதங்களில் அதிகளவு மழை … Read more